• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
12 இணையப்பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சி பற்றி கருத்துக்கள்
  2010-11-11 11:19:34  cri எழுத்தின் அளவு:  A A A   
மதுரை 20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

கடந்த ஐந்து ஆண்டுகளில் சீனா பல இயற்கை இடர்பாடுகளை சந்தித்து, சீன பொருளாதாரம் கடுமையான அறைகூவல்களை தாக்குபிடித்துள்ளதை அறிந்து கொண்டேன். மேலும் உள்நாட்டு தேவையை ஊக்குவிப்பு கொள்கைகள் மூலம் சீனா பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளது. சீனாவின் பொருட்கள் உலகெங்கும் பரவி வருகிறது. உலகளவில் மிக முக்கிய சக்தியாக தனது பொருளாதரத்தை வளர்க்க சீனா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது இதன் மூலம் தெளிவாகிறது.

புதுக்கோட்டை ஜி வரதராஜன் அனுப்பிய மினன்ஞ்சல்

சீனாவின் நெடுஞ்சாலை வளர்ச்சி செய்தி விளக்கத்தில் செவிமடுத்தேன். உயர்வேகத் தொடர்வண்டிகள் சீனாவில் இந்த காலக்கட்டத்தில் விரைவாக வளர்ந்து வருவதால், நகரங்களுக்கிடை இடைவெளியை குறைப்பதில் சீனா முதலிடம் பெற்று விரைவாக வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது. கிராமபுற மக்களின் போக்குவரத்து சேவையிலும் சீனா முத்திரை பதித்து வருவதை பாராட்டியாக வேண்டும். சீனாவின் நெடுஞ்சாலை துறை வளர்ச்சி ஒரு சகாப்தம்.

வளவனூர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மினன்ஞ்சல்

சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில், திபெத்தின பாரம்பரிய திருமண விழா என்ற கட்டுரையைக் கேட்டேன். அப்போது, திபெத்தின திருமண விழா ஒன்றினை நேரில் கண்டு மகிழ்ந்த உணர்வு ஏற்பட்டது. ஜோகாமா பெரியம்மா என்பவரின் வீட்டில் நிகழ்ந்த திருமண நிகழ்வில், மணமகனை விட மணமகளுக்கு அதிகப் பங்கு உண்டு என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய குடும்பத்திற்கு தலைமை தாங்கும் மனப்பக்குவத்தினை, ஒரு பெண்ணுக்கு இதுபோன்ற திருமண விழாவே ஏற்படுத்தித் தரும் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. சுவையான, பாரம்பரியம் மிக்க கட்டுரை ஒன்றை வழங்கியதற்கு என் நன்றி.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சிறப்பாக நிறைவுற்றதை அறிந்தேன். அதனை உலகளவில் கோடிகணக்கனோர் கண்டு களித்ததோடு, உலக நாடுகளுடன் உள்ள நட்புறவை சீன ஆழமாக்கவும் வளர்க்கவும் பயன்பட்டது எனலாம். மேலும் உலக அமைதியை தூண்டுவதற்கும் இது போன்ற பொருட்காட்சிகள் உதவும் என்பதை சீன அரசு உலக மக்களுக்கு வெளிபடுத்தியுள்ளது பாராட்டத்தக்கதாகும்.

தார்வழி பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்

நட்பு பாலம் நிகழ்ச்சியில் பெய்சிங்கில் நடைப்பெற்ற பொருளாதரக் கருத்தரங்கில் கலந்துகொன்ட ஜேக்கப் பார்த்திமாவையும் அவரது கணவரையும் சந்தித்து உரையாடிய பதிவின் முதல் பகுதியைக் கேட்டேன். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் தனிசிறப்பு மிக்க உணவு வகையான மீன் செதிலுணவு சமையல் பற்றி கேட்டேன். மீன்செதிலையும் சாப்பிடலாம் என்பதை கேட்டு வியந்தேன். அதிலிருக்கும் சத்தை கேட்டபோது தான் அது தனிசிறப்புமிக்க உணவு என்பதை உணர்ந்தேன்.

சென்னை சாரல் கண்ணா அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் மூன்றாம் தலைமுறை இணையதள சேவை மாபெரும் வளர்ச்சி கண்டு இருப்பதை செய்திகளில் அறிந்தேன். 3 கோடியே 49 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருவது மூன்றாம் தலைமுறை இணையதள சேவையின் விரைவான பரவலை எடுத்துக்காட்டுகிறது. அறிவியல் வளர்ச்சிக்கேற்ப அரசும் மக்களுக்கு அனைத்து துறைகளிலும் நுட்பங்களை புகுத்தி வளமான சேவையை அளித்துவருவதற்கு பாராட்டுக்கள். மூன்றாவது தலைமுறை இணையதளச் சேவை வலைப்பின்னல் சீனா முழுவதும் கிடைக்க வசதி ஏற்படுத்தியிருப்பது சிறந்த வளர்ச்சியைக் காட்டுகிறது.

