• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கலையரசி, செல்வம் ஷாங்காய் உலக பொருட்காட்சி பற்றி-2
  2010-10-22 14:55:44  cri எழுத்தின் அளவு:  A A A   
செல்வம்........ ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை கண்டுகளிக்க அங்கே வரும் நேயர்கள் தங்களின் உறைவிடப் பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக் கொள்ள வேண்டும்?

கலை........பொதுவாக வெளிநாடுகளிலிருந்தும் சீனாவின் இதர இடங்களிலிருந்தும் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு முன் இணையதளத்தின் மூலம் ஷாங்காய் மாநகரில் ஹோட்டலில் தங்கியிருக்கும் அறையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டை முன்கூட்டியே செய்து கொண்டால் ஷாங்காயில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதில் கடினமில்லை.

செல்வம்........ ஷாங்காய் உலகப் பொருட்காட்சியைக் காண வரும் நேயர்கள், உலகப் பொருட்காட்சியை மட்டுமின்றி, ஷாங்காயைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்டுகளிக்க வேண்டிய காட்சியிடங்கள் எவை?

கலை........ஷாங்காய் உலகப் பொருட்காட்சி தவிர, ஷாங்காய் மாநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் பல பல. ஷாங்காய் மென் பொருள் தொழிற்துறையில் உலகில் ஒரு புகழ் பெற்ற நகரமாகும். அதன் வர்த்தகம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. புதிய நகரம் பழைய நகரம் ஆகியவற்றுக்குமிடையை ஒப்பிடும் இடங்கள் பல, ஷாங்காய் தனிச்சிறப்பியல்புகளை வெளிகாட்டும் வணிக சாலைகள், நவீன பீர் சாலை, மேலை நாட்டு பாணியுடைய சாலைக் கடைகள், கோயில்கள், புறநகரில் அமைந்துள்ள வட்டக் கிராமங்கள் முதலியவை சுற்றுலா பயணம் மேற்கொள்ளத்தக்க இடங்களாகும்.

செல்வம்........ அன்றி, பழைய ஷாங்காய் மற்றும் புதிய ஷாங்காய் ஆகிய இடங்களில் நேயர்கள் கண்டுமகிழ வேண்டிய இடங்கள் யாவை?

கலை........மேற்கூறியவை தவிர, சாதாரண வணிக சாலைகள், துணி விற்பனை சந்தைகள், சிறறுண்டி சாப்பிடும் சாலைகள் முதலியவை உள்ளன. cheng huang miaoஎன்னும் கோயில் வணிக மையத்தில் அமைந்துள்ள சிற்றுண்டி விடுதி இங்கே குறிப்பிட இடமாகும். அங்கே விற்பனை செய்யப்படும் ஹாங்சோ புள்ளிப்பு மீன், நண்டு கறி கொண்ட ஸடீம் பிரெட், காட்டுக் காய் அடங்கிய ஸடீம் பிரெட் போன்ற சிற்றுண்டிகள் மிகவும் புகழ் பெற்றவை. சீனர்கள் தவிர வெளிநாட்டினர் ஷாங்காய் வந்தால் கண்டிப்பாக cheng huang miaoஎன்னும் கோயில் வணிக மையத்துக்கு வருகை தந்து சிற்றுண்டிகளை உண்டு மகிழ்வர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040