• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மார்ச் 23ம் நாளிட்ட நேயர் நேரத்துக்கான மின்னஞ்சல் பகுதி
  2011-03-25 18:22:34  cri எழுத்தின் அளவு:  A A A   
மார்ச் 23ம் நாளிட்ட நேயர் நேரத்துக்கான மின்னஞ்சல் பகுதியில் 9 இணையப் பயன்பாட்டாளர்கள் தெரிவித்த கருத்துக்களைக் கேட்டு ரசியுங்கள்.

உத்திரக்குடி சு. கலைவாணன் ராதிகா அனுப்பிய மின்னஞ்சல்

இசைக் கலைஞர்களின் இதய ஒலி எனும் நிகழ்ச்சியில் புகழ் பெற்ற ஒரு பாடகியின் பாடல்கள் பற்றியும், அவர் ஆர்வம் கொண்டிருந்த பண்பாட்டினையும் அறிவித்த நிகழ்ச்சி பலருக்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது. ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா? என்பது போல சிறு வயதிலிருந்து இசை மீது நாட்டம் கொண்டதால் தான், மிகப் பெரிய புகழ் பெற்ற பாடகியாக அவரால் திகழ முடிந்தது. நிகழ்ச்சியின் இடையிடையே அலங்கரித்த ஒவ்வொரு பாடலும் சீன மொழியாக இருந்தாலும் இசையின் அரவணைப்பும், குரல் வளத்தின் மெல்லிசை உணர்வும் ஒலிக்க செய்த இதய ஒலியாகவே அமைந்தது.

சிறுநாயக்கன்பட்டி கே.வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் புதிய எரியாற்றல் என்ற செய்தி விளக்கம் தொகுத்து அளித்திட கேட்டேன் இன்றைய நவீன காலத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி கொள்வதற்கு மின்சாரத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். மின்னாற்றலை உற்பத்தி செய்யும்போது சுற்றுப்புற சூழலையும் பாதுகாக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. சீனாவின் மின்னாற்றல் தேவைக்கு சூரியாற்றல் மின்சார தயாரிப்பினை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதை அறிந்து கொண்டேன். சீன நடுவண் அரசு ஆதரவு அளிக்கும் ஏழு துறைகளில் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சூரிய மின்னாற்றல் உற்பத்தி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதாக தெரிகிறது. அதன் மூலம், எதிர்காலத்தில் இத்துறை அபரீதமான வளர்ச்சியினை பெறும். சீனா மின்னுற்பத்தியில் தன்னிறைவு அடைந்து நலன்கள் பெறும்.

வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் புதிய எரியாற்றல் முயற்சி என்ற கட்டுரை கேட்டேன். கச்சா எண்ணெயின் விலை உயர்வு, மூலவளங்களினால் ஏற்படும் மாசு வெளியேற்றம் மட்டுமல்ல, தற்போது ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு மின்நிலைய வெடிப்பும் கூட, புதிய எரியாற்றலை கண்டறிய வேண்டிய கட்டாயத்தை தோற்றுவித்துள்ளன. எதிர்காலத்தில், சூரிய எரியாற்றலே முக்கிய எரியாற்றலாக இருக்குமென நினைக்கிறேன். குறைந்த செலவில், சூரிய எரியாற்றலைத் தயாரிக்கும் வழிமுறையை ஒட்டுமொத்த உலகமும் ஆய்வு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன். பிற ஆற்றல்களின் மூலவளங்கள் அழியவோ அல்லது குறையவோ கூடும். ஆனால், சூரிய ஆற்றல் மூலவளம் என்றுமே குறையாது.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் 12-வது ஐந்தாண்டு திட்டம் தற்போது நடைபெறும் ஆண்டுக் கூட்டத்தொடர்களில் விவாதிக்கப்பட்டு வருவதை அறிந்து கொண்டேன். ஒரு நாட்டின் வளர்ச்சி ஏழை, பணக்காரன் இடைவெளியை குறைப்பதில் தான் அதிகம் வெளிப்படும். இதனை உணர்ந்த சீன அரசு இந்த இலக்கில் முழு மூச்சுடன் செயல்பட 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது பாராட்டத்தக்கதாகும். மேலும், மகளிருக்கு சம உரிமை வழங்கி, செயல்படும் சீன அரசுக்கு பாராட்டுகள்.

