• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நீண்ட ஆயுள் சீன பொருளாதார அதிகரிப்பின் புதிய தூண்டுதல்
  2011-03-25 18:29:51  cri எழுத்தின் அளவு:  A A A   

கலை......வணக்கம் புஷ்பா ரமணி அம்மையார்.

புஷ்பா......வணக்கம் கலையரசி.

கலை......இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம்.

புஷ்பா......ஆமாம். முதலில் நாம் நேயர் நண்பர்களுக்கு வணக்கம் சொல்லி நிகழ்ச்சியை துவக்கலாமா?

கலை......இது எப்போதும் மறமாவல் பின்பற்ற வேண்டிய முறை. வணக்கம் நேயர் நண்பர்கள். கடந்த வாரங்களில் இரண்டு முறை முதியோர் பாதுகாப்புப் பிரச்சினை பற்றி கீழை நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்குமிடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் பற்றி விவாதித்தோம்.

புஷ்பா......ஆமாம். அந்த நாடுகளிடையிலான கருத்துக்களில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்தியாவில் கூட வேறு கருத்துக்கள் உள்ளன.

கலை......இன்றைய நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் நீங்கள் இந்தியாவில் முதியோர் பாதுகாப்பு பற்றி எனக்காக குறிப்பிடுங்கள்.

புஷ்பா......சரி. நான் நிகழ்ச்சியைப் பாதிக்காமல் இருந்து கொஞ்சம் தகவல் உங்களுக்கு எடுத்துக் கூறுகின்றேன்.

புஷ்பா.... ஆதரவற்ற முதியோருக்கு அரசு ஓய்வூதியம், வழங்குகிறது. அதே போல பணி செய்து ஊதியம் ஈட்ட முடியாத, வறுமையில் இருக்கும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 'சீனியர் சிடிசன்' அதாவது மூத்த குடிமக்கள என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. பேருந்து, தொடர்வண்டி, வானூர்தி போன்ற போக்குவரத்து வசதிகளில், அவர்களுக்கு 3-ல் 1 பங்கு கட்டணம்தான். மூத்த குடிமக்களுக்கு வைப்பு நிதிகளில், சற்றுக் கூடுதலாக வட்டி வழங்கப்பபடுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி விதிப்பிலும் சலுகை உண்டு. ன்னொரு சிறப்புத் தகவல். நடுவண் அரசுப் பணியிலிருந்து, ஓய்வு பெற்ற 100 வயதைக் கடந்த முதியவர்களுக்கு , அவர்கள் ஓய்வூதியம் 2 மடங்காக வழங்கப்படுகிறது. காப்புறுதி திட்டங்களிலும், அவர்கள் காப்பீடு செய்யம் திட்டத்தைக்கேற்ப சலுகைகள் வழங்கப்படுகிநன்ன

கலை......நீங்கள் குறிப்பிட்டமை என்னைப் பொறுத்தவரை புதிய தகவல்களாகும். இருந்த போதிலும் தெற்காசிய நாடுகளின் பாரம்பரியத்தில் அதிகமாக ஒத்தக் கருத்துக்கள் நிலவுகின்றன. இதை உங்கள் விவரிப்பைக் கேட்ட பின் உணர்கின்றேன்.

புஷ்பா......மகிழ்ச்சி. கலை இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து முதியோர் பாதுகாப்பு தான் நமது உரையாடலின் தலைப்பாக இருக்கும் அல்லவா?

கலை.....ஆமாம். ஆயுள் சீனப் பொருளாதார அதிகரிப்பின் புதிய தூண்டுதலாக மாறும் என்பது பற்றி நாம் இன்றைய நிகழ்ச்சியில் முக்கியமாக விவாதிக்கலாம்.

புஷ்பா......நல்ல கருப்பொருள். அப்படியிருந்தால் நான் முதலில் வினா முன்வைக்கின்றேன்.

கலை......நான் அதை வரவேற்கிறேன்.

புஷ்பா......ஒரு லட்சம் கோடி யுவான் மதிப்புள்ள சந்தைத் தேவைக்கும் பத்தாயிரம் கோடி யுவான் சந்தை பகிர்மானத்துக்குமிடையில் அகழவல்ல வணிக நலன் மற்றும் உள்ளார்ந்த சந்தை ஆற்றல் எவ்வளவு? இவை பற்றி எடுத்துக்காட்டுகளைக் கொண்டு விளக்கிக் கூற முடியுமா?

கலை......இந்த வினாவுக்கு விடையளிக்க முதலில் ஒரு கதை சொல்கின்றேன்.

