செல்வம்......ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தற்போது தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை நேரில் கண்டு களிக்கும் வகையில், ஷாங்காய் பொருட்காட்சி பற்றிய பொது அறிவுப் போட்டியில் வெற்றி பெற்ற நேயர்கள் தெரிவு செய்யப்பட்டு சீனாவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்களா?
கலை.........ஆமாம். "ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சந்திப்போம்"எனும் பொது அறிவுப் போட்டி ஏப்ரல் 5ம் நாள் முதல் ஜுலை திங்கள் 31ம் நாள் வரை நடைபெற்றது. இந்த முறை தமிழ்ப் பிரிவும் இந்த போட்டிக்காக 4 கட்டுரைகளின் மூலம் ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அறிமுகப்படுத்தியது. வினாத்தாட்களை அனுப்பிய பின் நேயர்கள் விறுவிறுப்பாக இதில் கலந்து கொண்டு விடைத்தாட்களை அனுப்பினார்கள். ஆனால் சம நிலையில் அனைத்துப் பிரிவுகளின் நேயர்களின் உற்சாகத்தை ஊக்குவிக்க இந்த முறை தமிழ்ப் பிரிவுக்கு மட்டுமே சிறப்பு பரிசு பெற்ற நேயர் என்ற வாய்பு வழங்கப்பட வில்லை. இருந்தாலும் வானொலியில் சிறப்பு பரிசு பெற்ற 8 நேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்டோபர் திங்களின் நடுவில் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் மேற்கொள்வர். நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அடுத்த முறை நடைபெறும் பொது அறிவுப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பு பரிசு பெற தொடர்ந்து பாடுபடுவோம்.
செல்வம்....... உலகப் பொருட்காட்சியை நேரில் கண்டுகளிக்கும் வாய்ப்பு எல்லா நேயர்களுக்கும் எளிதில் கிடைத்துவிட முடியாது. அந்நிலையில், உலகப் பொருட்காட்சியை நேரில் காண எந்த நேயராவது விரும்பினால், அவர்களுக்கு தாங்கள் வழங்கும் அறிவுரை என்ன?
கலை....... ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளுமாறு உலகப் பொருட்காட்சி துவங்குவதற்கு முன் உலகின் நண்பர்கள் அனைவருக்கும் சீன அரசும் ஷாங்காய் மாநகர அரசும் அழைப்பு விடுத்தன. ஆகவே அக்டோபர் திங்கள் 31ம் நாள் வரை உலகில் வாழ்கின்ற மக்கள் அனைவரும் சுயவிருப்பத்தின் படி தனிப்பட்ட அல்லது கூட்டு முறையில் ஷாங்காய் மாநகரில் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு நாங்கள் உளமார்ந்த வரவேற்பு தெரிவிக்கின்றோம்.