தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
அக்டோபர் முதல் நாள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டு 61 ஆண்டு நிறைவு நாள். மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனா, உலகில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக விளங்குகின்றது. விண்வெளிக்கு மனிதரை ஏற்றி செல்லும் விண்வெளி தொழில் நுட்பத்தை கொண்ட மூன்றாவது நாடாக சீனா மாறிவிட்டது, சந்திர ஆய்வு செயற்கைக்கோள் விண்வெளித் திட்டத்தையும் செவ்வனே நடத்திவருகிறது. இத்தகைய தகவல்கள் மூலம் சீனாவின் மாபெரும் வளர்ச்சிகள் கண்டு வியப்பில் ஆழ்ந்தேன். பெய்ஜிங் மாநகரில் 60 ஆயிரம் மக்கள் நாட்டுப்பற்றுணர்வை காட்டும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து தேசிய விழா கொடியேற்ற அணிவகுப்பில்
திருச்சிஅண்ணாநகர்வீ.டி.இரவிச்சந்திரன்அனுப்பிய மின்னஞ்சல்
அக்டோபர் முதல் நாள் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 61வது ஆண்டு நிறைவின்போது 2010 ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சீனத் தேசிய அரங்கு நாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றமைக்கு எனது வாழ்த்துக்ககளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், சீன தேசிய அரங்கு நாள், சீன தேசிய விழாவின் மகிழ்ச்சிகரச் சூழ்நிலைக்கு புதிய அம்சங்களைச் சேர்த்து, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை புதிய உயர் நிலைக்குக் கொண்டு சென்றிருப்பது இப்பொருட்காட்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் சீன தேசிய மக்கள் குடியரசின் தேசிய திருவிழா அக்டோபர் முதல் நாளை முன்னிட்டு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இதுக்குறித்த செய்தி விளக்கத்தில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கின் செயல்பாடுகளை விவரித்தது. அரங்கின் ஆயத்தப் பணிகள் யாவும் பல்வேறு தரப்பை கவர்ந்ததோடு தனிச் சிறப்புடைய கட்டிட வடிவத்தை சீன தேசத்தின் நாகரிகத்தை உலகுக்கு வெளிப்படுத்தியது பெருமை. அதனுடன், எரியாற்றலை சிக்கனப்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பல புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திய சீன அரங்கு, கரி குறைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொடரவல்ல வளர்ச்சி ஆகிய மனிதக்குலம் அக்கறை செலுத்தும் பிரச்சினைகளுக்கு சீன செயலாற்றும் மனநிலையையும், மனஉறுதியையும் வெளிப்படுத்தியுள்ளது.
முனுகபட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மினன்ஞ்சல்
பெய்ஜிங் மக்கள் மகாமண்டபத்தில் நடைபெற்ற சீனாவுக்கும் ரஷியாவுக்குமிடை கச்சா எண்ணெய் அனுப்பும் குழாய் அமைக்கும் திட்டப்பணியின் துவக்கவிழாவில் சீன-ரஷிய அரசுத் தலைவர்கள் கலந்துகொண்டு, சிறப்பித்துள்ளனர். 1000 கி.மீ கச்சா எண்ணெய் அனுப்பும் குழாய் அமைக்கவுள்ளது, சீன-ரஷியா நாடுகளின் மிக பெரிய இருதரப்பு நடவடிக்கையாகவும், இருநாடுகளின் ஒத்துழைப்பின் நீண்டகால நட்புறவின் அடையாளமாகவும் இருக்கிறது. மேலும், தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீனாவும் சிங்கப்பூரும் ஆசியான் மற்றும் தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பை முன்னேற்றி, சீன-சிங்கப்பூர் உறவின் மேலும் அருமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புவதாக வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது சீனாவின் ஆசிய நட்புறவை ஆழமாக்க உதவும்.
