• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்டோபர் 6ம் நாளில் இடம் பெறும் 9 நேயர்களின் கடிதங்கள்
  2010-10-08 15:58:27  cri எழுத்தின் அளவு:  A A A   








கலை அன்பான நேயர்களே! நேயர்நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பது, கலையரசி

தமிழன்பன் தமிழன்பன்

கலை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பிற்கு தங்களது பொன்னான நேரத்தை செலவிட்டு, கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை தொடர்ந்து அனுப்பி, நேயர்கள் அனைவரும் வழங்கிவரும் ஆதரவுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழன்பன் மேலும் அதிக நேயர்கள் கடிதங்கள் எழுதவும், மின்னஞ்சல்கள் அனுப்பவும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கின்றோம்.

கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, இலங்கை நரமாலாவிலிருந்து அத்னியா நிஸம் எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை பல ஆண்டுகளாக கேட்டு வருகிறேன். செய்திகள், சீனா பற்றிய பல்வேறு நிகழ்ச்சிகள், உலக தகவல்கள், சீன மொழி கற்பித்தல், பாடல்கள் என சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு பல்சுவை நிகழ்ச்சியாக ஒலிபரப்பப்பட்டு வருகிறது. கலைநிகழ்ச்சிகளை பார்க்கும்போது கிடைக்கும் மனநிறைவு நமது ஒலிபரப்பை கேட்கும்போது கிடைக்கிறது.

தமிழன்பன் அடுத்தாக, சீனாவில் வெள்ளப்பெருக்கு பற்றி மதுரை 20 என். இராமசாமி அனுப்பிய கடிதம். இவ்வாண்டு சீனாவில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்ட்டோர் 2 கோடியே 90 இலட்சம் என்று அறிந்து கொண்டேன். வெள்ளப்பெருக்குகளால் ஏற்பட்ட நேரடி பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட சீனா 2400 கோடி யுவானை ஒதுக்கியதாக தெரிகிறது. மேலும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பேரழிவுகளை குறைக்க நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இவை வரும்முன் காக்கும் நோக்கில் செயல்படுத்தப்படுபவை.

கலை தொடர்வது, ஈரோடு எம்.சி.பூபதி ஐக்கியநாடுகள் அவையில் சீனாவின் பங்கு பற்றி எழுதிய கடிதம். சீனா ஐ.நாவில் உறுப்பு நாடாக இருந்து சிறந்த பங்காற்றி வருகிறது. சீனாவின் அமைதி பணிகள் இந்த உலகத்திற்கு தேவையே. அமைதி வளக்கும் சீனாவின் நட்பு நாடுகள் நாள்தோறும் அதிகரிக்கட்டும். அமைதியின்றி நிறைவான வாழ்வில்லை என்பதனை சீனா உலகிற்கு உணர்த்தி வருகிறது.

தமிழன்பன் இனி, சீன இசை நிகழ்ச்சி பற்றி கோவை என்.வெங்கடாச்சலாம் அனுப்பிய கடிதம். திபெத் இன மக்களின் இன்பமான வாழ்வை சொல்லும் நாட்புறப்பாடல்களை வழங்கி புதிய உலகை காட்டினீர்கள். குளிர் மிகுந்த பகுதி. தன்னாட்சிப் பகுதி. எல்லை ஓரப்பகுதி. இயற்கை அழகை கண்கொள்ளாக் காட்சியாக கொண்டுள்ள பகுதி திபெத். இப்பகுதியில் வாழும் மக்களின் நாட்டுபுறப்பாட்லகள் மனதிற்கு இதமூட்டின. இந்த பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கலாம் என்று தோன்றுகிறது.

கலை அடுத்து, நட்புபாலம் நிகழ்ச்சி பற்றி நிலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் எழுதிய கடிதம். கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக சீனப் பயணம் மேற்கொண்ட திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் பேட்டியை கேட்டோம். மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் நிகழ்ச்சி இது. சீனர்களால் பொருட்களை எப்படி விலை குறைவாக விற்க முடிகிறது என்பதை அறிந்து வாருங்கள் என்று பலரும் கூறியதை அவர் பேட்டியில் தெரிவித்தார். இதற்கு சீனாவிற்கு சென்று தெரிய வேண்டியதில்லை. சீன மக்களின் கடின உழைப்பு தான் இந்த சிறந்த நிலைக்கு அவர்களை உயர்த்தியிருக்கிறது என்று அனைவரும் அறிவார்கள்.

தமிழன்பன் தொடர்வது, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் கடிதத் தொடர்பு பற்றி பரசலூ பி.எஸ்.சேகர் அனுப்பிய கடிதம். தமிழ்ப் பிரிவுக்கு அனுப்பப்படும் விமர்சன கடிதங்களுக்கு பொருள்வாரியாக கடிதங்களை குறிப்பிட்டு நன்றிக் கடிதம் அனுப்பிவரும் கடிதத்தொடர்பு பொறுப்பாளர்களை பாராட்டுகின்றோம். இவ்வாறு பெறப்படும் நன்றிக் கடிதங்கள் நேயர்களை தொடர்ந்து கடிதங்கள் எழுத தூண்டுகின்றன.

கலை இனி, சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சி பற்றி சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி எழுதிய கடிதம். நிங்சியா ஹூய் இன மக்களின் சிறப்புகளை இந்நிகழ்ச்சி எங்களுக்கு விவரித்தது. பெரும்பான்மையான இஸ்லாமிய மதத்தில் நம்பிக்கை கொண்ட அவர்களின் வாழ்க்கை, செயல்பாடுகள், தொழில், சிறப்பு பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இந்நிகழ்ச்சி வழங்கியது என்று கூறலாம்.

தமிழன்பன் அடுத்ததாக, மதுரை திருமங்கலம் பி கதிரேசன் மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். வளர்ந்து வரும் சீனா சந்தித்த மிக கடுமையான தாங்ஷான் நிலநடுக்கம் பற்றிய தகவல்கள் இதில் இடம்பெற்றன. 2,80,000 பேர் உயிரிழந்தது, மறுசீரமைப்புக்கு 9,800 கோடி யுவான் செலவு, அதனை விவரிக்கும் ஒன்றரை மணிநேர திரைப்படம் பற்றிய விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதர பல தகவல்கள் அறிவிக்கப்பட்டாலும் இந்த தகவல் மனதில் பதிந்துவிட்டது.

கலை தொடர்வது, இலங்கை மட்டகளப்பு ஏறாவூரிலிருந்து எ.எம்.ரிஃபான் அனுப்பிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை பல ஆண்டுகளாக கேட்டு வருகின்றேன். இதில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் காலநிலை மாற்றம் தொடர்பான தகவல்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. காலநிலை மாற்றம் தொடர்பான உலக தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், காலநிலை மாற்றத்தை உருவாக்கும் சீர்கேடான செயல்பாடுகளை திருத்திக்கொள்ளவும் இந்த தகவல்கள் உதவுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040