• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வங்கி வட்டி அதிகரிப்பதன் முக்கியத்துவம்
  2010-11-08 11:26:30  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

புஷ்பா.....கலை கடந்த வாரத்தில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வட கொரியாவுக்கு உதவ சீன மக்கள் தொண்டர் படை போரில் கலந்து கொண்ட 60வது ஆண்டு நிறைவு பற்றிய நிகழ்ச்சியை நமது நேயர் நண்பர்களுக்கு விளக்கினோம்.

கலை........ஆமாம். இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து சீனாவில் நிகழ்ந்த முக்கிய மாற்றம் பற்றி விளக்கப் போகின்றோம்.

புஷ்பா.....அப்படியிருந்தால் எனக்கு ஒரு யோசனை உண்டு.

கலை........சொலுங்கள்.

புஷ்பா.....அக்டோபர் 20ம் நாள் முதல் சீன நாணய வாரியங்களில் ரென்மின்பி வங்கி வைப்புக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நாம் விளக்கமே.

கலை........சரியான யோசனை. அப்படியிருந்தால் இதுவே இன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக திகழும்.  

புஷ்பா.....அப்படியிருந்தால் நான் முதலில் ஒரு வினா கேட்கின்றேன்.

கலை........கேளுங்கள்.

புஷ்பா.....நமது வானொலியில் அறிவித்தது போல நடப்பு வங்கி வட்டியை அதிகரித்தமை கடந்த 34 திங்களில் சீனா மேற்கொண்ட முதல் முறை வட்டி அதிகரிப்பு முயற்சியாகும். அப்படித்தானே?

கலை........ஆமாம். மத்திய வங்கி பொருளாதாரத்தின் நிலையான விரைவான வளர்ச்சியை நிலைநிறுத்தி நாயண வீக்கம் மீது முன்கூட்டியே சமநிலையை நன்றாக கருத்தில் கொண்ட பின் மேற்கொண்ட சரியான தீர்மானமாகும் என்று சீனாவின் பொருளாதார வட்டாரத்தில் பொதுவாக அப்படியே கருதப்படுகின்றது.

புஷ்பா..... முன்பிருந்த நாணய வீக்கத்தின் மீதான முன்கூட்டியே நிர்வாகத்தையும் சொத்து விலைவாசி அளவுக்கு மீறி உயர்ந்ததை கட்டுப்படுத்தும் எச்சரிக்கையும் சமூகத்துக்கு வெளியாக்கப்பட்டுள்ளன என்று பொருட்படுகின்றது.

கலை........ஆமாம்.

புஷ்பா.....சீன மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி ஓராண்டு வங்கி வைப்பு வட்டி விகிதம் 0.25 விழுக்காட்டுக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கலை........ஆகவே செயல்பாட்டிலுள்ள 2.25 விழுக்காட்டிலிருந்து 2.5 விழுக்காடாக வங்கி வைப்பு வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.

புஷ்பா.....மத்திய வங்கி, வங்கி வைப்பு வட்டியை அதிகரிப்பதன் பின்னணி என்ன? இது பற்றி கொஞ்சம் விவரமாக விளக்கம் கொடுக்க முடியுமா?

கலை........தெரிந்த வரையில் விளக்கம் கூறுகின்றேன். விளக்குவதற்கு முன் சீன Renmin பல்கலைக்கழத்தின் நாணய மற்றும் பங்கு பத்திர ஆய்வகத்தின் துணை தலைவர் zhao xi junஇன் கருத்தை கேளுங்கள்.

புஷ்பா.....வங்கி வட்டியை அதிகரிப்பதற்கு நான்கு காரணிகள் உண்டு. முதலில் விலைவாசி உயர்வு ஏற்படுத்திய நிர்பந்தத்தை சமாளிப்பது. இவ்வாண்டின் பிற்பாதி முதல் விலைவாசி ஏற்படுத்திய நிர்பந்தம் பெரிதாகியுள்ளது. பொது மக்களின் நுகர்வு குறியீட்டு எண் அதிகரித்துள்ளது. மத்திய வங்கிக்கும் பொது மக்களுக்கும் வெவ்வேறான நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நாணய வினியோகம் விரைவாக அதிகரிப்பது தணிவு செய்யப்படும். மூன்றாவது வங்கி வைப்பு தொகைக்குப் பொருந்தாக வட்டி அதிகரிப்பின்மை. இவ்வாண்டின் முதல் 8 திங்களில் பொது மக்களின் சராசரி நுகர்வு குறியீட்டு விகிதம் 2.28 விழுக்காடாகும். ஓராண்டு வங்கி வைப்பு வட்டி 2.25 விழுக்காடு மட்டுமே. வங்கியில் வைப்பு தொகையின் வட்டி விகித குறைவு பற்றி பொது மக்கள் கவலைபடுகின்றனர். வங்கி வைப்பு வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்ட பின் பொது மக்கள் எதிர்நோக்கியுள்ள 2.28 நுகர்வு குறியீட்டை தாண்டியுள்ளது. ஆகவே வங்கி வைப்பு வட்டிக்கும் நுகர்வு குறியீட்டு எண்ணுக்குமிடை இருக்கும் வேறுபாடு மாற்றப்படும். எதிர்காலத்தில் நாணய வீக்கம் பற்றி சந்தை முன்கூட்டியே மதிப்பீடு செய்வதற்கு இது வழிகாட்டலாம். அதாவது நாணய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறனுக்கு வழிக்காட்டலாம்.

