• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மார்ச் 16ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதி
  2011-03-18 18:11:52  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 16ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதியில் 11 இணையப்பயன்பாட்டாளர்கள் பங்கு கொள்கிறார்கள். அவர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு ரசியுங்கள்.

திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் யூன்னான் மாநிலத்தின் யிங்ஜியான் மாவட்டத்தில் 10ம் நாள் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மிகுந்த துயர் அடைந்தேன். இந்த துயர சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷியலிச சட்ட அமைப்புமுறை, அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதிகளின் மூலம், சீனாவின் அடிப்படை அமைப்புமுறையும் கடமைகளும் உருவாக்கப் பட்டிருப்பதை செய்திகளில் செவிமடுத்தேன். சீனாவில் பல கட்சி ஆட்சி முறையோ, கூட்டாட்சி அமைப்புமுறையோ நடைபெற வாய்ப்பில்லை என்பதையும், தனியார்மயமான அமைப்புமுறையும் சாத்தியமல்ல என்பதையும் அறியத்தந்தீர்கள் இது வரவேற்க வேண்டிய ஒன்று. கூட்டாட்சி, பல கட்சி போன்ற குளறுபடிகளினால் சில நாடுகள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பதை காண்பதன் விளைவாக என்னுடைய இந்த கருத்தினை பதிவு செய்கிறேன்.

திருச்சி துப்பாக்கி தொழிசாலை எம். செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

பொருளாதார வளர்ச்சி வழிமுறையின் மாற்றங்களை விரைவுப்படுத்துவது, சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்தொடரில் கலந்துகொள்கின்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துகிற முக்கிய பிரச்சினையாக மாறியிருப்பதை அறிந்து கொண்டேன். பொருளாதார வளர்ச்சியின்போது தரத்தை முன்னேற்றுவதில், எட்டப்பட்டுள்ள ஒருமித்தக் கருத்து எதிர்காலத்தில் சிறந்த பலன்கள் தரும்.

பேளுக்குறிச்சி க.செந்தில் அனுப்பிய மின்னஞ்சல்

11வது சீன தேசிய மக்கள் பேரவையின் நான்காவது ஆண்டு கூட்டத் தொடரில், நகரங்களில் வாழும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உறைவிட பிரச்சனையைத் தீர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் சீன அரசு இதற்கு முக்கியத்துவம் தருவதை வரவேற்கிறேன். நகரங்களில் அதுபோல குறைந்த வருமானம் பெறும் கிரம மக்களுக்கும் கொள்கை ஆதரவுகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும்.

பொள்ளாச்சி தேவநல்லூர் எஸ்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும், சுனமியாலும் ஏற்பட்ட அழிவுகள் பற்றி சீன வானொலி செய்திகளில் அறிந்தேன். இயற்கை பேரழிவால் அல்லலுறும் பல நாடுகளுக்கு சீனா உதவுவதுபோல, ஜப்பானுக்கும் உடனடி உதவிக்கரம் நீட்டும் என்று நம்புகிறேன்.

மதுரை-20 ஆர்.அமுதாராணி அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானில் நடைபெறும் நிலநடுக்க மீட்புதவிப் பணிகளில் உதவ சீன நடுவண் அரசு மீட்புதவி மற்றும் மருத்துவ அணிகளை அனுப்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது. இது அண்டை நாட்டு மக்களின் நலனில் சீனா காட்டும் அக்கறையை வெளிக்காட்டுகிறது

ஈரோடு.சி.சுந்தர் ராஜா அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானுக்கு சீனச் செஞ்சிலுவைச் சங்கம் வழங்கிய உதவி பற்றி செய்திகளில் கேட்டேன். பயங்கர பூகம்பம், ஆழிப்பேரலை, அணு உலை வெடிப்பு என ஜப்பான் மக்கள் மாபெரும் பேரழிவுகளை சந்தித்துள்ளனர். சீனச் செஞ்சிலுவைச் சங்கம் ஜப்பானின் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அவசர உதவியை வழங்கியது பாராட்டுக்குரியது. சீனாவும் அடிக்கடி இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுவதால், சீன மக்கள் இந்த துன்பங்களை நன்கு உணர்ந்தவர்கள். பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு ஆறுதலையும் உயிர் இழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து மனித நேய உதவியை வழங்கவும் விருப்பம் தெரிவித்துள்ள சீனாவை பாராட்டாமல் இருக்கமுடியாது.

