• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பட்டினியை நீக்குவதில் முக்கிய சக்தியாக விளங்கும் சீனா
  2010-11-15 10:46:22  cri எழுத்தின் அளவு:  A A A   








கிளீடஸ்........கலை கடந்த சனிக்கிழமை ஒலிபரப்பான கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நீங்கள் புஷ்பா ரமணியுடன் இணைந்து கடந்த 34 திங்களில் சீன மத்திய வங்கி வங்கி வட்டி விகிதத்தை அதிகரிப்பது பற்றிய முக்கியத்துவம் பற்றி விவாதம் நடத்தினீர்கள்.

கலை......ஆமாம். வெளிநாடுகளில் வாழ்கின்ற நமது நேயர் நண்பர்கள் சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை அதிகமாக அறிந்து கொள்ள உதவுவதே வங்கி வட்டி விகித அதிகரிப்பு பற்றிய நிகழ்ச்சியை உருவாக்கியதன் நோக்கமாகும்.

கிளீடஸ்........இப்போது உரையாடல் வடிவத்தில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அரங்கேறுவதை கவனித்து வருகின்றேன்.

கலை......நுணுக்கமாக கவனித்துள்ளீர்கள். இந்த முயற்சி எப்படி?

கிளீடஸ்........ நல்லது. உரையாடல் முறையில் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது என் விருப்பம்.

கலை...... அப்படியிருந்தால் உங்கள் அனைவரிடமிருந்து உதவி பெற நானும் தயார். உங்கள் ஒத்துழைப்பு எனக்கு உண்டா?

கிளீடஸ்........கண்டிப்பாக. இதிலே ஐயம் எதுவும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் உங்களுக்கு உதவிக்கரம் நீட்ட நாங்கள் தயார்.

கலை......மிக்க நன்றி.

கிளீடஸ்........இன்றைய நிகழ்ச்சியில் நாம் எதை பற்றி விவாதிக்கப் போகிறோம்?

கலை......பட்டினிப் பிரச்சினையை நீக்குவதில் சீனாவின் பங்கு பற்றி நாம் விவாதிக்கலாம்.

கிளீடஸ்........சரி. பட்டினிப் பிரச்சினை உலகின் அனைத்து நாடுகளும் மிகவும் கவனம் செலுத்தும் கடினமான ஒரு பிரச்சினையாகும்.

கலை......இந்த பிரச்சினையைத் தீர்க்க சீனா மாபெரும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.

கிளீடஸ்........ஆமாம். இத்துறையில் சீனா பெற்றுள்ள மாபெரும் சாதனைகள் உலக அளவில் மிகவும் பாராட்டத்தக்கவை.

கலை......இத்துறையில் உலக உணவுத் திட்ட அலுவலகம் சீனாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி மேலும் அதிகமான நாடுகளை வறுமையிலிருந்து விடுபடச் செய்ய விரும்புகின்றது.

கிளீடஸ்........ இத்தாலியின் தலைநகர் ரோமில் அமைந்துள்ள உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் செயலாளர் Josette Sheeran அம்மையாருக்கு இந்த ஒத்துழைப்பு பற்றி தனிப்பட்ட ஒரு கருத்து உண்டு.

கலை...... அப்படியிருந்தால் அவருடைய கருத்தை விபரமாக சொல்லுங்கள்.

கிளீடஸ்........ மகிழ்ச்சி. Josette Sheeran அம்மையார் இது குறித்து சீனச் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்.

கலை.......பேட்டியளிக்கும் போது Josette Sheeran அம்மையார் என்ன சொன்னார்

கிளீடஸ்....... 1979ம் ஆண்டில் சீனா உலக உணவுத் திட்ட அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக கலந்து கொண்டது முதல் இதுவரை பட்டினிப் பிரச்சினையை நீக்குவதில் நம்ப முடியாத சாதனைகளை பெற்றுள்ளது. இந்த சாதனைகள் உலகின் மற்ற நாடுகள் பெற்ற சாதனைகளை விட குறிப்பிடத் தக்கவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

கலை...... இதற்கிடையில் பட்டினியை நீக்கும் போராட்டத்தில் சீனா வெற்றி பெற்ற பின் உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் மூலம் இதர நாடுகளுக்கு உதவி வழங்க உற்சாகத்துடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கிளீடஸ்........ சீனா பட்டினியை நீக்குவதில் வெளிக்கொணர்ந்துள்ள செல்வாக்கை மதிப்பிட்ட போது அவர் கூறியதாவது.

