• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
9 நண்பர்கள் இணையதளத்தை பயன்படுத்தி கருத்துகள்
  2010-09-24 14:36:18  cri எழுத்தின் அளவு:  A A A   








செப்டம்பர் 15ம் நாள் இடம் பெறும் மின்னஞ்சல் பகுதியில் 9 நண்பர்கள் இணையதளத்தை பயன்படுத்தி கருத்து தெரிவிப்பதற்கு மிக்க நன்றி.

சிறுநாயக்கன்பட்டிகே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவும் ஜப்பானும் ஆசிய கண்டத்தின் பொருளாதார நிலைமையில் முக்கியத்துவம் பெற்றிருப்பவை மட்டுமின்றி உலகப் பொருளாதார வளர்ச்சி குறியீட்டையும் நிர்ணயிக்கும் வல்லமை பெற்ற நாடுகளாகும். இவ்விரு நாடுகளின் 13-வது பொருளாதார கருத்தரங்கு ஜீலின் மாநிலத்தின் சங்சுன் நகரில் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் பொருளாதார ஒத்துழைப்பில் இவ்விரு நாடுகளும் நெருங்கி வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நலிந்துள்ள உலகப் பொருளாதார நலனுக்கு இவ்விரு நாடுகளின் வர்த்தக கூட்டாளி உறவு மென்மேலும் வலுசேர்க்கும்.

திருச்சிஅண்ணாநகர் வீ.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் சின்ச்சியாங் வாழ் முஸ்லீம்கள் பெரும் உற்சாகத்துடன் ரமலான் நோன்பு பண்டிகையை கொண்டாடியதை செய்திவிளக்கத்தில் கேட்டேன். சீனாவிலுள்ள அனைத்து இஸ்லாமியருக்கும் எனது ரமலான் வாழ்த்துக்கள். யூ சு பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு கல்லூரிப்படிப்பை தொடரமுடியாத மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களின் படிப்பினை தொடர வசதிகளை சீன அரசு ஏற்பாடு செய்துள்ளமை சிறப்பான ஏற்பாடாகும். மேலும், சீனாவில் வாகனங்கள் மற்றும் மகிழுந்துகளின் எண்ணிக்கை 20 கோடியை எட்டக்கூடும் என்றும், அதனால் எரியாற்றல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்றும் செய்திகள் மூலம் தெரிந்துகொண்டேன்.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஆதன் எனும் படைப்பாற்றல் மிக்க சமூகம் என்ற கட்டுரையின் மூலம், ஏழு ஆண்டுகளுக்கு முன் தைவானின் சாசுன் என்னும் நகரிலிருந்து புறப்பட்டு, சீனாவின் யூனான் மாநிலத்தின் மகாஞ்சே எனும் இடததிற்கு வருகை தந்த வாகேங்சு என்பவர் ஆற்றிய பணிகள் பற்றி அறிந்து மிகவும் பெருமை அடைந்தேன். மக்கள் ஏற்கனவே பயன்படுத்திய பழையப் பொருட்களை புதுப்பித்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் புதியப் பொருட்களை உருவாக்கும் பணி, பெரிதும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. இந்தப் பணியில், அவருக்கு உதவ முன்வந்து, அவரின் நண்பர்களாக பலர் மாறினர் என்ற செய்தி எனக்கு வியப்பளிக்கவில்லை. மாறாக மகிழ்ச்சியையை அளித்தது. சுவையான கட்டுரை ஒன்றை வழங்கியதற்கு நன்றி.

ஆரணி அபி அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் வடகிழக்கு பகுதியிலிருந்து வடகிழக்கு ஆசிய நாடுகளுக்கு புதிய பாதைகள் உருவாகியிருப்பதை அறிந்தேன். சீனப் பட்டுப்பாதை வரலாற்றில் சுவடு பதித்தது போல இந்த புதிய பாதைகளும் அமையும் என நினைக்கிறேன். இதன் மூலம் சீனாவுடன் மேலும் பல நாடுகள் வர்த்தக, சுற்றுலா தொடர்புகளை அதிகரிக்க முடியும். ரஷியா, வடகொரியா, ஜப்பான் போன்ற நாடுகளுடனான இந்த புதிய பாதைகள் தங்களின் சீனாவுடனான போக்குவரத்து வழிகளை அதிகரிக்க ஒரு வாய்ப்பாய் இது அமைகிறது.

விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற முதல் பாடல் மிகவும் நன்றாக இருந்தது. பாடலைக் கேட்கும்போதே கை, கால்கள் தாளம் போட வைத்தது. இந்தப் பாடலை இரவு நேரத்தில் ஓசையில்லாத இடத்தில் அதிக ஒலியுடன் கேட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இப்பாடலை தேர்வுசெய்து வழங்கிய திலகவதிக்கு பாராட்டுக்கள். இசைக்கு மொழி இல்லை என்பார்கள். இந்தப் பாடலை கேட்பதற்கு சற்று முன்புதான் கர்நாடக இசையில் இருக்கும் மோகனம் என்ற ராகம் சீன இசையிலும் உண்டு. சீன தேசிய ராகமாக மோகனராகம் உள்ளது என்பதை ஓர் இதழில் படித்தேன்.

பரசலூர்.பி.ஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

மலர்ச்சோலை நிகழ்ச்சியை கேட்டேன். திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் சோத்தோன் விழா கொண்டாடும் முறை அதன் முக்கியத்துவம், திபெத் மக்கள் கடைபிடித்துவரும் பண்பாட்டு வழக்கமுறை குறித்தும், விழா நிறைவின்போது குடிக்க தயிர் கொடுக்கும் வழக்கம் பற்றியும் சிறப்பாக விளக்கியது. சிறந்த தகவல்கள்.

மதுரை 20 என். இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் மனித வளத்தின் வளர்ச்சி பற்றிய வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டதை சீன வானொலி தமிழ் ஒலிப்பரப்பு முலம் அறிந்து கொண்டேன். அறிவியல் வளர்ச்சியை முன்னேற்றி சமுகத்தின் இணக்கத்தை துண்டும் வகையில், சோசலிச பொருளாதார அமைப்பு முறையின்படி சீன அரசு பொருளாதார அறிவியல், தொழில்நுட்பம், கல்வி முறையிலான பெரும் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு நடைமுறைக்கு வந்தபின் வெளிநாடுகளில் கல்வி பெறும் வழிமுறை விரிவாக்கப்பட்டுள்ளதும் வெள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

பெண்களின் திறனை உயர்த்துவது அவசியம் என சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. பெண்கள் கல்வியறிவு பெறுவதன் முக்கியவத்தை நன்கு உணர்த்துவதாக அது இருந்தது. கல்லாமை ஒழிப்பு நாளில் ஐநா தலைமை செயலாளர் இது தொடர்பாக குரல் கொடுத்துள்ளது மிகவும் பொறுத்தமானதாகும். உலகில் பாதியான பெண்களின் கல்வி வளர்ச்சி ஒரு நாட்டின் வளர்ச்சியின் ஆணிவேர் என்று கூறிய சீனத் தலைவர் மாவோவை இதற்கு அனைவரும் நினைவில் கொள்வது அவசியம்

உத்திரக்குடி, சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் இடம்பெறும் ஹங்கேரி அரங்கு பற்றி கூறப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உலகப் பொருட்காட்சியில் பங்கு பெற மனமகிழச் செய்துள்ளது பாராட்டுக்குரியது. அதில கலந்துகொள்ள வாய்ப்புகிடைத்த குழந்தைகளிடம் உண்மையில் நல்லதொரு தன்னம்பிக்கை உணர்வும், மனமகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகின்றோம். இந்த சிறந்த, செயற்கரிய செயலை செய்த ஹங்கேரி அரசையும், குழந்தைகளுக்கு வழிகாட்டிய ஆசிரியர்களையும் பாராட்டுகின்றோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040