• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜனவரி 5ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதி
  2011-01-07 17:45:47  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜனவரி 5ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதியில் 9 இணையப்பயன்பாட்டாளர்கள் பங்கு கொண்டுள்ளனர். அவர்களின் கருத்துக்களை படியுங்கள்.

இன்றைய மின்னஞ்சல் பகுதியில் முதலில், புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ள றேயர்களை யார் யாரென்று பார்ப்போம்.

செந்தலை பாலமுரளி, பேளுக்குறிச்சி. செ.இந்திரா செந்தில், இலங்கை ரக்கீப், இரவிச்சந்திரன் சேந்தமங்கலம், க.கனகம் பேளுக்குறிச்சி, பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால், திமிரி- புலவர். வீர.இராமதாஸ் காங்கேயம் பி.நந்தகுமார், ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்து அனுப்பியுள்ளனர்.

N.பாலகுமார், N. உமாசங்கர் U.கல்பனா U காயத்திரி, U . ஜோதிலட்சுமி இந்த 5 நேயர்களும், சீன வானொலி பணியாளர்கள் பதினாறும் பெற்று, அதாவது 16 வகையான செல்வங்களையும் பெற்று வாழ வேண்டுமென்று வாழ்த்தியுள்ளார்கள்.,முனுகபட்டு பி.கண்ணன்சேகர், இவர் 7 மின்ஞ்சல்களில் 7 விதமான புத்தாண்டு வாழ்த்துப்படங்களை இணைத்து அனுபியுள்ளார். வாழ்த்து அனுப்பிய அனைத்து நேயர்களுக்கும் எமது நன்றி.

ஸ்ரீதர்

இந்திய சீன நட்புறவு பாலமாக செயல் படும் உங்கள் சேவைக்கு நன்றி. உங்கள் சேவை என்றென்றும் தொடர உளமாற விழைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும். உங்களுக்கு எங்களது நன்றி.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங்

சீனாவின் உயர்வேக இருப்புப்பாதையின் வளர்ச்சி என்னும் சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி அருமையிலும் அருமை.அதாவது சீனா தற்போது உயர்வேக இருப்புப்பாதை 7531- லோமீட்டரை எட்டி உலகில் முதல்இடம் வகிப்பது பாராட்டத்தக்கதாகும். அது மட்டுமல்லாமல் பயணிகளின் பாதுகாப்பிலும்,கட்டுமானத்திலும் மிக அதிக முக்கியத்துவம் செலுத்துவதில் சீனாவுக்கு நிகர் சீனாதான் என்பதை சீன அரசு நிரூபித்ததை எப்படி பாராட்டினாலும் தகும்.

எஸ்.பாண்டியராஜன், விழுப்புரம்.

கடந்த ஒரு வாரமாகத் தொடர்ந்து நிகழ்ச்சிகளைக் கேட்டு வருகிறேன். எல்லாமே அற்புதம். சுவையானது. எங்களின் தேடலுக்கு வழிகாட்டியாக இருந்தது என்றுதான் கூற வேண்டும். நிகழ்ச்சிகள் அனைத்தும் அருமை. எந்த நிகழ்ச்சியை உயர்த்திச் சொல்வது என்றே தெரியவில்லை. எல்லாமே மனம் கவர்ந்த நகழ்ச்சியாக இருக்கிறது. நிகழ்ச்சி சிறந்ததா அல்லது வழங்கிய முறை சிறந்ததா என்று பட்டிமன்றமே நடத்தலாம். பாராட்டுக்கள்.

பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார்

டிசம்பர் திங்கள் 29அன்று நேர்க்கு நேர் பகுதியில் இடம் பெற்ற ஈரோடு சி சுந்தர்ராஜ் அவர்கள், அவர் குடும்பம் சீன வானொலி நேயர் வட்டம் வானொலி கேட்கத் துவங்கியது பழைய நேயர் களிடம் கற்றது, சீனவானொலி கருந்தரங்கு கூட்டத்தில் கலந்த கொண்ட அனுபவம் பலவற்றை பகிர்ந்து கொண்டார். அனைத்தும் சிறப்பக இருந்தது நிகழ்ச்சி மிக சிறப்பு நன்றிகள் பல.

