திண்டுக்கல் கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
ஆசிய விளையாட்டுப்போட்டியினை வரவேற்கும் குவாங்சோ மாநகரம் என்ற தலைப்பிலான செய்தி விளக்கத்தைக் கேட்டேன். ஆசிய கண்டத்து மக்கள் மட்டுமின்றி ஏனைய கண்டத்து மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இப்போட்டிகளை சிறப்பாக நடத்த சீனாவின் குவாங்சு மாநகரமும் மற்றும் சீன விளையாட்டு அமைச்சகமும் இணைந்து சுற்றுச்சூழல் மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை தீர்க்க எடுத்து வரும் நடவடிக்கைகளை அதன் மூலம் அறிந்தேன் உலகமே வியக்கும் வகையில் அமைந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி அனுபவங்கள் ஆசிய விளையாட்டுப்போட்டிகளை நடத்துவதற்கு சீனாவிற்கு பெரிதும் துணைபுரியும். இதன் மூலமாக சீனாவில் பெய்ஜிங் விளையாட்டு நகரத்திற்கு அடுத்தாக இன்னொரு விளையாட்டு நகராக குவாங்சோ மாநகரம் உருவெடுத்திருக்கிறது. எனவே சீனாவின் எதிர்கால விளையாட்டு வீரர்களின் உருவாக்கவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நன்றாக பயன்படும்.
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி என்ற செய்திவிளக்கம் கேட்டேன். கடந்த ஐந்தாண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இயல்பற்றக் காலமாக இருந்தாலும், உள்நாட்டுத் தேவையை விரிவாக்கியதன் மூலம், உலகப் பொருளாதார நிலையை மேம்பட செய்த சீனாவின் அரும்பெரும்செயலை எந்த நாடாலும் மறந்துவிட இயலாது. நுகர்வின் அளவை விரிவாக்கி, மிகச் சிறப்பாக செயல்பட்ட சீனா, ஒட்டுமொத்த உலகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையானது. மேலும் செல்லிடைப் பேசி மூலம் வறுமை ஒழிக்கின்ற ஐ.நா.வின் புதிய கருத்து என்ற செய்திவிளக்கத்தில் செல்லிடைப்பேசி வறிய மக்களுக்கு உதவுவதையும், செல்லிடைப்பேசி மூலம் வறிய மக்கள் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக் கொள்வதையும் அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
ரென்மின் பி மாற்று விகிதத்தை சாக்கு போக்காக மாற்றக்கூடாது என்ற நியாயமான கருத்தை நமது ஒலிபரப்பில் செவிமடுத்தேன். மேலைநாடுகளின் பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய சீன பொருளாதாரத்தை பலிக்கடா ஆக்கக்கூடாது. ரென்மின்பி மாற்று விகிதத்தை சீன உயர்த்த வேண்டும் என்னும் கருத்துக்கு சீன வணிக அமைச்சின் செய்தித் தொடர்பாளர், யாவ்சியானின் கருத்துகள் நியாயமானவை. சீன மக்களின் நலன்களுக்கு பாதிப்புவராத வகையில் சீன பொருளாதார கொள்கைகள் தொடரும் என்னும் சீன அரசின் கொள்கை பாராட்டத்தக்கதாகும்.
மதுரை-20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்
சாங்ங-2 என்னும் சந்திர ஆய்வு செயற்கைகோள், பெய்ஜிக்கில் விண்வெளி பறத்தல் கட்டுபாட்டு மையம் மூலம் 3வது முறையாக வேகம் குறைக்கப்பட்டதை அறிந்தேன். அக்டோபர் முதல் நாள் விண்வெளியில் ஏவப்பட்ட இது, சீனாவின் அடுத்தக்கட்ட சந்திர ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வசதிகளின் சோதனை மற்றும் அனுபவக்களை சேகரிக்கவுள்ளது குறிபிடத்தக்கது. சீனாவின்விண்வெளி ஆராச்சியின் படிப்படியான ஆனால் உறுதியான வளாச்சியை இது, உலகிற்கு எடுத்து காட்டுகிறது.
முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் நடைபெற்ற 108 வது சீன ஏற்றுமதி இறக்குமதி கருத்தரங்கம் சீன இந்திய நட்புறவுக்கு இன்னொரு மைல்கல். இந்திய நிறுவனங்கள் பங்கேற்றுவருவதால் சீனா, இந்தியா இரு நாடுகளின் உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இக்கருத்தரங்கு மேடையை பயன்படுத்தி வணிக ஒத்துழைப்பு வழியை விரிவாக்குவர். குறிப்பாக சீனாவின் மேற்குப் பகுதிக்கும் இந்தியாவுக்குமிடை பொருளாதார வர்த்தக பரிமாற்றத்தையும், முதலீட்டு ஒத்துழைப்பையும் இக்கருத்தரங்கு தூண்டும். மேலும், டொரொண்டோ நகரில் நடைபெற்ற 20 நாடுகள் குழுவின் உச்சி மாநாட்டின்போது சீனாவும் அமெரிக்க நாடுகளும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடைப்படையில் சீன அரசுத்லைவர் ஹூசிந்தாவ் மேற்கொள்ளவிருக்கும் அமெரிக்கப் பயணத்தை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இப்பயணம் இருநாட்டின் உறவை நிச்சயம் வலுப்படுத்தும்.
பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
இந்தியவில் புகை பிடிப்பவர்கள் உலகில் இரண்டாம் இடம், புகையிலை தயரிப்பதில் முன்றாமிடம் என்று இந்திய அரசே அறித்துள்ளதை செய்திகளில் கேட்டேன். மக்கள் விழிப்புணர்வின் அவசியத்தை தான் இதில் உணர முடிகிறது. மேலும் நேயர்விருப்பத்தில் நல்ல இனிய பாடல்கள் இடம்பெற்றது மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் அளித்தது
இராசிபுரம் சுப்பு மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்
கணிதமேதை இராமானுஜன் விருது சீனாவிலுள்ள கணித மேதை ஒருவருக்கு வழங்கப்படுவதை எண்ணி மகிழ்ச்சியடைந்தேன். கும்பகோணத்தில் பிறந்த கணித மேதை இராமனுஜனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருதை, கும்பகோணத்தில் நடைபெறும் சர்வதேச கூட்டமொன்றில் வைத்து சீன கணிதமேதைக்கு வழங்கப்படுவது எனது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
சேந்தமங்கலம் எஸ்.எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன குடியரசு நாளில் 25 இணைகள் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்டு, மாசுபாட்டு பரப்புரை மேற்கொண்டதை மலர்சோலை நிகழ்ச்சியில் கேட்டேன். மிதிவண்டியில் பவனி வந்து சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாசுபாடு தடுப்பை செயல்வடிவில் உணர்த்திய 25 இணைகளுக்கு எமது வாழ்த்துக்கள்.
ஆரணி அபி அமிர்தவதி அனுப்பிய மின்னஞ்சல்
ஷாங்காய் உலகப்பொருட்காட்சியில் சந்திப்போம் என்ற போட்டியில் சிறப்பு நேயர்களாக தேர்தெடுக்கப்பட்டோர் சீனாவில் பயணம் மேற்கொண்டு வருவதை அறிந்து வாழ்த்துகிறேன். சாங்காய் நகரில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் அனைத்து சிறப்பு நேயர்களும் கலந்து கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். சீனாவின் இத்தகைய சிறப்பு நேயர்கள் பயணத்தால் உலக அளவில் நேயர்கள் சீனவின் மீது நட்புறவை ஏற்படுத்துவார்கள் என்பது உறுதி.
தார்வழி பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவின் மிகப் பெரிய பாண்டா இயற்கைப் பாதுகாப்பு மண்டலத்தை பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருவதை அறிந்தேன். சீனாவின் கான்சூ மாநிலத்திலுள்ள இந்த பைசுய் ஆறுப் பாதுகாப்பு மண்டலத்தில் காடுகள் நிறைந்துள்ள பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருவதையும், பாண்டாக்கள் வாழும் இடங்கள் பயனுள்ள முறையில் பாதுகாக்கப்பட்டு வருவதையும் அறிந்தேன். 103 பாண்டாக்கள் வாழும் இந்த இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில் மேலும் பல பாண்டாக்கள் பிறந்து வளர வேண்டுமென எதிர்பார்க்கின்றேன்.