• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்டோபர் 20ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதியில் 9 இணையப்பயன்பாட்டளர்களின் கருத்துக்கள்
  2010-10-22 15:24:01  cri எழுத்தின் அளவு:  A A A   








முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் குவாங்சோ நகரில் நடைபெறயிருக்கும் 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தீபக்கோலில் தீபம் ஏற்றும் விழாவும், தீபத் தொடரோட்டத்தின் துவக்க விழாவும் பெய்ஜிங் சொர்க்க கோயிலின் தெற்கு சதுக்கத்தில் நடைபெற்றதை செய்தி விளக்கத்தில் கேட்டேன். தீபக்கோலில் தீபத்தை ஏற்றி தீபத் தொடரோட்டத்தை சீன அரசு தலைவர் ஹுசிந்தாவ் துவக்கி வைத்திருப்பதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு சீனா அளிக்கும் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெய்ஜிங்கிலிருந்து புறப்பட்டு சீனாவின் 21 நகரங்களில் 30 நாட்களாக இந்த தீப தொடரோட்டம் தொடரும் என்பதையும் அறிந்தோம்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவிலுள்ள இந்தியத் தூதர் திரு.ஜெய்சங்கர் அவர்கள், சீன-இந்திய உறவு வளர்ச்சி தொடர்பாக தெரிவித்த சில தகவல்களை செய்தியில் அறிந்து கொண்டேன். இந்தியாவுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் சுமார் 30 விழுக்காடு, மின்சாதனப் பொருட்கள் என்பதை அறியும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், மலர்ச்சோலை நிகழ்ச்சியின் இறுதியில் தாங்கா ஓவியம் பற்றிய சிறப்பான தகவல்கள் கூறப்பட்டன. தனிச்சிறப்புமிக்க எண்ணற்ற தாங்கா ஓவியங்களை எனது திபெத் பயணத்தின்போது கண்டுகளித்தது அப்போது நினைவுக்கு வந்தது. தமிழகத்தின் கோவில்பட்டி, தூத்துக்குடி மற்றும் மண்டபம் ஆகிய பகுதிகளிலிருந்து நேயர்கள் கடிதங்கள் எழுதுவதை நேயர் கடிதம் நிகழ்ச்சியில் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.

மெட்டாலா எஸ்.பாஸ்கர் அனுப்பிய மின்னஞ்சல்

ஷங்காய் உலகப்பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சியில் இந்திய அரங்கு பற்றி கேட்டேன். இந்திய நாட்டின் சிறப்பு, இசை என்ற போதிலும் அதனை சிறப்பாக செயல்படுத்த சீனர்கள் உற்சாகமூட்டியுள்ளனர். சீன இந்திய நாடுகளிடையே நடன அசைவுகள் வேறுபட்டு இருந்தபோதும், இந்திய பாணி இசையையும் நடனத்தையும் இரசித்த சீன மக்களின் உற்சாகமான கைதட்டல் இந்திய கலைஞர்களுக்கு மேலும் புத்துணர்வு ஊட்டியிருக்கும் .இது சீன இந்திய இணக்கத்தையே காட்டுகிறது.

திருச்சி அண்ணாநகர் வி.டி இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

வட கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்ட 65வது ஆண்டு நிறைவில், வட கொரியா இராணுவ அணிவகுப்பு நடத்தி வலிமையை காட்டியுள்ளதை செய்திவிளக்கத்தில் கேட்டேன். மேலும், 16வது ஆசிய விளையாட்டுப் போட்டி நவம்பர் தென் சீனாவின் குவாங் சோ மாநகரில் 12ம் நாள் துவங்கவுள்ளதையும், அதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் முடிவு பெறவுள்ளதையும் செய்திகளில் செவிமடுத்தேன். அப்போது, 14 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் மற்றும் அலுவலர்கள், 7000க்கு அதிகமான செய்தியாளர்கள், ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் வருகை தரவுள்ளதால் குவாங் சோ மாநகரின் போக்குவரத்து துறைக்கு பெரும் சவால் ஏற்படுமென கேள்விபட்டேன். ஆனால், குவாங்சோ மாநகர் அதனை எளிதாக சமாளிக்கும் என்று நம்புகின்றேன்.