கலை...... சீனா உலக உணவுத் திட்ட அலுவலகத்திலிருந்து அதிகளவில் உதவி பெற்ற நாடுகளில் ஒன்றாகயிருந்தது. இன்று இதர நாடுகளில் நாங்கள் மேற்கொண்ட பட்டினி நீக்கும் நடவடிக்கைகளுக்கு சீனா உதவிக்கரம் நீட்டி வலுவான ஆதரவும் அளித்து வருகிறது. சீன மக்களுக்கு நன்றியுடையர்களாக நாங்கள் இருக்கின்றோம். ஏனென்றால் ஹெய்தி மற்றும் பாகிஸ்தானில் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா உடனடியாக பேரளவில் உதவி வழங்கியதோடு சிறப்பு நிதியையும் நன்கொடையாக வழங்கியுள்ளது. எமது அலுவலகம் ஏற்பாடு செய்த குழந்தைகளுக்கான பள்ளி சிற்றுண்டித் திட்டத்திற்கு சீனா 2005ம் ஆண்டுமுதல் பல முறை நிதியை வழங்கியுள்ளது. உயிர் ஆபத்து நிலையில் சிக்கியுள்ள 10 கோடி குழந்தைகளுக்கு சீனா உதவி வழங்கியுள்ளது. இது மிகவும் மதிப்புக்குரிய உதவியாகும்.

கிளீடஸ்........நமது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தமது சீனப் பயணத்தில் சீன தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது, பட்டினியை நீக்கும் போராட்டத்தில் சீனா உலகத்திற்கு அளித்த ஆதரவு ஆகியவை தவிர, பட்டினியை நீக்குவதில் சீனா பெற்றுள்ள வெற்றிகரமான அனுபவங்களை மேலும் அதிகமான நாடுகளுக்கு அறிமுகப்படுத்தும் நெடுநோக்கு ஒத்துழைப்பை மேற்கொள்வது பற்றியும் சீனத் தலைவர்களுடன் முக்கியமாக ஆராயப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

கலை...... இது பற்றி உலக உணவுத் திட்ட அலுவலகம் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் பட்டினி நிலைமையை அறிந்து கொண்டுள்ளது.

.....................உரை 2............

கிளீடஸ்........ Josette Sheeran அம்மையார் குறிப்பிட்டது போல உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 50 விழுக்காட்டினர் வேளாண் துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் உள்ள தானிய அளவு அவர்களது குடும்பத்தின் தானியத் தேவையை நிறைவு செய்ய முடியாது.

கலை...... அவர்களின் வாழ்வுச் சூழ்நிலையை சீனா நன்றாக அறிந்து கொண்டு அவர்களுக்கான உவதிப் பணியை பெபுமளவில் முன்னேறியுள்ளது.

கிளீடஸ்........ உலகில் பட்டினியால் அல்லல்படும் விவசாயிகளுக்கு உதவ சீனாவிடமிருந்து ஒத்துழைப்பும் உதவியும் பெற உலக உணவுத் திட்ட அலுவலகம் விரும்புகின்றது என்று Josette Sheeran அம்மையார் கூறினார்.

கலை...... இதற்கிடையில் சீனா இவ்வலுவலகத்துடன் சில நாடுகளிலுள்ள அடிப்படை சாதனங்கள் பற்றிய பிரச்சினைகள் பற்றி ஒத்துழைப்பு மூலம் ஆராய்ந்துள்ளது.

கிளீடஸ்........ நமது நேயர் நண்பர்களுக்கு இது பற்றிய எடுத்துக்காட்டுகளை அறிமுகப்படுத்தினால் மேலும் சிறப்பாக இருக்கும்.

கலை...... சரி, தான்சானியாவில் வாழ்கின்ற விவசாயிகள் இதர நாடுகளுக்கு தானியத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. இந்த பிரச்சினையை தீர்க்க சீனா தான்சானியாவுக்கு சாலை மற்றும் அடிப்படைச் சாதனங்களின் கட்டுமான உதவியை வங்கியுள்ளது.

கிளீடஸ்........ தவிரவும் எதிர்பாராதவாறு நிகழும் இயற்கை சீற்றத்தை சமாளிப்பதில் சீனாவுக்கு மிக அதிகமான அனுபவங்கள் உண்டு. உலக உணவுத் திட்ட அலுவலகத்துக்கு சீனா சிறந்த அவசரச் செயல்பாட்டுத் திட்டத்தை உருவரைய உதவி வங்கியுள்ளது.

கலை...... உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் மூலம் சீனா பலதரப்பட்ட சர்வதேச உதவி மற்றும் ஒத்துழைப்புக்கு பங்கு ஆற்றியுள்ளது.