செந்தலை என்.எஸ் பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றிய செய்திகளை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். இதுவரை உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிகமாக சேவையை நிறுத்திருந்த டோக்கியோ சுரங்க போக்குவரத்து மீளத் தொடங்கியிருக்கிறது. ஜப்பானிய மக்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துகொள்கிறேன்

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் கொழுப்பு உறிஞ்சும் அறுவை சிகிச்சை பற்றிய தகவல்கள் கேட்டேன். கொழுப்பு உறிஞ்சும் சிகிச்சை பற்றி முன்னர் கேள்விப்பட்டிருக்கிறேன், கொழுப்பை குறைக்கும் நோக்கிலும் இந்த சிகிச்சை உண்டு என்பதை படித்திருக்கிறேன். ஆனால், இந்த சிகிச்சை பற்றி சீன வானொலியில் தான் இவ்வளவு விரிவாக அறிந்து கொண்டேன். பிற நோய் தாக்கம் உள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை முறை ஏற்றதல்ல என்பதையும், பக்கவிளைவுகள் உண்டு என்பதையும் அறிந்தேன். ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கிய சீன வானொலிக்கு பாராட்டுக்கள். மேலும், அறிவியல் செய்தியில் 5000 கி.மீ.பயணத்திற்கு 16 டாலர் மதிப்புள்ள எரியாற்றல் மட்டுமே செலவாகிய சீருந்து பயணச் செய்தி வியப்பளித்தது. எடை குறைவான வாகனத்தால் எரிபொருளை மிச்சப்படுத்துவது தற்போது உலகிற்கு தேவையான ஒன்றுதான்.

முனுகப்பட் பி. கண்ணன் சேகர்

திபெத் புத்தாண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மிக முக்கியமான விழா என்பதால். திபெத்தின மக்களின் கொண்டாட்ட நிகழ்வுகள் துவங்கியிருப்பதை அறிந்து மகிழ்கின்றேன். திபெத் நாட்காட்டின்படி, மார்ச் 5ம் நாள், திபெத் புத்தாண்டு வருவதால், திபெத்தின மக்கள், பாரம்பரிய முறையில், தாயகத்தை அழகுபடுத்துவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். மகிழ்ச்சியான காட்சிகள் நிறைந்து, மக்கள், புத்தாண்டுக்குப் பொருட்களை வாங்கி திபெத் புத்தாண்டைக் கூட்டாக வரவேற்கும் இவ்வேளையில், எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரை 20 N. இராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்

முதுமைக்கால சமுக காப்புறுதி மற்றும் உதவி முறையை சீனா இவ்வாண்டுக்குள் மேம்படுத்தி, சீர்திருத்தம் மற்றும் வளர்ச்சி சாதனைகளை முதியோர் அனுவிப்பதை விரிவுபடுத்தவுள்ளதை அறிந்து கொண்டேன். 80 வயதுக்கு மேலான முதியோர் இவ்வித தொகையின் காப்புறுதி முறைமையில் சேர்க்கப்பட்டு, உள்ளூர் அரசு மதிப்பீடு செய்து உதவியளிக்கும் விபரங்களையும் அறிந்தேன். சிறந்த எடுத்துக்காட்டன திட்டம்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக் கேட்டு மகிழ்ந்தேன். கடந்த 5 ஆண்டுகளில், பெய்ஜிங் மாநகரின் வளர்ச்சிப் போக்கில் தாம் நேரிடையாக கண்டுணர்ந்த சில மாற்றங்களை திரு.கிளிட்டஸ் அவர்கள் மிகவும் தெளிவான நடையில் வழங்கினார். பெய்ஜிங் போன்ற மாநகரில், ஏராளமானோர் அனைத்து வசதி வாய்ப்புக்களையும் பெற்று வாழும் நகரில், பயன்பாட்டுக் கழிவுகளை கையாளும் பணி மிகுந்த சவாலுக்குரியதுதான். ஆனாலும், இப்பணியில் பெய்ஜிங் மாநகரம் உரிய வெற்றிகளைப் பெற்று வருகிறது என்றே நான் நினைக்கின்றேன். மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தனித்தனியே கையாள வேண்டும் என்ற தகவலை அறிந்தபோது, இந்தியாவின் தமிழ் நாட்டில், அரசு திட்டம் ஒன்று நான் பணிபுரியும் அரசுத்துறை மூலம் செயல்படுத்தப்படுவதை குறிப்பிட விரும்புகிறேன். அரசின் குறிப்பிட்ட வரையறைக்குரிய சுகாதார வசதிகளை பெற்றிருக்கும் ஊராட்சிக்கு நடுவண் அரசின் சார்பில் நிர்ம் புரஸ்கார் விருதும், ரூபாய் மூன்று இலட்சம் ரொக்கப் பரிசும் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. ஆனால் சில கிராமங்களே இந்த பரிசை பெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040