ஊத்துக்குளி க.ராகம் பழனியப்பன் அனுப்பிய மின்னஞ்சல்

யாங்சி மூமலை பள்ளத்தாக்கு நீர் சேமிப்பு திட்டபணி மிகவும் சிறப்பாக உள்ளதையும், அதன் பயன்கள் அதிகமாக இருப்பதையும் செய்தியறிக்கையில் கேட்டு வியந்துபோனேன். சின்ன நீர் தேக்கம் கட்டவே பல்வேறு பிரச்சனைகள் எழுகின்ற இக்காலத்தில், நீர் சேமிப்பு திட்டப்பணியை பல்நோக்கு பயன்மிக்க திட்டமாய் உருவாக்கியிருக்கும் சீன அரசுக்கு பாராட்டுக்கள்.

திருச்சிஅண்ணாநகர் வி.டி இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

ஆசியப் பசிபிக் பிரதேச குழந்தைகளின் உரிமைகள் பற்றிய சர்வதேச ஒத்துழைப்பு குறித்த உயர் நிலை கூட்டம் பற்றிய செய்திவிளக்கம் கேட்டேன். ஆசியப் பசிபிக் பிரதேசத்தின் 28 நாடுகளின் உயர் நிலை தலைவர்களும், ஐ.நா குழந்தைகள் நிதியத்தின் பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, குழந்தைகளின் உரிமைகள் பற்றி நெடுநோக்கு பேச்சுவார்த்தையை நடத்தி, குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவது குறித்த ஒத்துழைப்பை ஆய்வு செய்திருப்பது இப்பிரதேசத்தின் குழந்தைகளின் நலனில் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது.

முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

முழுமையாக சீனாவின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கபட்டு சந்திரனை ஆய்வு செய்துவரும் சாங்ஏ-2 செயற்கைக்கோள் அண்மையில் எடுத்து அனுப்பிய "ஹோங்வான் பகுதியின்" நிழற்படங்களை தமிழ்ப்பிரிவின் இணையதளத்தில் பார்த்தேன். சந்திரமண்டல பாறைகளின் நிழற்படங்களைப் பார்த்து வியப்படைந்தேன். சாங்ஏ-2 செயற்கைக்கோள், அதன் 6 திட்டப்பணிக் கடமைகளையும் முழுமையாக நிறைவேற்றி, வெற்றிபெற வாழ்த்துக்கள். சீனாவின் வானிலை ஆராய்ச்சிக்கு இந்த செயற்கைக்கோள் முழுமையாக பணியாற்ற ஆராய்ச்சியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதையும் அறிந்தேன்.

மீனாட்சிபாளையம் கா. அருண் அனுப்பிய மின்னஞ்சல்

இந்திய சீன தூதாண்மை உறவு நிறுவப்பட்டு 60வது ஆண்டு நிறைவடைவதை ஒட்டி சீனவானொலி, இந்திய நட்புறவுசங்கம் மற்றும் இந்திய தூதரகம் இணைந்து நடத்துகின்ற இந்தியப் பாடல் மற்றும் நடனத்தை சீனர் அரங்கேற்றும் போட்டி துவங்கியதை இணையத்தில் படித்தேன். மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி. இதுபோன்ற செயல்பாடுகள் இருநாட்டு மக்களிடையே பிணைப்பை வலுப்படுத்துவதாக அமையும்.

உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்

கேள்வியும் பதிலும் பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்பு எதிர்ப்புக்கு வடகொரியாவுக்கு சீனாவின் உதவி என்கிற உரையாடல் வரலாற்றினை ஒரு நிமிடம் பின்னோக்கி பார்க்க செய்தது. ஆக்கிரமிப்பு அகற்றும் உதவிப் போரின் வெற்றியின் இன்பத்தில் பல உயிர்களை இழந்த சோகமும் இழையோடுவதால் நிச்சயமாக நினைவுகூர வேண்டிய முக்கிய நிகழ்வு இது. அந்த வகையில் வடகொரியாவுக்காக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் சீனர்கள் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளதை அறியும்போது கண்ணில் நீர் வடிகிறது. அந்த வரலாற்று நாயகர்களுக்கு எங்கள் மாவட்ட நேயர்களின் சார்பாக வீர வணக்கங்கள்.

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மினன்ஞ்சல்

இன்றைய செய்திகளும் செய்தித்தொகுப்பும் இந்தியா சீனா பற்றியதாக இருந்தன. இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினை இருந்தபோதிலும் நட்பு ஒத்துழைப்பு வர்த்தகத்தில் நல்ல உறவே தென்படுகிறது என்பதுதான் இன்றைய செய்திகளின் சாரம். இந்திய சீன வர்த்தகமும் ஒத்துழைப்பும் சீனத் தலைமை அமைச்சரின் இந்தியப் பயணத்தினால் மேலும் வலுப்படும். இருநாடுகள் இடையே சுற்றுலாப் பயணிகள் எளிதாகச் சென்றுவரும் சூழ்நிலையை உண்டாக்க வென்சியாபாவ் அவர்களின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமையும் என்று நம்புகின்றேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040