• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நேயர் நேரம் : ஏப்ரல் 13, 2011.
  2011-04-14 17:03:49  cri எழுத்தின் அளவு:  A A A   

வாணி: நேயர்களே, உங்கள் பேராதரவுடன் வெற்றிப் நடை போடும் சீன வானொலி மேலும் சிறப்படைய, உங்கள் எண்ணங்களை கடிந்தங்களாக தொடர்ந்து எழுதி, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை வரவேற்று தமிழ்ப் பிரிவை வளர்ப்போம் என்று உறுதி அளிக்கின்றோம். பல்லாண்டுகளாக சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை கேட்டுவரும் நேயர்களுக்கும் மற்றும் புதிய நேயர்களுக்கும் இவ்வேளையில் மீண்டும் நன்றிகளை கூறுவதில் பெருமகிழ்ச்சியடைகின்றோம் . சரி, இனி உங்கள் வானஞ்சல், மின்னஞ்சல் வரிசையை பார்க்கலாம் வாருங்கள்.

கடிதப்பகுதி:

தமிழன்பன் : வானஞ்சல் வரிசையில் முதல் நேயராக வேலூர், டி.கே. பொன்னுசுவாமி, சீனப் பண்பாடு நிகழ்ச்சிக் குறித்து எழுதிய கடிதம். சீன மக்கள் ஒவியக் கலை, தற்காப்புக் கலை என பலக் கலைகளில் சிறப்பு பெற்று விளங்கினாலும், சீனாவில் கையெழுத்துக் கலையே முதலிடம் வகுக்கின்றது என்பதை இந்நிகழ்ச்சி அறியதந்தது. அதற்கு அடுத்த இடத்தை ஒவியக்கலை பெற்றுள்ளது என்பதை நிகழ்ச்சிவிளக்கியது. கையெழுத்தையே கலையாக்கியுள்ள சீனர்களின் கலையுணர்வு தலைசிறந்ததே.

வாணி : ஈரோடு, எம்.சி.பூபதி, கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி குறித்து அவரது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த கருத்து இது. உலகில் வறுமையை ஒழித்து, பட்டினியைப் போக்க ஐ.நா சபையின் உலக உணவு நிறுவனம் பணியாற்றி வருகிறது. சீனா, உலக மக்களின் பட்டினியை போக்க அதிக நிதி உதவிச் செய்து வருகிறது. மேலும், சீனர்கள் வாழ்க்கையில் இடைவிடாது உழைப்பவர்கள். சீனாவின் பொருளாதர வளர்ச்சியால் சீனர்களின் மதிப்பு உலக அரங்கில் உயர்ந்துள்ளது உண்மையே. மேலும், இதர நிகழ்ச்சிகள் மூலம் அரிய பல தகவல்களை தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

தமிழன்பன்: இனி இலங்கை காத்தான்குடியிலிருந்து எம்.ஐ.எம்.பர்சாத் அனுப்பிய கடிதம் இடம்பெறுகிறது. சீன வானொலி தமிழ்ப்பிரிவுக்கு உலகளவிலுள்ள நேயர்களில் நானும் ஒன்றாக இருப்பதில் பெருமையடைகின்றேன். குடும்ப மருத்துவர் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கள் குடும்ப வானொலியாக சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு திகழ்கிறது என்றால் மிகையில்லை. நான் ட்டுமல்ல எங்கள் குடும்பமே தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்கிறது என்று எழுதி அனுப்பியுள்ளார்.

வாணி: தொடர்வது திருச்சி ரா.சுதர்சன் எழுதி அனுப்பிய கடிதம். நேயர் நேரம் பகுதியில் வானஞ்சல், மின்னஞ்சல் கருத்து கடிதங்கள் ஏறக்குறை சம எண்ணிக்கையில் சிறப்பாக தொகுக்கப்படுகின்றன. உலகின் பல பகுதிகளிலிருந்து, சீன வானொலியின் வளர்ச்சிக்கு கருத்து கடிதங்கள் மூலம் ஆதரவு அளிக்கும் நேயர் நண்பர்களை இது தெரிந்து கொள்ள செய்கிறது. நேயர்கள், தங்கள் பெயர் இடம்பெறுகிறாதா? என்று எதிர்பார்க்க செய்யும் நிகழ்ச்சியும் கூட.

தமிழன்பன் : அடுத்தக் கடிதம் சென்னை, மறைமலை நகர் மல்லிகாதேவி. மலர்ச்சோலை நிகழ்ச்சியில், சீனாவின் சின்னமான கம்யூனிஸ்ட் சிலை மற்றும் 5500 ஆண்டுக்கு முன்னிருந்த குகை வீடு கண்டுபிடிப்பும் அறிவிக்கப்பட்டது. இக்குகை வீடுகள் சிச்சுவானில், வீடுக்கட்டும்போது கண்டுப்பிடிக்கப்பட்டன என்றும், இக்குகை வீடு "தாங்" வம்ச காலத்தில் இருந்தவை என்றும், நாகரிக காலத்தில் கட்டப்பட்டவை என்றும் அறிந்து கொண்டோம். இவையாவும் சீனாவின் பண்டைக் காலப் புராதான வரலாறுகள்.

