• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2010ம் ஆண்டு கடிதப் பணித் தொகுப்பு
  2011-01-28 23:25:08  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.......இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் முக்கியமாக கடந்த ஆண்டின் கடித பணித் தொகுப்பு பற்றி கூறுகின்றோம்.

கிளீடஸ்......2010ம் ஆண்டில் தமிழ்ப் பிரிவுக்கு 5 லட்சத்து 60 ஆயிரத்துக்கு மேலான கடிதங்களும் மின்னஞ்சல்களும் கிடைத்தன.

கலை.......இந்த எண்ணிக்கையைக் கேட்கும் போது தேன் மொழி மற்றும் மோகன் எவ்வளவு முயற்சி செய்து கடிதங்களைக் கையாளும் பணியை அயராமல் மேற்கொண்டனர் என்பதை எண்ணி அவர்களுக்கு இங்கே நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவிக்க வேண்டும்.

கிளீடஸ்......ஆமாம். அவர்கள் இருவரும் நன்றாக சிந்தித்து பல யோசனைகளை முன்வைத்தனர். அன்றாட பணி முயற்சியில் அவர்கள் தாமதமின்றி நேயர்களிடமிருந்து கடிதங்களை பெற்றவுடன் பதிலளிக்க மாபெரும் முயற்சிகளை செய்தனர் அலுவலகத்துக்கு வந்தவுடன் செயல்படுவது கணினியைத் திறத்து மின்னஞ்சல்களை கையாள்வது அவர்கள் அன்றாட வேலையை துவக்குவதன் முக்கிய அம்சமாகும்.

கலை.......ஆகவே அவர்களின் அயரா உழைப்பின் மூலம் தமிழ்ப் பிரிவுக்கு நல்ல அமோக அறுவடை கிடைத்தது எனலாம்.

கிளீடஸ்......அவர்களின் முயற்சியுடன் எமது நேயர்களும் இணையப்பயன்பாட்டாளர்களும் தமிழ்ப் பிரிவின் மீது காட்டிய ஆர்வமும் உற்சாகத்துடன் பங்கு கொண்ட விதமும் குறிப்பிடத்தக்கவை.

கலை.......ஆமாம். என் ஞாபகத்தில் குறைந்தது 10 நேயர்கள் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர்.

கிளீடஸ்......கிட்டத்தட்ட 300க்கும் மேலான நேயர்கள் உங்கள் குரல் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.

கலை.......குறைந்தது 12 நேயர்கள் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டுள்ளனர்.

கிளீடஸ்......நட்புப் பாலம் நிகழ்ச்சியில் குறைந்தது 15 நண்பர்களை பேட்டி கண்டு நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்.

கலை.......ஆமாம். எங்கள் நிகழ்ச்சிகளின் பலனை மீளாய்வு செய்யும் போது நேயர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் பங்கு கொண்டு நமது நிகழ்ச்சிகளுக்கு மெருகூட்டியது சிறப்பாக எமது நினைவில் நிற்கிறது.

கிளீடஸ்......குறிப்பாக கடந்த ஆகஸ்ட் திங்களில் சீனாவின் கேன் சூ மாநிலத்தின் ச்சோச்சியூ மாவட்டத்தில் மணல் சரிவு நிகழ்ந்த செய்தியைக் கேட்டவுடன் உத்திரக்குடி சு கலைவாணன் ராதிகா மின்னஞ்சல் மூலம் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட சீன ச்சோச்சியூ மாவட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து நன்கொடை வழங்க தெரிவித்துள்ளார். அத்துடன் அஞ்சல் மூலம் ஆயிரம் ரூபாய் நன்கொடையை அனுப்பியது இன்னும் ஆழமாக எங்கள் நினைவில் பதிந்துள்ளது.

கலை.......ஆகவே நேயர்கள் ஆற்றிய பங்கை நினைவு கூரும் போது நாம் ஆற்றிய பங்கும் மதிப்புக்குரியதே என்று ஆறுதலடைந்துள்ளோம்.

கிளீடஸ்......கலை கடந்த ஆண்டில் பல நேயர் மன்றங்களும் விறுவிறுப்பாக செயல்பட்டுள்ளன.

கலை.......ஆமாம். ஆகவே சிறந்த நேயர்களையும் சிறந்த நேயர் மன்றங்களையும் தேர்வு செய்யும் போது அதிகமான தெரிவுகள் எமது பார்வைக்கு வந்துள்ளன.

கிளீடஸ்......ஆகவே நாங்கள் முதலில் சிறந்த நேயர்களை தேர்வு செய்யலாம்.

கலை.......நேயர் நேரம் நிகழ்ச்சியை உருவாக்குவது போல முதலில் கடிதங்களை நமக்கு அனுப்பும் நேயர்களிலிருந்து 15 நேயர்களை சிறந்த நேயர்களாக தேர்வு செய்யலாம்.

கிளீடஸ்......அவர்களின் சிறந்த பங்கினை கருத்தில் கொள்வதன் மூலம் 15 நேயர் நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்.

கலை.......நன்றாக சிந்தித்து கடைசியில் 15 நேயர்களை சிறந்த நேயர்களாக தீர்மானித்துள்ளோம்.

கிளீடஸ்......இந்த எண்ணிக்கை 2009ம் ஆண்டில் இருந்ததை விட 5 அதிகரித்துள்ளது.

கலை.......ஆமாம். இன்னும் மன நிறைவு ஏற்படவில்லை. இருந்தாலும் இப்படியே இருக்க வேண்டும்.

கிளீடஸ்......சீக்கிரமாக அவர்களின் பெயர்களை நமது நேயர்களுக்கு அறிவியுங்கள்.

