• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
9 நேயர் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள்
  2010-11-11 11:18:41  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை அன்பான நேயர்களே! நேயர் நேரம் நிகழ்ச்சியில் உங்கள் கருத்துகளை வானலைகளில் தவழவிட வருவது, கலையரசி.

தமிழன்பன் தமிழன்பன்.

கலை நேயர்களின் கருத்து கடிதங்கள் பல எங்களை வந்தடைகின்றன. பலர் தொடர்ச்சியாக எழுதுவதில்லை. சீன வானொலி நிகழ்ச்சிகள் பற்றி கருத்து கடிதங்கள் எழுதுவதை உங்கள் அன்றாட பணியில் ஒன்றாக சேர்த்து செயல்பட கேட்டு கொள்கின்றோம்.

தமிழன்பன் குறைந்தது நாளுக்கொரு கருத்து கடிதம் எழுதி, நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு தரும் ஆதரவை அதிகரிக்க கேட்டுக் கொள்கின்றோம்.

கலை இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக, சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சி பற்றி இலங்கை புதிய காத்தான்குடி எம்.எப்.எப்.சிஃப்னா எழுதிய கடிதம். ஐநா பேரவையில் தனக்குரிய இடத்தை சீனா மீட்ட விபரங்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்டேன். சீனாவின் வளர்ச்சிப் பாதையை அறிவிக்கும் நிகழ்ச்சியாக அமைந்துள்ள சீன வரலாற்று சுவடுகள் நிகழ்ச்சியே எனக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியாக தொடர்கிறது.

தமிழன்பன் அடுத்து, இராமபாளையம் க.பச்சையம்மாள் செய்தி தொகுப்பு பற்றி அனுப்பிய கடிதம். சீன அரசுத் தலைவர் ஜெர்மனி அரசுத்தலைவருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் சுருக்கம் இதில் இடம்பெற்றது. இருநாட்டு நட்புறவை ஆழமாக்க விரும்பும் வகையில் கருத்துக்கள் இடம்பெற்றன. சீனாவும், ஜெர்மனியும் பல்வேறு துறைகளில் எதிர்காலத்தில் ஒத்துழைக்க இருப்பது இருநாடுகளின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.

கலை தொடர்வது, சென்னை மறைமலைநகர் மல்லிகாதேவி தமிழ்ப் பாடல் பற்றி எழுதிய கடிதம். நிகழ்ச்சிகளின் நடுவில் வானொலியை கேட்போரின் காதுகளை குளிரச் செய்யும் வகையில் ஒலிபரப்பாகும் தமிழ்ப் பாடலில் இன்று சின்னக்குயில் சித்திராவின் குரலில் "விண்ணுக்கு ஓர்" என்ற பாடல் விருந்ததளித்தது. மேலும், ரஷியாவில் தற்காப்புப் போர் வெற்றியடைந்தன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாக் கொண்டாட்டத்தில் விருந்தினராக சீன அரசுத் தலைவர் ஹூசிந்தாவ் கலந்துகொண்டதை செய்திகளின் வாயிலாக அறிந்தேன்.

தமிழன்பன் இனி, நீலகிரி கீழ்குந்தா கே.கே.போஜன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனப் பண்பாட்டை விளக்குகின்ற இனிய நிகழ்ச்சியை தமிழ்ப் பிரிவின் தலைவர் கலையரசி அவர்களும், திரு செல்வம் அவர்களும் இணைந்து வழங்கினர். இந்தியாவும், சீனாவும், பாரம்பரியம் மிக்க நாடுகள் என்பதையும், இருநாடுகளின் திருமண நடைமுறைகள் பற்றியும் பல தகவல்களை தள்ளி தருவதாய் இந்நிகழ்ச்சி அமைந்தது. பொதுவாக இளைஞர்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்த பிறகு தான் திருமண வாழ்வை பற்றி சிந்திக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டோம்.

கலை அடுத்ததாக, ஈரோடு எம்.சி.பூபதி செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். பாகிஸ்தானில் அடிக்கடி நிகழும் குண்டுவெடிப்புகள் ஆசியாவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாய் உள்ளன. ஆயுதங்களால் அழிவுகளை ஏற்படுத்தும் நிலைமை முற்றிலும் ஒழிக்கப்பட்டால் தான் பிரதேச அமைதி வளரும். மேலும், சீன தமிழொலி இதழ் பல்வண்ண கலவையுடையதாய் மிகவும் நேர்த்தியாக உள்ளது. நான் படித்துவிட்டு பிறருக்கு கொடுத்து படிக்க சொல்கிறேன். இவ்வாறு செய்வது நமது வானொலி பற்றிய சிறு பரப்புரையாக அமைந்து விடுகிறது.

தமிழன்பன் தொடர்வது, சோமனூர் எம். சோமசுந்தரம், ஷாங்காய் உலகப் பொருட்காட்சி பற்றி அனுப்பிய கடிதம். சீனாவில் கடந்த ஆண்டு அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட நிதித்தொகை உள்ளிட்ட பல விபரங்களை இந்நிகழ்ச்சி அறிவித்தது. அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி சீனாவில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களும் விளக்கப்பட்டன. உலகிலுள்ள அனைவரும் எல்லா வசதிகளையும் வெளிக்காட்டி அனைவரும் தொழில்நுட்ப சாதனைகள அறிந்து வளர வேண்டும் என்ற உலகப் பொருட்காட்சியின் கருத்து, உலக வளர்ச்சிக்கு முத்தாய்ப்பாய் அமைகிறது.

கலை இனி, ஆந்திரா அசுவபுரத்திலிருந்து எழுதும் மும்பை சுகுமார் சீனப் பண்பாடு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். இந்நிகழ்ச்சியில் தற்போது இடம்பெற்று வரும் தாவ் மதம் பற்றிய தகவல்கள் சுவாரசியமாக இருக்கினறன. பல தகவல்கள் இந்தியாவின் பண்டைகால மற்றும் இக்காலத் வழக்கங்களில் தொடர்பை வெளிப்படுத்தகின்றன. ஆழமான ஆராய்ச்சிகள் மேற்கொண்டால் வியப்பூட்டும் உண்மைகள் வெளிப்படும் என்று நம்புகிறேன்.

தமிழன்பன் அடுத்து, இலங்கை வாகரை மகேஸ்வரம் காந்தீபன் சீன வானொலி தமிழ்ப் பிரிவு நிகழ்ச்சிகள் பற்றி அனுப்பிய கடிதம். சீனாவிலிருந்து தமிழ் செய்தித் தொடர்பு சேவையாற்றி வரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டு வருகின்றேன். நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அறிவிப்பாளரின் அயராத உழைப்பை உணர முடிகிறது. சீனத் தமிழொலி இதழ் தித்திக்கும் சுவையொலி.

கலை தொடர்வது, அறிவியல் உலகம் நிகழ்ச்சி பற்றி சென்னை ரேணுகாதேவி எழுதிய கடிதம். பக்கவாதத்தால் ஆற்றலிழந்தோரை இசை சிகிச்சை மூலம் செயல்பட வைப்பது, எரிமலை பேரழிவு, இந்திர மனிதன் மூலம் மீட்புதவி பணிகள், இதய பாதுகாப்பு, உயிரின டிஎன்ஏ ஆய்வு ஆகியவற்றை அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் தொடர்ந்து கேட்டு மகிழ்ந்தோம். வாழ்வோடு மிக நெருக்கமான அறிவியல் தகவல்களை வழங்கி வரும் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு நன்றிகள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040