புஷ்பா......வினாவுடன் தொடர்புடைய தகவல்கள் எதையும் கூறினால் வரவேற்கின்றேன்.

கலை......சரி. பாருங்கள். பெய்ஜிங் யாபாஃன்தியென் எனும் இடத்தில் வாழ்கின்ற zhang hong yu என்னும் முதியோருக்கு வயது 82. வயதை வைத்து அவரை முதியவர் என்று சொல்லலாம். ஆனால் அவர் தனது வயதை பற்றி கவலைப்படுவதில்லை. கணினி பயன்படுத்துவது முதல் மேசைக் கோற் பந்தாட்டம் விளையாடுவது வரையானவை அவரது பொழுதுபோக்கு அம்சங்களாகும். ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள அவரும் அவரது துணைவியாரும் விரும்பினார்கள். இதற்காக அவர்களது குழந்தைகள் சக்கர நாற்காலி ஒன்றை வாடகைக்கு வாங்கி பெற்றோரின் கனவை நனவாக்க உதவி செய்தார்கள்.

புஷ்பா......இது பற்றி முதியவர் zhangகின் கருத்து என்ன?

கலை......மிகவும் மகிழ்ச்சி என்று சுருக்கமாக கூறலாம். முதியோர் zhang இது பற்றி கூறியதாவது.

இத்தகைய செலவு தேவையானது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் சுற்றுலா செய்யும் போது முதுமையில் உள்ள நாங்கள் நடக்க முடியாது. ஆகவே வாடகை சக்கர நாற்காலி வைப்பது மதிப்புக்குரிய முயற்சி.

புஷ்பா......இவ்விரண்டு முதியவர்கள் சுற்றுலா பயணம் மேற்கள்ளும் போது அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் வாடகை சக்கர நாற்காலி ஏற்பாடு செய்தது தவிர, அவர்களது பேரன் பேத்திகள் மேலும் என்ன முயற்சிகள் மேற்கொண்டனர்?

கலை......ஷாங்காய் உலகப் பொருட்காட்சிப் பூங்காவில் மக்களின் பங்கு மற்றும் மகிழ்ச்சியை மேலும் பகிர்ந்து கொள்ளும் வகையில் பேத்தி அவளது தாத்தாவுக்கென 15000 யுவான் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி வாங்கி தந்தார். இது பற்றி பேத்தி சிறிய யூ கூறியதாவது.

இந்தக் கருவியைப் பொருத்திக் கொள்வது உடலுக்கு மட்டுமல்ல மனநலதுக்கும் ஆறுதலாக இருக்கின்றது. மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெளிவாக செவிமடுத்து அறிந்து கொண்ட பின்னர் நண்பர்களுடன் இருவரும் நண்பர்களுடன் இயல்பாகப்பழகுகின்றார்கள். எங்களுடன் பேசிய பின் அவர்களுக்கு மகிழ்ச்சிகரமான மனநலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

புஷ்பா......அப்படியிருந்தால் முதியோர் ச்சான் வெளியே சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு உதவும் சக்கர நாற்காலி எந்த நிறுவனத்திலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்டது?

கலை......பெய்ஜிங் மாநகரில் முதியோருக்கான அன்றாட வாழ்க்கை பொருட்கள் விற்பனை நிறுவனத்திலிருந்து வாடகைக்கு வாங்கப்பட்டது. இந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளாக தொழில் நடத்தி வருகின்றது. இதுவரை பெய்ஜிங்கில் 6 கிளைகளை அது கொண்டுள்ளது.

புஷ்பா......இந்த நிறுவனம் வெற்றிகரமாக முதியோருக்கு உதவும் அனுபவங்கள் எவை?

கலை......நிறுவனத்தின் மேலாளர் திரு zhao கூறியதாவது.

தொழில் துவங்கிய கட்டத்தில் நாங்கள் முதியோர்களுக்கு மட்டும் சேவை புரிந்தோம். நடைமுறையில் முதியோர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்ற துறைகளுடனும் தொடர்புடையவை. ஆகவே இப்போது பன்னோக்க முறையில் தொழில் நடத்துகின்றோம்.

புஷ்பா......முதியோர் ச்சான் அணிந்த காது காட்கும் கருவி எந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது?

கலை......இது ஷாங்காய் மாநகரிலுள்ள தொழில் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் சந்தை வளர்ச்சிக்குப் பொறுப்பான திரு zou இது பற்றி கூறியதாவது.

நாங்கள் மிக சிறந்த நடுத்தர மற்றும் அடிப்படை காது கேட்கும் கருவிகளை உற்பத்தி செய்கின்றோம். முதியோரின் நுகர்வுத் திறன் அடிப்படையில் அவர்களுக்கு காதொலி கருவி பொருத்துகிறோம்.