கலை......சிறந்த நேயர்களின் பெயர் பட்டியல் இதோ.

........ சிறந்த நேயர்களின் பெயர் பட்டியல் ....................

1 கீழ்குந்தா, K.K.போஜன் 077085

2 ஊத்தங்கரை கவி செங்குட்டுவன் 053012

3 ஈரோடு, எம். சி. பூபதி 072474

4 மறைமலை நகர், C.மல்லிகாதேவி 058637

5 ஆரணி, J.அண்ணாமலை 077489

6 விழுப்பரம்,.எஸ்.சேகர் 079635

7 திருச்சி, எம்.தேவராஜா 066770

8 ஆரணி பொங் தங்கவேலன் 075527

9 ஈரோடு, C. சுந்தர் ராஜா,080980

10 நாமக்கல்,கவித்துளி சக்தீஸ்வரன் 078929

11 இலங்கை கினிகத்தேனை, P.மூர்த்தி 066969

12 கரூர், C.முருகன் 070138

13 மீனாட்சிபாளையம், கா அருண் 076869

14 செந்தலை N.S.BALAMURALI 075927

15 இலங்கை காத்தான்குடி-5 N.அஹமத் ஷாமசூது 079248

கிளீடஸ்.......சரி கலை கடந்த ஆண்டில் மின்னஞ்சல் பகுதியை பார்த்தால் பல நேயர்கள் அடிக்கடி அவர்களது கருத்துக்களை எழுதி அனுப்பினர். நேயர் நேரம் நிகழ்ச்சியில் அவர்களை பல முறை சந்தித்துள்ளோம்.

கலை......ஆமாம். இந்த அடிப்படையில் பத்து நேயர் நண்பர்களை சிறந்த இணையப்பயன்பாட்டாளர்களாக தேர்வு செய்துள்ளோம். அவர்களின் பெயர்ப் பட்டியலை நீங்கள் வாசியுங்கள்.

கிளீடஸ்.......மகிழ்ச்சி. வாசிக்கின்றேன்.

....சிறந்த இணையப் பயன்பாட்டாளர்களின் பெயர் பட்டியல் ...................

1 முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் 050334

2 தேவநல்லூர் S. செந்தில்குமார் 080760

3 நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் 075657

4 விழுப்புரம், எஸ். பாண்டியராஜன் 050597

5 சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி 070205

6 பாண்டிச்சேரி, ஜி.ராஜகோபால் 051750

7 பெருந்துறை பல்லவி கே பரமசிவன் 050062

8 திமிரி புலவர்.வீர.இராமதாஸ் 073714

9 மதுரை-20 என் இராமசாமி

10 உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா 077197

கலை......நண்பர்களே. சிறந்த நேயர்கள் சிறந்த இணையப் பயன்பாட்டாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை 25 ஆகும். கடந்த ஆண்டில் அடிக்கடி எங்களுடன் தொடர்பு கொண்டு முன்மொழிவுகளையும் கூர்மையான கருத்துக்களையும் முன்வைத்த நேயர்களை பாராட்டும் வகையில் 5 நண்பர்களை தலைசிறந்த நேயர்களாக தேர்வு செய்துள்ளோம்.

கிளீடஸ்.......அவர்கள் யார் யார் வெளிப்படுத்துங்கள்.

கலை......மகிழ்ச்சி. வெளிப்படுத்துகின்றேன்.

.................தலைசிறந்த நேயர்கள்..............

1 வளவனூர் புதுப்பாளையம், S.செல்வம் 056837

2 திருச்சி அண்ணா நகர், V.T.இரவிச்சந்திரன் 057302

3 சேந்தமங்கலம், S.M.இரவிச்சந்திரன் 051906

4 பகளாயூர், P.A .நாச்சிமுத்து 065084

5 கோவை, சு. சரவணமுத்து 079905

கிளீடஸ்.......சரி, இதற்கிடையில் இன்னொரு தொகுப்பின் முடிவை அறிவிக்க வேண்டும்.

கலை......ஆமாம். சிறந்த நேயர் மன்ற பெயர் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும். அப்படிதானே.

கிளீடஸ்.......ஆமாம். 5 சிறந்த நேயர் மன்றங்களை தேர்வு செய்துள்ளோம்.

................. சிறந்த நேயர் மன்றங்கள்.....................

1. ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்

2. திருச்சி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்

3. ஆரணி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் (பொன்.தங்கவேலன்)

4. நாமக்கல் மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்

5. திமிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம்

கலை......நேயர்களே. கடந்த ஆண்டின் சிறந்த, தலைசிறந்த நேயர்கள் மற்றும் நேயர் மன்றங்களின் பெயர்ப் பட்டியல் முழுவதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.

கிளீடஸ்.......புத்தாண்டில் நீங்கள் மேலும் கூடுதலான முன்மொழிவுகளை எங்களுக்கு வழங்குங்கள்.

கலை......மேலும் அதிகமான நேயர்கள் எமது நிகழ்ச்சி தயாரிப்பில் பங்கு கொள்ளுங்கள்.

கிளீடஸ்.......இந்த பெயர்ப் பட்டியல் வானொலி மூலம் அறிவிக்கப்பட்டதுடன் தமிழ் இணையதளத்தில் நீங்கள் வாசிக்கலாம்.

கலை......இதுவரை 2010ம் ஆண்டு சிறந்த தலைசிறந்த நேயர்களின் பெயர்ப் பட்டியலையும் சிறந்த நேயர் மன்றங்களின் பெயர்ப் பட்டியலையும் கேட்டீர்கள்.

கிளீடஸ்.......இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

கலை......அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம். வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040