வாணி: நிகழ்ச்சியின் அடுத்த நேயர் கடிதமாக நாம் கேட்க இருப்பது சேந்தமங்கலம், எஸ். எம். இரவிச்சந்திரன் அனுப்பியது. இசைக் கலைஞர்களின் இதய ஒலி என்ற நிகழ்ச்சி இவ்வாண்டில் புதிய நிகழ்ச்சியாக ஒலிப்பரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில் இசைக் கலைஞரை அறிமுகப்படுத்தி, அவர்களது இன்னிசையை இசைப்பது அருமை. இது கர்நாடக இசைப் போல இனிமையாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். இந்நிகழ்ச்சி முழுவதும் இசையாக உள்ளதால் இடையிடையே உரையாடல் வைக்கவும், இசைக் கலைஞகளின் வாழ்க்கை, அவர்கள் பெற்ற விருதுகள், சீன மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் புகழ் என பல தகவல்களை நேயர்களுக்கு தெரிவிக்கலாம் என்று நிகழ்ச்சிப் பற்றி தனது மேலான கருத்துக்களை வெளிப்படுத்தி எழுதியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சி, சிறப்படைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.

தமிழன்பன்: கடையாலுருட்டி எம். பிச்சைமணி, சீன வானொலியின் பல்வேறு நிகழ்ச்சிகளைக் குறித்து விமர்சனம் எழுதியுள்ளார். ஒலிம்பிக் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளின்போது வாணவேடிக்கை நடத்துவது, நச்சுக் காற்றை வெளிப்படுத்துகிறது. எனவே, இனிவரும் வரும் போட்டிகளில் வாணவேடிக்கைகள் லேசர் முறையில் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது சுற்றுச்சுழலை பாதுக்காக்கும் சிறந்த வழிமுறை. மேலும், இந்திய சீன ஒற்றுமையை வலியுறுத்தி, இந்தியாவில் சீனத் திருவிழாவும், சீனாவில் இந்தியத் திருவிழாவும் நடைபெறுவது, இரு நாடுகளின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்பதில் மகிழ்ச்சி. மேலும் சீன தேசிய இனக்குடும்பத்தில் "தங்கா" ஒவியங்கள் குறித்தும் விரிவாகக் கேட்டேன் என்று கடிதம் எழுதியுள்ளார்.

வாணி : அடுத்த நேயர் சின்னதாராபுரம் ஆர். ஜெகன்குமார் நமக்கு தனது கடிதம் மூலம் தெரிவித்த கருத்து. கரி வெளியேற்றத்தைக் குறைக்க சீன அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைச் சீன வானொலி மூலம் விளக்கமாகக் கேட்டு அறிந்தேன் .பயன் உள்ளதாக இருந்தது. வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளை குறைக் கூறி வரும் சூழ்நிலையில், சீன அரசின் இந்த் நடவடிக்கை மிக சரியானது.

தமிழன்பன் : அடுத்த கடிதம் புதுகையிலிருந்து ஜி. வரதராஜன் எழுதியது. சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் ஜெயா அவர்கள் இன்று சிறுப்பான்மை தேசிய இன மக்களின் வளர்ச்சி, சமூகபொருளாதார மறுமலர்ச்சிப் பற்றி விரிவாக சுவைப்பட எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. சீன அரசின் சுறுசுறுப்பான நடவடிக்கை மக்களின் விறுவிறுப்பான முன்னேற்றம் என்றும் பாராட்டுக்கு உரியது.

வாணி : அடுத்த நேயராக, இலங்கை, காத்தான்குடியிலிருந்து எ.எம்.எப். சஜிதா, தெரிவித்துள்ள கருத்து. நான் தொடர்ந்து சீன வானொலி நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்டுவருகிறேன். சீன வானொலி தமிழ்ப்பிரிவு ஒலிபரப்பு வாயிலாக நாங்கள் சிறந்த பயனடைகின்றோம். தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது நேரம் போவதே தெரிவதில்லை. பல முக்கிய தகவல்கள், வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள் அறிவு களஞ்சியமாக நிகழ்ச்சிகள் உள்ளன. சீன வானொலி, தமிழ் பேசும் அனைத்து மக்களுக்கும் மாபெரும் சேவையாற்றி வருகிறது. இச்சேவை மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் பல.

தமிழன்பன் : அடுத்த நேயர் ஈரோடு, சி. சுந்தர், செய்திகள் குறித்து எழுதிய கடிதம். சீனாவின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய இருப்புப்பாதை நிலையம், உயர் வேக இருப்புப் பாதையின் தொடர்பு மையமாக இயங்கும் என்று அறிந்தேன். ஹிஆன் நகரத்தின் உயர்வேக இருபுப் பாதை வலைப்பின்னல் உருவாக்கப்பட்டவுடன்,சீனாவின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்கள் இணைக்கப்பட்டு தொடர்பு மையமாக மாறி அதிக மக்கள் பயன் பெறுவர் என்றும், சீன உயர்வேக இருபுப்பாதையின் வளர்ச்சி, உலக அளவில் உள்ள மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்று அறிந்து வியந்தேன் நன்றிகள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040