பகலாயூர் ப.எ.நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானின் வடக்கிழக்குப் பகுதியில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நெஞ்சார்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலுள்ள அனைத்து உயிர்களும் சிறப்பாக வாழத்தான் உலகின் புதிய வளர்ச்சி முறைகள். சுற்றுப்புறச்சூழலை பாதிக்கப்படாமல் பாதுகாத்து உலக நாடுகள் வளர வேண்டும் ஒவ்வொரு மனிதரும் இதனை உணர்ந்து செயல்பட வேண்டும். இயற்கை பேரழிவுகளை குறைக்க, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சிறந்தது. சீனா வானொலி ஒலிபரப்பும், சீனா வானொலியின் இணையதள சேவையும், உலகின் பல்வேறு நிகழ்வுகளை நேயர்களுக்கும், உலக தமிழருக்கும் அறிவித்து, பெரும் செல்வாக்கு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.

விழுப்புரம், எஸ். பாண்டியராஜன் அனுப்பிய மின்னஞ்சல்

நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் சோடியம் உப்பு பற்றி வழங்கிய குறிப்புக்கள் பயனுள்ளதுதாகும் சோடியம் குறைந்த உப்பு, உயர் இரத்த அழுத்த நோயாளிக்கு மிகவும் சிறந்தது என்பதை அறிந்தேன். ஆனால் இந்த உப்பை சீறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக் கூடாது எதிர்மறையான பயன்பாட்டை சீன வானொலி தருவது பாராட்டுக்குரியதாகும். நபருக்கு ஒரு நாளைக்கு 6 கிராம் உப்பு மட்டுமே போதுமானது என்ற தகவலும் சிறந்த மருத்துவக் குறிப்பு. மேலும், இயற்கைச் சீற்றத்தால் மிகப் பெரும் அழிவை சந்தித்துள்ள ஜப்பான் மக்களுக்கு தமிழ்ப்பிரிவின் சார்பாக ஆறுதலை தெரிவிப்போம். மன உறுதி பெற ஊக்கமூட்டுவோம். சீனாவின் மீட்புதவிக் குழுவினர் சிவப்பு உடையுடன் ஜப்பான் சென்று பணியில் ஈடுபடத் துவங்கிவிட்டதை தொலைக்காட்சியில் கண்டேன். இடுக்கண் களைவதே நட்பு.

சின்னவளையம் கு. மாரிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை பாதிப்புகளால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதும் நாம் அறிந்ததே! அதற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் சீனாவின் யுன்னான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு, மக்கள் உடமைகளையும், வீடுகளையும் இழந்தனர். இப்படிப்பட்ட இக்கட்டான தருணத்திலும் ஜப்பானில் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற சீன அரசு மீட்புப்பணி குழுவினரை ஜப்பானுக்கு அனுப்பியிருக்கிறது. இந்த நற்செயல் சீன அரசின் மனிதாபிமானத்தையும், தோழமையுணர்வையும் காட்டுகின்றது. சீனாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் அதேவேளை ஜப்பானுக்கு உதவும் உன்னத பங்கினை என்னவென்று சொல்வது!

முனுகப்பட்டு, பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

ஜப்பானில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்குப் பின், அணுமின் நிலையத்தில் கதிரியக்க கசிவு நிகழ்ந்தது. ஜப்பான் இந்த கசிவை சமாளிக்கும் அதேவேளையில், அபாயச்சூழல் மீதான கண்காணிப்பை வலுப்படுத்தி காலதாமதமின்றி கண்காணிப்பு நிலையை வெளிப்படுத்தவும், சீனாவின் அணு வசதிகளை சோதனை செய்வதோடு அணு மின் திட்டங்களின் பரிசீலனையை தற்காலிகமாக நிறுத்தவும், சீன அரசவை கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் அதிக கண்காணிப்போடு செயல்படும் சீனாவின் மனப்பாங்கை இது காட்டுகிறது. ஜப்பானின் நோய் தடுப்பு மற்றும் மருத்துவப் பணிகளுக்கு, சீனா 30 பேர் அடங்கிய மருத்துவக் குழுவை அனுப்பியிருப்பது மனிதாபிமானம் மிக்க நடவடிக்கையாகும்

மீனாட்சிபாளையம், கா. அருண் அனுப்பிய மின்னஞ்சல்

அறிவியல் கல்வி நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் உண்ணும் உணவின் அளவு, உடல் எடைக்கேற்ப இருக்கவேண்டுமெனவும், உடல் எடைக்கேற்ற உணவின் அளவை கணக்கிடுவது, நமது உயரத்திற்கேற்ற சரியான எடையை எளிதில் கண்டறிவது போன்ற பயனுள்ள தகவல்களை அறியவந்தேன். அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் இருந்தது. மேலும், சீன மகளிர் நிகழ்ச்சியில் பிரான்சுக்கான சீனதூதரின் மனைவி, அவர் தூதரின் மனைவி என்பதால் அடையும் மகிழ்ச்சி மற்றும் அதனால் கிடைக்கும் பெருமை பற்றி கூறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040