பெருந்துறை பல்லவி பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தியாவ் யூ தீவின் வான் பரப்பில் சட்டவிரோத வான்வழிச் சோதனைப் பயணம் செய்தது, சீனாவின் இறையாண்மையையும், இருநாட்டுறவையும் சீர்குலைக்கும் முயற்சி என்ற குற்றச்சாட்டை செய்திகளில் கேட்டேன். அப்பகுதியில் தான் சீன மீன்பிடிக் கப்பலின் மாலுமி ஒருவரை ஜப்பான் கைது செய்து, ஏற்கெனவே சீனாவின் எதிர்ப்புக்குள்ளாகி இருக்கிறது. தியாவ் யூ தீவும் அதனுடன் இணைந்த தீவுகளும் பண்டைக்காலம் தொட்டே சீனாவின் உரிமைப் பிரதேசமென சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மா சாவ் சுயூ வலியுறுத்தி இருப்பதை ஜப்பான் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திமிரி. புலவர் ராமதாஸ் அனுப்பிய மின்னஞ்சல்

முக்கியத்துவம் வாய்ந்த 5 பொருளாதாரச் சமூகங்களில் சீனா சேர்க்கப்பட்டுள்ளதை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட தகவல் மூல‌ம் அறிய‌ முடிகிற‌து. அமெரிக்கா, பிரிட்டன், யூரோ பிரதேசம், சீனா, ஜப்பான் ஆகியவை, நிதி அமைப்பு முறையை நிதானப்படுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் என்பதை தெரிந்து கொண்டோம். இந்த முக்கிய பொருளாதாரச் சமூகங்களின் கொள்கைகளும் நடவடிக்கைகளும் உலகின் இதர நாடுகளுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய, சர்வதேச நாணய நிதியம் புதிய அறிக்கையை வெளியிடவுள்ளது வரவேற்கத்தக்ககது.

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மின்னஞ்சல் சீனாவில் மத நம்பிக்கைச் சுதந்திரமும், கருத்தை வெளிப்படுத்தும் சிந்தனை சுதந்திரமும் சீனாவில் என்றும் உள்ளது என்பதனை இஸ்லாமிய உலக ஒன்றிய பிரதிநிதிக் குழுவின் உறுப்பினரும் துருக்கியின் மத விவகார துணை அமைச்சருமான மகமது குருகாஸ் கூறியது செய்திகளில் முத்தாய்ப்பாக ஒலித்தது, மனித உரிமைக்கு சீனா அளித்துவரும் மதிப்பையும் பெரும் கவனத்தையும் கேட்டு மன நிறைவும் மட்டற்ற மகிழ்ச்சியும் ஏற்பட்டது. சீன இஸ்லாமிய சங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்த இந்தக் குழு உலக அரங்குக்கு சீனாவின் மத சுதந்திர நல்லுறவை உலகுக்கு வெளிப்படுத்திவிட்டது.

தார்வழி பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்

8வது ஆசிய-ஐரோப்பிய தலைவர்களின் கூட்டம் பிரெசெல்ஸில் முடிவடைந்தை சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு மூலம் அறியவந்தேன். ஆசிய-ஐரோப்பிய நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னேற்றவும் உலக பொருளாதார தொடரவல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கவும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிப்பது, நலன்கள் தருவது என்பதன் அடிப்படையில் பேச்சுவார்த்தைகளும், ஒத்துழைப்புகளும் அனைத்து நாடுகளுக்கும் நன்மை பயக்கும்.

மதுரை-20, என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்

பிரசல்சில் நடைபெற்ற ஆசிய ஜரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட சீன தலைமை அமைச்சர் ஆற்றிய உரையில் உலக நாணய மற்றும் பொருளாதார கட்டுபாட்டை மேம்படுத்துவது, சர்வதேச பிரச்சனைகள் பற்றிய சீனாவின் கருத்துக்களை சீன தமிழ் ஒலிபரப்பு முலம் அறிந்து கொண்டேன் மெதுவாக மீட்சியடைத்து வரும் உலக பொருளாதார வளர்ச்சிப் போக்கை வலுப்படுத்துவதை முக்கிய கடமையாக செயல்படுத்த அவர் உலக நாடுகளை கேட்டு கொண்டார். அவரது உரை சீனாவின் நிலைபாட்டை உலக அரங்கில் உயர்த்துவது திண்ணம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040