• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நிலச்சரிவு ஏற்பட்டதும் மக்களின் சுயப்பாதுகாப்பு
  2010-09-24 14:40:18  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை......... வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி கடந்த 4 நிகழ்ச்சிகளில் பல தகவல்களை வழங்கினோம். பல நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்டு தமது கருத்துக்களை கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அவர்களது உற்சாகத்துக்கு நன்றியையும் பாராட்டையும் உளமார தெரிவிக்கின்றோம்.

செல்வம்.........ஆமாம். கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டுள்ளோம். குறிப்பாக ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் கோடைக் கால விடுமுறை அனுபவித்த சீன மாணவர்கள் மேற்கொண்ட சுற்றுலா அனுபவங்களை அறிந்து கொண்டுள்ளோம். இந்த நிகழ்ச்சியை வழங்குவதற்கு எங்களது உளமார்ந்த நன்றிகள்.

கலை.........மிக்க நன்றி. செல்வம் இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க நாம் இருவரும் பொறுப்பேற்க விரும்புகின்றேன்.

செல்வம்......... அழைப்பதற்கு மிக்க நன்றி. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்.

கலை.........அப்படியிருந்தால் இன்றைக்கு எது பற்றி நாம் விவாதிக்க போகின்றோம். இது தொடர்பாக உங்கள் மனதில் கருத்து எதாவது உண்டா?

செல்வம்.........ஆமாம். ஆகஸ்ட் 8ம் நாள் சீனாவின் கான்சு மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில் நிலச்சரிவு எப்படி ஏற்பட்டது பற்றி இன்றைய நிகழ்ச்சியில் நமது நேயர் நண்பர்களுக்கு விளக்கிக் கூற முடியுமா?

கலை.........தாராளமாக.

செல்வம்.........கான்சு மாநிலத்தின் சோச்சியூ மாவட்டத்தில், நிலச்சரிவு ஏற்பட்டதற்கான அடிப்படைக் காரணம் என்ன?

கலை.........காரணத்தை ஆராய்ந்தால் வரலாற்றில் சோச்சியூ அமைந்திருக்கின்ற பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பதிவு உண்டு. அங்கே வாழ்கின்ற மக்கள் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் 8ம் நாள் நிகழ்ந்த நிலச்சரிவு இச்சீற்றத்தில் ஒன்றாகும்.

செல்வம்.........அப்படியிருந்தால் மக்கள் இது பற்றி விழிப்புடன் இருக்கவில்லையா?

கலை.........ஆகஸ்ட் திங்கள் 8ம் நாளின் அதிகாலையில் நிகழ்ந்த நிலச்சரிவை மக்கள் முன்கூட்டியே கண்டறிந்து கொள்ள வில்லை. 7ம் நாளிரவு மக்கள் பகல் முழுவதும் அயாரா உழைத்த பின் இரவில் களைப்புடன் தூங்கினார்கள். அப்போது மாவட்டத்தின் ஊடாக பாய்ந்து சென்ற பைலுங் ஆற்றின் மேற்பகுதியில் மழை கடுமையாக பெய்தது. இதன் விளைவாக 97 சென்டி மீட்டர் ஆழந்த மழை நீர் 20 லட்சம் சதுர மீட்டர் நிலமண் மற்றும் கற்களுடன் இணைந்து இரண்டு பள்ளத்தாக்குகளின் வழியாக ஆற்றின் மேற்பகுதியிலிருந்து கீழ்பகுதிக்கு விரைந்து சென்றது. இந்த கடுமையான சீற்றத்தில் 300 குடும்பங்களின் வீடுகள் நிலச்சரிவில் இடிந்தன. ஆயிரத்துக்கு மேலான நகர வாசிகள் தூக்கத்துடனே நிலச்சரிவில் மூழ்கினர். நிலச்சரிவும் மலை கற்களும் பைலுங் ஆற்றை தடுத்தன. பள்ளத்தாக்குகளில் விழுந்த மழை நீர் புதிய ஏரியாக உருவாகி மாவட்ட நகருக்குப் ஆபத்தை ஏற்படுத்தியது. போக்குவரத்து, தொலைத் தொடர்பு மற்றும் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டன.

செல்வம்......... நிலச்சரிவு ஏற்பட்ட உடன், சீன நடுவண் அரசும், கான்சு மாநில அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை?

கலை.........இந்த நிலச்சரிவு ஏற்பட்ட 8ம் நாள் காலை சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் மற்றும் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் தலைமை ஏற்றிருக்கும் நடுவண் அரசு பேரிடர் நீக்க மீட்புதவியைத் துவக்க முக்கிய கட்டளையிட்டது. அன்று நண்பகல் 12:15 மணியளவில் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் விமானம் மூலம் சோச்சியூ விரைந்து சென்றடைந்தார். இதற்கிடையில் பேரிடர் நீக்க ஆணையம், உள் துறை அமைச்சகம் ஆகியவை உடனடியாக மீட்புதவி பணியை துவக்கின. இடர்காப்பு அமைச்சகம், நீர்சேமிப்பு அமைச்சகம், தேசிய நில வள ஆணையம், போக்குவரத்து அமைச்சகம், சுகாதார அமைச்சகம் முதலியவை பேரிடர் நீக்க பணியாளர்களையும் பேரிடர் நீக்க மீட்புதவி பொருட்களையும் கூட்டம் கூட்டமாக பாதிக்கப்பட்ட சோச்சியூவிற்கு அனுப்பின. 8ம் நாள் அதிகாலை 1:48 மணியளவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்சு மாநில கமிட்டியின் செயலாளர் luo haoவும் தற்காலிக மாநில தலைவர் liu wei ping கும் கடுமையாக பாதிக்கப்பட்ட சோச்சியூக்கு விரைந்து சென்றனர். கான்சு மாநிலம் முழுவதும் பேரிடர் நீக்க மீட்புதவியில் ஈடுபட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோச்சியூ மாவட்ட குழுவும் மாவட்ட அரசும் 387 கட்சி உறுப்பினர்களும் 2000 அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்களும் இடம் பெற்ற 6 பணிக் குழுக்களை பேரிடர் நீக்க மீட்புதவிப் பணி முன்னணிக்கு அனுப்பின. மாவட்டத்தை சுற்றியமைந்த மாவட்ட மக்கள் நிலச்சரிவு நிகழ்ந்த செய்தியை கேட்டறியவுடன் சோச்சியூக்கு விரைந்து சென்றனர். ஆகஸ்ட் 8ம் நாள் அதிகாலை கான்சு மாநிலத்தின் போகுக்குவரத்து பேரிடர் நீக்க அதிரடிப்படைகள் மூன்று திசைகளிலிருந்து சோச்சியூக்கு செல்லும் நெடுஞ்சாலையை மீட்க முயற்சி செய்தன. காலை 9:30மணியளவில் சோச்சியூக்கு செல்லும் 210வது தேசிய பாதையும், 10:05மணியளவில் 313வது மாநில நெடுஞ்சாலையும், மீட்கப்பட்டு போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டன. நிலச்சரிவு நிகழ்ந்த பிந்திய 48 மணி நேரத்தில் மலையினுள்ளே அமைந்த சோச்சியூ மாவட்ட நகரில் லட்சக்கணக்கான மீட்புதவி வழங்குவோர் கூடி பைலுங் ஆற்றின் இருப்பக்கங்களிலும் முன்கண்டிராத சீற்ற தடுப்பு பணியில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040