கலை........ஆகவே சீன மத்திய வங்கி வட்டி விகித அதிகரிப்பை அறிவித்த பின் சீனாவில் வீட்டு நிலச் சொத்துச் சந்தைக்குப் பொறுப்பான உறைவிட மற்றும் நகர கிராமப்புற கட்டிட அமைச்சகம் உறைவிடத்துக்காக வங்கியில் தனியார் வைத்த தொகையின் வட்டியையும் கடன் வட்டியையும் அதிகரித்துள்ளது.

புஷ்பா.....இந்த முறை வங்கி வட்டி அதிகரிப்பு பற்றிய முக்கியத்துவம் என்ன? இது பற்றி துணை தலைவர் zhao xi junஇன் கருத்து என்ன?

கலை........இந்த வட்டி அதிகரிப்பு முயற்சியை மதிப்பிட்ட போது வட்டி அதிகரிப்பு அளவு பெரியதில்லை. இருந்தாலும் பொது மக்களின் மன நிம்மதிக்கு இது முக்கியத்துவம் மிகவும் வாய்ந்தது. நீண்டகால பார்வையில் வீட்டுநிலச் சொத்துச் சந்தைக்குச் செல்வாக்கு ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறினார். இது பற்றி மேலும் விவரமாக அவர் கூறியதாவது.

புஷ்பா..... நீண்டகால கருத்தில் பார்த்தால் வங்கி வைப்பு வட்டிவிகிதத்தை அதிகரிப்பத்தால் உறைவிட சந்தைக்கு சாரம்சரீதியான செல்வாக்கு உள்ளது. எடுத்துக்காட்டாக கடன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் வீடு வாங்குவோர் வட்டி உயர்வை எதிர்நோக்குவர். வீடு வாங்கும் ஆர்வம் மற்றும் தேவை பாதிக்கப்படும். அதேவேளையில் உறைவிட வணிக வட்டாரம் கடனுடன் வீடுகளை கட்டியமைப்பதில் செலவும் உயரும். ஆகவே வீடுகள் கட்டியமைக்கும் வேகம் பாதிக்கப்படும்.

புஷ்பா.....இந்த முறை சீன மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தப் பின் சீனா புதிய சுற்று வட்டி அதிகரிக்கும் முயற்சியில் நுழைந்துள்ளதாக சந்தையாளர்கள் ஊகித்துனர். ரென்மின்பி மதிப்பு உயர்வு மற்றும் சீனப் பொருளாதாரம் சீராகியுள்ளமை மேலும் கூடுதலான நகரும் தொகையை ஈர்ப்பது போன்ற கவலைகள் சந்தையில் ஏற்பட்டன. இது பற்றி பொருளாதார வல்லுனர்கள் என்ன கருத்து கொண்டுள்ளனர்?

கலை........ இது குறித்து yin he என்னும் பங்கு பத்திர நிறுவனத்தின் முதன்மை பொருளாதார வல்லுனர் zuo xiao lei அம்மையார் கருத்து தெரிவிக்கின்றார். அவர் கூறியதாவது.

மத்திய வங்கி வங்கி வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தும் போது கண்டிப்பாக நாணயப் புழக்கத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த முறை வட்டி அதிகரிப்புச் செல்வாக்கு திட்டமிடப்பட்ட பயனை அடைவதில் இன்னல்கள் உள்ளன. மக்கள் குறிப்பிட்ட வங்கி வட்டி விகித அதிகரிப்பு காலம் தொடர்ந்து வட்டி அதிகரிக்கும் காலமாகும். ஆகவே அது மறுபுறம் அதிகரிக்கும் பயனை ஏற்படுத்தும். மத்திய வங்கி இதில் ஏற்படும் மாற்றங்களில் மிகவும் கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

புஷ்பா..... இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் தொடக்கம், சீனத் தொழிற்துறையில் உற்பத்தி அதிகரிப்பு காணப்படு வருகிறது. பொருளாதாரத்திலும் மீட்பு சீராகி வருகின்றது.

கலை........ ஆகவே இந்த நிலைமையில் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்துவது நாணயக் கொள்கையில் நிலைப்புத் தன்மை மீண்டும் திரும்பிவருவதையும் பொருளாதாரம் நெருக்கடிக் காலத்தில் இருந்த நிர்வாகத்திலிருந்து ஒழுங்கான நிர்வாகத்துக்கு திரும்புவதையும் எடுத்துக்காட்டுகின்றது என்று சீனாவில் பொதுவாக மதிப்பிடப்படுகின்றது.

புஷ்பா.....தவிரவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 17வது மத்திய கமிட்டியின் 5வது முழு அமர்வின் நிறைவு விழாவில் அடுத்த ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டம் பற்றி கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. நெடுநோக்கு தன்மைவாய்ந்த வளரும் தொழில்களுக்கு பயிற்சியளித்து வளர்க்கும் கொள்கைகளை சீன அரசவை அண்மையில் வெளியிட்டது.

கலை........ நீங்கள் குறிப்பிட்ட கொள்கைகள், கருத்துக்கள், நடவடிக்கைகள் ஆகியவற்றிலிருந்து வரும் ஆண்டுகளில் பொருளாதாரத்தின் வளர்ச்சித் தரத்தில் சீனா மேலும் கவனம் செலுத்துவது கண்கூடாகத் தெரியும்.

புஷ்பா.....சரி நேயர் நண்பர்களே சீன நாணய வாரியங்களில் ரென்மின்பி வங்கி வைப்புக்கான வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது பற்றிய விளக்கத்தை கேட்டீர்கள்.

கலை........இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

புஷ்பா.....விளக்க நிகழ்ச்சியைக் கேட்ட பின் உங்கள் கருத்துக்களை ஒரு வரியில் எழுதுங்கள்.

கலை........அடுத்த வாரம் சனிக்கிழமையன்று மீண்டும் சந்திப்போம்.

புஷ்பா.....வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040