புஷ்பா..... எடுத்துக்காட்டை கொண்டு நிகழ்ச்சி துவங்கும் போது நான் முன்வைத்த கேள்விக்குத் தெளிவான விடை எனக்குக் கிடைத்து விட்டது.

கலை......ஆமாம். தற்போது சீனாவில் 60 வயத்துக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை உலகில் முதலிடம் வகிக்கின்றது. முதியோர் மக்கள் தொகை சுமார் 16 கோடியே 70 லட்சத்தை எட்டியுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் ஆண்டுக்கு சீனாவில் 70 லட்சம் முதியோர்கள் சமூகத்துடன் இணைப்பர்.

புஷ்பா......ஆகவே முதியோர்களிடையில் மாபெரும் வணிக வாய்ப்பு உள்ளார்ந்துள்ளது. இதை படிப்படியாக மக்கள் தெரிந்து கொண்டுள்ளனர். நடக்க உதவும் ஊன்று கோல், தொலைதூர பார்வை கண்ணாடி, காதுகேட்கும் கருவி, பல்வகை வலிநிவாரணிக் கருவிகள், உடல் நலத்துக்கு நன்மை தரும் மருந்துகள் போன்ற பல்வகை வணிகப் பொருட்கள் முதியோர்களுக்கானவை.

கலை......ஆகவே கடந்த ஆண்டில் சீனாவில் முதியோர்களின் நுகர்வு தேவை ஒரு லட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது. ஆனால் இப்போது சந்தையில் ஆண்டுக்கு முதியோர்களுக்கான உற்பத்தி பொருட்களின் மொத்த மதிப்பு பத்தாயிரம் கோடிக்குள் உள்ளது.

புஷ்பா......இதைப் பார்க்கம் போது சந்தை பகிர்மானத்தின் சமச்சீரற்ற பின்னணியில் மாபெரும் வணிக வாய்ப்புகள் அதிகம் என்பதில் ஐயமேயில்லை.  

கலை........முதியோர் ச்சானின் எடுத்துக்காட்டைப் பார்த்தால் முதியோர்கள் சமூகத்தில் சிறப்புப் பகுதியினர்களாவர்.

புஷ்பா......ஆமாம். அவர்கள் சமூகத்துடன் தொடர்பு மிக்க பகுதியினர்களாவர்.

கலை......இதை குறிப்பிடும் போது பீகிங் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகை ஆய்வகத்தின் பேராசிரியர் mu guang zongஇன் கருத்தை பார்க்கலாம்.

முதியோருக்கு விசுவாசமான எண்ணத்துடன் அவர்களுக்கு சேவை புரிந்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை நிறைவு செய்ய பாடுபடுகின்றோம். பொருட்களை வாங்குவோர் நேரடியாக முதியோர்கள் அல்ல. ஆனால் முதியோர்கள் இந்த பொருட்களை நுகர்வு செய்கிறார்கள். ஆகவே அவர்களின் வாங்கும் திறன் மிகவும் வலிமைமிக்கது.

புஷ்பா......நமது வாழ்க்கையில் 82 வயதான முதியோர் ச்சானின் குடும்பம் நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கின்றது.

கலை......ஆமாம். அவரது வீட்டில் இரண்டு முதியோர்கள் பல குழந்தைகள் மற்றும் பேரன் பேத்திகள் வாழ்கின்றனர். மூன்று தலைமுறையினருக்கு முதியோருக்கான பகிர்மான உற்பத்தி பொருட்களை வாங்கும் திறமை உண்டு.

புஷ்பா......ஆகவே சீனாவில் முதியோர்களுக்குத் தேவைப்படும் சந்தையில் வணிக வாய்ப்பு தாராளமாக உள்ளார்ந்துள்ளது.

கலை......நீங்கள் குறிப்பிட்டதை நான் ஒப்பு தெரிவிக்கின்றேன்.

புஷ்பா......சீனாவில் முதியோர்கள் ஒரு புதிய சேவை துறை உருவாகத் தூண்டியுள்ளனர்.

கலை......இந்த புதிய சேவை துறைக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்க வேண்டும் என்று நான் முன்கூட்டியே வாழ்த்துகின்றேன்.

புஷ்பா......சரி நண்பர்களே ஆயுள் என்பது சீன பொருளாதார அதிகரிப்புக்கு தூண்டுதலாக மாறும் என்பது பற்றி விவாதித்தோம்.

கலை......இத்துடன் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

புஷ்பா......அடுத்த நிகவ்ச்சியில் மீண்டும் சந்திப்போம்.

கலை......வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040