• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அக்டோபர் 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் கடிதப் பகுதியில் 8 நேயர் நண்பர்கள் பங்கு கொண்டது
  2010-10-22 15:26:25  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை அன்பான நேயர்களே! வானலைகளில் உங்கள் கருத்துக்களை வலம்வரச் செய்யும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நான் கலையரசி.

தமிழன்பன் நான் தமிழன்பன். இன்றைய நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கலை தமிழகத்தின் பல மாவட்டகளிலும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு பரவலாகி வருகிறது. சில புதிய கடிதங்கள் இதுவரை அவ்வளவாக கடிதங்கள் வராத மாவட்டங்களிலிருந்தும் வர தொடங்கியிருக்கின்றன. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் எமது நன்றிகள். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பிற்கு நேயர்களை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழன்பன் தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட தலைமை நேயர் மன்றங்களை உருவாக்கி, புதிய நேயர்கள் பெருக செய்யலாமே!

கலை இன்றைய கடிதப்பகுதியில் முதலாவதாக, கடையாலுருட்டி மூ.பிச்சைமணி ஷாங்காய் உலப் பொருட்காட்சி சிறப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்திய அரங்கு குறித்த தகவல்கள் இதில் இடம்பெற்றன. இந்திய அரங்கின் கட்டுமானத்தில் அதிக அளவு மூங்கில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய வந்தேன். அதிக இந்திய உணவு வகைகளை சுவைக்க வசதி செய்து தரப்படுவதோடு, கைவினைப் பொருட்களின் விற்பனை நடைபெறுவதையும் அறிந்து கொண்டேன். வளந்து வரும் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா உலகப் பொருட்காட்சியில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறது என்று நம்புகின்றேன்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை ஓட்டமாவடி இ.எல்.எம்.இர்சாத் எழுதிய கடிதம். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருவதோடு, அதன் சேவை உலகெங்கும் ஓங்கி ஒலிக்க வேண்டுமென விரும்புகின்றேன். வானொலி மூலமாக சீன மொழியை கற்பித்து வருவது என் போன்ற பல மொழி கற்க்கும் விருப்பமுடையோருக்கு சிறந்த வாய்ப்பு என எண்ணுகிறேன். இலங்கையின் நீண்டகால பண்பாட்டு தொடர்புள்ள கலாச்சார நாடு சீனா என்பதால் இலங்கை முழுவதும் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு தெளிவாக கேட்க செய்ய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கலை தொடர்வது, நாமகிரிபேட்டை கவித்துளி சக்தீஸ்வரன் சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள நிங்ஷா, கான்சு, சிங்காய், சின்சியாங் முதலிய பிரதேசங்களில் "ஹார்" என பதிலுரைக்கும் பாணியில் அமைந்த நாட்புற பாடல் கலை பற்றியும், சீன தேசிய நிலை பொருள்சாராப் பண்பாட்டு மரபுச் செல்வத்தில் முதல் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள அதன் சிறப்பையும் அறிந்தேன். மேலும் "ஹார்" வகை நாடகம் நிங்ஷா குவெய் இன தன்னாட்சி பிரதேசத்தின் தனிசிறப்பு வாய்ந்த ஒரு நடன நாடகம் என்பதையும் அது நிங்ஷா குவெய் இன பண்பாட்டை காட்டுகிறது என்றும் அறிந்தேன்.

தமிழன்பன் இனி, சென்னை மறைமலைநகர் மல்லிகா தேவி செய்தி விளக்கம் பற்றி எழுதிய கடிதம். சீனாவின் மேற்கு பகுதி வளர்ச்சி திட்டம் தொடங்கிய பிறகு அப்பகுதிகள் மாபெரும் வளர்ச்சியடைந்து வருவதை இது விவரித்தது. குறிப்பாக அடிப்படை வசதி கட்டுமானங்கள் அதிகமாகி மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வளர்வதை திருப்தியான மக்களின் பதில் ஒலிகளோடு இக்கட்டுரையை வழங்கியது சிறப்பு.

கலை அடுத்து, நட்புபாலம் நிகழ்ச்சி பற்றி மைலாடுதுறை பி.எஸ்.சேகர் அனுப்பிய கடிதம். ஜெர்மனிலிருந்து 25 சுற்றுலா பயணிகள், ஸ்விட்சர்லாந்து, கிரேக்கம், துருக்கி, ஈரான், உஸ்பெக்கிஸ்தான் மற்றும் இன்னும் சில நாடுகள் வழியாக சீனாவிற்கு வந்து ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பார்வையிட்டு தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். சுமார் 18 ஆயிரம் கிலோமீட்டர் 5 வாரங்கள் தரை வழியாக பயணம் மேற்கொண்டு உலகப் பொருட்காட்சியை பார்வையிட்டிருப்பது அவர்களது ஆர்வத்தையும், நட்புறவையும் சுட்டுகிறது.

தமிழன்பன் தொடர்வது, இராமபாளையம் கே.பச்சையம்மாள் செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். இந்திய பாகிஸ்தான் நாடுகள் என்றும் நட்புறவோடு இருப்பதையே சீனா விரும்புகிறது என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்தேன். அண்டை நாடுகளின் நடபுறவில் ஆர்வம் காட்டும் சீனாவின் செயல்பாடுகள் உலக அமைதிக்கு அதன் பங்களிப்பை காட்டுவதாக அமைகிறது.

கலை இனி, திருப்பூர் மணவை க.சந்திரசேகர் நேயர் விருப்பம் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இளையராஜா இசையிலும், சின்னதம்பி, அலைகள் ஓய்வதில்லை போன்ற திரைப்படங்களிலிருந்தும் பாடல்கள் ஒலிபரப்பாயின. நன்றாக தெளிவாக இருந்தது. வேலை நேரம் போக மீதி நேரத்தில சீன வானொலி கேட்க மறப்பதில்லை. விருந்தோ மருந்தோ மூன்று நாள், மூன்று வேளை என்பது போல சீனாவிலிருந்து வரும் தமிழ் ஒலிபரப்பு ஒரு மணிநேர இருந்தாலும், நல்ல விருந்தாகவும், பயனுள்ள மருந்தாகவும் உள்ளது.

தமிழன்பன் அடுத்தாக, குருணிகுளத்துப்பட்டி சொ.முருகன் எழுதிய கடிதம். 32 நாடுகளிலுள்ள 72 நகரங்களோடு ஒப்பிடுகையில் உலகின் மிக சிறந்த நகரமாக இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி முன்னணியில் வந்துள்ளதை அறிய தந்தீர்கள். புதுடெல்லியின் அழகு, பாதுகாப்பு, கட்டக்கலை, சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்நகரம் தேர்ந்தெடுக்கப்ட்டுள்ளதை அறியும்போது எமது நாட்டு தலைநகரின் பெருமையை நினைத்து பெருமிதம் கொள்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040