எஸ்.செல்வம் வளவனுர் புதுப்பாளையம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் விநோதமான திபெத் வானியல் நாட்காட்டி என்ற கட்டுரையைக் கேட்டேன். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, நான்கு பருவக்காலத்தையும் கணிக்கும் வானியல் நாட்காட்டியை திபெத் இன மக்கள் உருவாக்கியுள்ளனர் என்பதை அறியும்போதே மிகவும் பெருமையாக இருந்தது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டபோது, கடந்த ஆண்டு திபெத்தில் நான் மேற்கொண்ட பயணம் நினைவுக்கு வந்தது. லாசா நகரில் அமைந்துள்ள போதல மாளிகையில், பண்டைக்கால வானியல் கருவி ஒன்றை வழிகாட்டி காட்டினார். அப்போது, செயல்படாத நிலையில் இருந்தபோதிலும், அக்கருவியின் தொழில்நுட்பம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. பல்வேறு இயற்கை நிலைகளை சந்திக்க வேண்டியிருக்கும் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள், இத்தகைய வானியல் வழிகாட்டிகளை கண்டறிந்தது இயல்பானது என நம்புகின்றேன்.
தேவநல்லூர் எஸ். செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
பாகிஸ்தானில் வெள்ளப்பொருக்கால் ஏற்பட்ட பதிப்புகளையும், சீனாவின் மனிதநேய உதவிகளையும் பற்றி சீன வானொலி ஒலிபரப்பில் கேட்டேன். எனினும், அங்குள்ள பல பகுதியில் மக்களின் இயல்வு வாழ்க்கை திருப்பவில்லை என்று அறிய முடிந்தது. மேலும், சீனாவில் கொண்டாடப்படும் நிலா விழாவிற்கு சீன வானொலி நிலையத்தில் இருந்து வாழ்த்து அனுப்பி இருந்தர்கள். அனைவருக்கும் வாழ்த்தும் நன்றியும் பல. நிலா பாண்டிகை பற்றி புத்தகம் ஒன்றை வெளியிடலாமே!
சேந்தமங்கலம், எஸ்.எம்.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீனப் பண்பாடு நிகழ்ச்சியில் நிலவு திருநாள் பற்றி கூறப்பட்டது சந்திரநாள் காட்டிபடி 8 வது திங்களில் 15 வது நாள் அன்று நிலவு திருநாள் கொண்டாப்படுகிறது. நிலவை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. நிலாவை காண்பித்து சோறு ஊட்டாத தாய்மார்களும் இல்லை. நிலவு வெளிச்சத்தில் அமர்ந்து குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் உரையாடி நிலாச் சோறு உண்பது மகிழ்ச்சி தருகிறது. மேலும், கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கலையரசி அவர்களும் அறிவிப்பாளர் புஸ்பா ரமணி அவர்களும் நிலவு திருநாள் பற்றி உரையாடினார்கள். நிலவு திருவிழாவின் முக்கிய உணவான நிலா கேக்கை நண்பர்களுக்கும், உறவினருக்கும் கொடுத்து உண்பது என்றெல்லாம் பல தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலவு திருநாளில் சீன வானொலி பணியாளர்கள் அனைவருக்கும் எமது நிலவு திருநாள் வாழ்த்துகள்.
உத்திரக்குடி.சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றிய சிறப்பு நிகழ்ச்சியில் தாய்லாந்து அரங்கு பற்றி அறிவிக்கப்பட்டது. பண்பாட்டு துாதாண்மை கொள்கை அடிப்படையில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி திகழ்ந்து வருவது மன மகிழ்ச்சி தருகின்றது. தாய்லாந்து நடன கலைஞர்கள் நாள்தோறும் தாய்லாந்து நடனம் ஆடுவதோடு, பார்வையாளர்களுக்கு அன்பாக தாய்லாந்து நடனத்தை கற்றுத் தரும் விதம் உண்மையில் கரும்பு தின்பதற்கு கூலி தருவது போன்று உள்ளது.
ஆரணி அபி.அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்
சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு செய்திகளில், காலநிலை மாற்ற சமாளிப்பு நடவடிக்கைகளில் சீனா எப்போதும் தனது பங்கினை சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் ஒவ்வொரு நாட்டிற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. ஐ.நா வழிகாட்டுதலின்படி இப்பிரச்சினைக்கு உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம் என சீனா வற்புறுத்துவது மிகவும் சரியானது!