உடனடிபோர் நிறுத்தம் தேவை என்று சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி மிக அருமை. இது நியாயமான வேண்டுகோளும் ஆகும். சீன அரசுத்தலைவர் லிபியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் நடத்திவரும் வான் தாக்குதலை நிறுத்தி அமைதி முறையை நாட வேண்டுமென சீனத் தலைவர் ஹுசிந்தாவின் வேண்டுகோள் நியாயமானதாகும். சீனா கடைபித்துவரும் அமைதி கொள்கையை உலக நாடுகளுக்கு இந்த வேண்டுகோள் அறிவித்தது. இந்த மாதிரி உலக அமைதி நிலைபாட்டில் உறுதியாக இருக்கும் தலைவர்களுக்கு நோபல் மற்றும் அமைதி பரிசுகளை வழங்குவது நல்லது.
மதுரை-20, என்.ராமசாமி அனுப்பிய மின்னஞ்சல்
மனித உரிமைப் பிரச்சனை என்ற பெயரில் அமெரிக்காவின் தலையீடு என்ற செய்தி தொகுப்பை கேட்டேன். 2010 ஆம் ஆண்டு பிற நாடுகளின் மனித உரிமை தொடர்பான அறிக்கையை அமெரிக்கா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனா உள்பட பலநாடுகளின் மனித உரிமை குறிந்து அமெரிக்க மீண்டும் திரித்து தகவல் வெளியிட்டுள்ளது. இது கண்டிக்கதக்க செயலாகவே எண்ணுகிறேன்.
விழுப்புரம் முத்துசிவக்குமரன் அனுப்பிய மின்னஞ்சல்
மனித உரிமைகள் பிரச்சினை என்ற பெயரில் அமெரிக்கா பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடும் போக்கினை நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது.. அடுத்தவர்களின் விடயத்தில் மூக்கை நுழைப்பது அமெரிக்காவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. உலக நாடுகளின் பாதுகாவலனாக தன்னை கருதிக்கொண்டு செயல்படுவது, ஐக்கிய நாடுகளின் சபையின் அதிகாரங்களில் தலையிடுவது என்று அமெரிக்காவின் அத்து மீறல்கள் அதிகம். மேலும், சீனாவின் சான்யா நகரில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
முனுகபட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பண்பாட்டுப் பரிமாற்றத்தை பேணவும், இரு நாட்டு மக்களுக்கு இடையே நட்பை அதிகரிக்கும் வகையிலும் சீன தேசிய தொல்பொருள் ஆணையம், இந்திய பண்பாட்டு அமைச்சகம், மற்றும் தொல்பொருள் ஆணையத்தின் ஏற்பாட்டில் சீனாவின் கருவூலக் கண்காட்சி புதுதில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் துவங்கியுள்ளதை வரவேற்கிறேன். சாங்சி. பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் பலநகரஙகளில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள், பீங்கான்கள், ஜேடு என்கிற விலை உயர்ந்த பல்வண்ண கற்கள், வெண்கலப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் என 95 தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். இந்த கண்காட்சி மூலம் சீனாவின் பன்பாட்டை கூடுதலாக இந்திய மக்கள் அறிய முடியும். இதனை சென்னையிலும் நடத்தி இருக்கலாமே!.
பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
தமிழ் திரைப்படலில் தமிழ்பாடல் ஒன்று இடம்பெற்றது ஆனால் இன்று மறைந்த நடிகை சுஜதா அவர்கள் நடித்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் இடம்பெற்றிருந்தால் இசை பிரியர்கள் மன மகிழ்ச்சியடைந்து இருப்பர்கள். இனிவரும் இசை பகுதியான தமிழ் திரைப்படல் அல்லது நேயர் விருப்ப பகுதியில் சுஜதா அவர்கள் நடித்த பாடத்திலிருந்து பாடல்கள் இடம்பெற செய்ய கேட்டுக் கொள்கிறேன். புஷ்பாரமணி அம்மையார் அவர்கள் எங்கள் விருப்பத்தை நிறைவு செய்வார்கள் என்று நம்புகிறேன். பின் உங்கள் குரல் பகுதியில் பெருந்துறையில் நடைபெற்ற 22ஆம் கருந்தரங்கு பற்றி தொடர்ந்து கேட்டு மகிழ்ச்சி அடைந்தோம். நன்றிகள் பல.
வளவனுர் புதுப்பாளையம்,எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிக் கேட்டேன். கண்காணிப்பாளராகத் தேர்வு செய்யப்பட்ட மூன்று நேயர்களின் கருத்துக்களை இரண்டாவது வாரமாக தொடர்ந்து ஒலிபரப்பியதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். செய்தி விளக்கத்தில் உலகப் பொருளாதார மீட்சிக்கு சீனா மாபெரும் பங்காற்றியிருப்பதை அறிந்து மகிழ முடிந்தது. ஏற்றுமதித் தொகையில் முதலிடம் பெற்றிருக்கும் சீனா, இறக்குமதித் தொகையில் இரண்டாம் இடத்திலிருந்து விரைவில் முன்னேறி, உலகில் முதலிடம் வகிக்க வாழ்த்துகின்றேன்.