கிளீடஸ்........ உலகிலும் ஐ.நாவிலும் சீனா மாபெரும் செல்வாக்கு கொண்டுள்ளது. சீனா தனது கவனத்தை குறிப்பிட்ட ஒரு கருத்தில் அல்லது துறையில் வைக்கும் என்றால் இதர நாடுகளின் பார்வையும் அதில் வைக்கப்படும் என்று Josette Sheeran அம்மையார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கலை......சீனா பட்டினியை நீக்குவதில் ஆற்றிய பங்கை மதிப்பிட்ட போது Josette Sheeran அம்மையார் மேலும் கூறியதாவது.

கிளீடஸ்........ உலகில் தானிய நெருக்கடி பரவிய போது சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் ஐ.நா பொது பேரவைக் கூட்டத்தில் மிகவும் ஆற்றல் வாய்ந்த உரைநிகழ்த்தி உலக உணவுத் திட்ட அலுவலகத்துக்கான ஆதரவை பெரிதாக்குமாறு பல்வேறு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கலை...... சீனா பட்டினியை நீக்குவதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த தீர்க்கமான கூட்டாளியாக மாறியுள்ளது. சீனா உலக உணவு திட்ட அலுவலகத்தின் பணியில் கலந்து கொண்ட பின் உலகத்திற்கு முக்கிய நலன் தந்துள்ளது.

கிளீடஸ்........உலக உணவுத் திட்ட அலுவலகத்தின் செயலாளர் Josette Sheeran அம்மையார் 80ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் சீனாவில் முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பின் குறைந்தது 20 முறை சீனாவில் பயணம் மேற்கொண்டு தானே சீனாவில் ஏற்பட்டுள்ள மாபெரும் மாற்றங்களை கண்டறிந்தார்.

கலை...... இது பற்றி அவர் மேலும் கூறியதாவது.

இந்த நாட்டில் எதிர்கால நம்பிக்கை நிறைந்துள்ளது மிகவும் முக்கியமானது. சீனா தற்போது இன்னும் பல அறைகூவல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தாலும், சீன மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்க்கையை எதிர்நோக்கும் மனப்பான்மையை கொண்டுள்ளனர். இதை கண்டு நான் மிகவும் வியப்படைகின்றேன்.

கிளீடஸ்........ கடந்த சில ஆண்டுகளில் பட்டினியை நீக்கும் போராட்டத்தில் பல நாடுகள் மாபெரும் முன்னேற்றமடைந்துள்ளன.

கலை...... ஐ.நாவின் புத்தாயிரமாண்டு வளர்ச்சி இலக்கில் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் தொகையை 50 விழுக்காடாக குறைக்கும் அம்சம் சீனா, பிரேசில், வியட்நாம், கானா உள்ளிட்ட நாடுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகில் 30 நாடுகள் உலக உணவுத் திட்ட அலுவலகத்திலிருந்து உதவி தேவைப்படாத நாடுகளாக மாறியுள்ளன. மேலும் முக்கியமாக குறிப்பிட்டால் இந்த நாடுகள் பட்டினியை நீக்கிய அதேவேளையில் சமூகத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு மேலும் அதிகமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

கிளீடஸ்........ கூட்டு வெற்றி பெறுவதென்ற இந்த வடிவம் ஒரு நம்பிக்கை எண்ணமாகும். அதாவது பட்டினியை நீக்கும் போராட்டம் வெற்றி பெறும் என்பதாகும்.

கலை....... பட்டினியை நீக்கும் போராட்டத்தில் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் பற்றி Josette Sheeran அம்மையார் கூறியதாவது.

கிளீடஸ்...... இந்த வெற்றியை பெறுவதற்கு நாடுகளின் தலைவர்களது மனவுறுதி மிகவும் முக்கியமானது.

கிளீடஸ்...... இது நாட்டின் எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தி நிதானப்படுத்துவதற்கான அடிப்படையாகும்.

கலை....... பட்டினியை நீக்க நமக்கு திறமை உண்டு.

கிளீடஸ்...... இதை நிறைவேற்ற நமக்கு ஆற்றல் உண்டு.

கலை....... பட்டினி இறுதியில் மனித குலத்தின் பார்வையிலிருந்து மறைந்துபோகும்.

கிளீடஸ்......இது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று நாம் உறுதியுடன் நம்புகின்றோம்.

கலை....... சரி நேயர்களே உலக உணவுத் திட்ட அலுவலகம் உலகில் பட்டினியை நீக்கும் போராட்டத்துக்கு சீனா ஆற்றிய பங்கு குறித்து தெரிவித்த மதிப்பான கருத்தை கேட்டீர்கள்.

கிளீடஸ்......அடுத்த சனிக்கிழமை இடம் பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.

கலை......நிகழ்ச்சியை கேட்ட பின் ஒரு வரி எழுதுங்கள்.

கிளீடஸ்.......வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040