செந்தலை பாலமுரளி N.S

30/12/2010 அன்று செய்திகள் கேட்டேன் . விலைவாசி கட்டு்ப்பாடு, நாணயக் கொள்கையின் முக்கிய இலக்காகும் என்று சீன மத்திய வங்கியின் கணக்கீட்டுப் பிரிவுத் தலைவர் Sheng Song Cheng 29ம் நாள் மத்திய வங்கியின் இணையத் தளத்தில் வெளியிட்ட கட்டுரை மிக முக்கியமானது ,அது பொருளாதாரம் சீராக இயங்கும் காலத்தில், மத்திய வங்கி விலைவாசியின் கட்டுப்பாட்டிற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கிறது. பொருளாதாரம் மந்தமாக இருக்கும் காலத்தில் அல்லது பொருளாதார நெருக்கடி நிகழும் காலத்தில், மத்திய வங்கி பொருளாதார அதிகரிப்பை மேலதிகமாக கருத்தில் கொள்ளும். பொதுவாக, விலைவாசி கட்டுப்பாடு, நாணயக் கொள்கையின் முக்கிய இலக்காகும் என்று இக்கட்டுரை கூறுகிறது.

க.ராகம் பழனியப்பன்

30.12.2010 அன்று செய்தி கண்ணேட்டத்தில் நாணயக்கொள்கையின் மூலம் மத்திய வங்கி மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி சிறப்பாக இருந்ததது பாராட்டுக்கள்.

புதுக்கோட்டை ஜி வரதராஜன்

விலைவாசியை எப்படி கட்டுப்படுத்தி மக்களின் நன் மதிப்பை பெறுவது என ஒவ்வொரு நாடும் யோசித்து வரும் வேளையில் சீனா சத்தமின்றி புத்தாண்டை வரவேற்கும் வகையில் வசந்த விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடி மகிழ விலை வாசியை கட்டுப்படுத்திட அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.சந்தையின் வினியோகத்தை உத்தரவாதம் செய்திடும் வகையில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் மக்கள் எளிதாக கொண்டாடி மகிழ முடியும்.

பாண்டிச்சேரி ஜி. ராஜகோபால்,

சீன அரசுத் தலைவர் ஹுசிந்தாவ் அவர்கள் புத்தாண்டு வாழ்த்துரை வழங்கியதைக் கேட்டு ரசித்தேன். மிகவும் நன்றாக இருந்தது. 2010ம் ஆண்டு சீனாவைப் பொறுத்தவரை அசாதாரண ஆண்டாக அவர் கூறியதும், சீனாவின் உள்நாட்டுச் சூழ்நிலையின் சிக்கலான மாற்றங்களை எதிர்நோக்கிய போதிலும், எல்லாவற்றையும் சமாளித்த விதம் பற்றிகூறியது அருமை. உலக வளர்ச்சியின் எதிர்காலம் மேலும் செழுமை அடையும் என தனது புத்தாண்டு வாழ்த்துரையில் கூறியுள்ளது நிச்சயமான உண்மை. வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

ஆர்.அமுதாராணி, மதுரை-20

பெய்ஜிக்கில் உள்ள பொது இடங்களில் புகை பிடிக்க தடை

சீனாவில் அடுத்த 5ஆண்டுகளில் புகை பிடிப்பதுத் தடை செய்யப்படும். பெய்ஜிக்கில் வலுப்படுத்தப்படும். இக்கனவை 2015ம் ஆண்டு இறுதிக்குள் நனவாக்க பெய்ஜிக் பாடுபடும் என தெரிகிறது. இத்திட்டம் வெற்றிபெற வாழ்த்துகள். உங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040