சேந்தமங்கலம் எஸ்.எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
சீன மக்களின் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கங்கள் குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்டேன். இரவு உணவை மாலை ஏழு மணிக்குள் முடிந்து விடுகிறார்கள். டீ, காப்பி கடைகள் இல்லை கறுப்பு தேனீர் தான், இதை போன்ற பலதகவல்களை நட்பு பாலம் நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன். சீனவிற்கு செல்லுகின்ற தமிழர்களை கண்டு பிடித்து. அவர்களை நட்பு பாலம் நிகழ்ச்சியில் இடம் பெற செய்து வரும் தமிழ்ப் பிரிவுக்கு பாராட்டுகள்.
தார்வழி பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்
திபெத் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள லாசா நகரை சர்வதேச சுற்றுலா நகரமாக உருவாக்க சீன அரசு மேற்ற்க்கொள்ளும் நடவடிக்கைகள் பற்றி இணையம் மூலம் அறிந்தேன். லாசாவை சர்வதேச சுற்றுலா நகரமாக உருவாக்கும் திட்டப்பணிகள், மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவ்வாண்டும், அடுத்த வரும் சில ஆண்டுகளும் இத்திட்டத்தின் அடிப்படைக் காலக்கட்டமாக அமையவுள்ளதையும் அறிந்தேன். 2015 ஆம் ஆண்டுக்குள், சர்வதேசச் சுற்றுலா நகரமாக லாசா முழுமையாக மாறவுள்ளதையும் இன்றைய செய்திப்பகுதியில் கேட்டேன். சீனாவின் பழமை மாறாத பண்பாடு கலாச்சாரம் கொண்ட லாசா நகரம் சர்வதேச சுற்றுலா தளமாக மாறும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
ஏரிக்காடு பூபதி அனுப்பிய மின்னஞ்சல்
சீட்டாட்டம் சீனாவில் நீண்ட காலமாக நடைபெற்று வருவதை பற்றி மலர் சோலை நிகழ்ச்சியில் அறிந்தேன். சிங் பேரசர் காலத்தில் அரசு சபையிலும் சீட்டாட்டம் நடைபெற்றதாம். பின்னர் பந்தய விளையாட்டாக மாறியபின், அது தடை செய்யப்பட்டிருக்கிறது. பறக்கும் வீடு பற்றியும் இந்நிகழ்ச்சியில் அறிய வந்தேன். இன்றைய மலர்சோலை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
மீனாட்சிபாளையம் கா.அருண் அனுப்பிய மின்னஞ்சல்
செய்திவிளக்கத்தில் உலகக்கோப்பையை கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி முதலிடம் வென்றதை பற்றி விவரிக்கப்பட்டது. இந்த வெற்றியால் இந்தியாவில் ஏற்பட்ட கொண்டாட்டங்கள் பற்றி கலையரசி அவர்கள் வழங்கிய செய்திவிளக்கம் தெளிவாக விபராமான அறிவித்தது. செய்திகளை வெளியிட்டு இந்தியாவின் மகிழ்ச்சியில் கலந்து கொண்ட சீனாவிற்கு பாராட்டுக்கள்.
சென்னை 92, செல்வி இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
ஜப்பானில் நிகழ்ந்த கடும் நிலநடுக்கம், அதனால் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பாதிப்புகள் மற்றும், அணு கதிரியக்க கசிவு முதலியவை பொருளாதாரத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இச்செய்தி ஜப்பானுக்கு மற்றொரு பேரதிர்ச்சியாகும். ஜப்பான் இதிலிருந்து மீண்டுவர நீண்ட நாட்கள் ஆகும் என்று தோன்றுகிறது. நேரடி பொருளாதார இழப்பு மிக அதிகம் என்பது உண்மை. இதனை மீட்க ஜப்பான் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தற்போது ஜப்பானுக்கு மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
உத்திரக்குடி சு.கலைவாணன் இராதிகா அனுப்பிய மின்னஞ்சல்
இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சியில், சீனாவில் உள்ள வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி பற்றி கூறுகையில் சலுகைகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளைக் கொண்டு வெளிநாட்டு முதலீடுகளை முன்னிறுத்து சீனா நல்லதொரு முன்னேற்றம் கொண்டுள்ளதை அறியும்போது பெருமிதம் ஏற்படுகிறது. மேலும் சீனாவில் புத்தாக்க மேம்பாடு மூலம் எல்லா வகை செயல்பாடுகளிலும் தொழில் துறையில் மாபெரும் முன்னேற்றம் ஏற்படுவது உறுதி.
பாண்டிச்சேரி என்.வசந்தி அனுப்பிய மின்னஞ்சல்
கடந்த இரு வாரமாக சனிக்கிழமைகளில் இடம்பெறும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில், சீன வானொலி கண்காணிப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மூன்று நேயர்களின் கருத்துக்களை கேட்டு மகிழ்ந்தேன். சீன வானொலி முன்வைத்த ஆறு கேள்விகளுக்கு, அவர்கள் அழகாக பதிலளித்தனர். சீன வானொலிக்கு புதிய பங்களிப்பை வழங்கும் வகையில், கண்காணிப்பாளர் பணிக்கு அவர்களைத் தேர்வு செய்த சீன வானொலிக்கும், புதிய பணிக்கு தேர்வாகியிருக்கும் அம்மூன்று நேயர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.