• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏப்ரல் 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சி
  2011-04-22 20:42:27  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியில் 8 நேயர் நண்பர்கள் பங்கு கொண்டுள்ளனர். அவர்களது கருத்துக்களைக் கேளுங்கள்.

கலை: வணக்கம் ! அன்பு நேயர்களே , சீன வானொலி தமிழ்ப் பிரிவின் அனைத்து நேயர்களையும், நேயர் நேரம் நிகழ்ச்சிக்கு வரவேற்ப்பதில் பெறும் மகிழ்ச்சியடைகிறோம். நான் தி. கலையரசி.

தமிழன்பன் : உங்கள் கருத்து கடிதங்களால் எங்களை நெகிழ வைக்கும் நேயர்கள் அனைவருக்கும் நன்றிகளுடன் எமது நல்வாழ்த்துக்கள். நான் தமிழன்பன்.

கலை: நேயர்களே, சீன வானொலி நிகழ்ச்சிகளை செவிமடுப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் அதனால் பயனுற்று, உங்கள் கருத்துக்களையும் கடிதங்கள், மின்னஞ்சல்கள் வழியாக தெரிவிப்பதன் மூலம் உங்களது ஆதரவுடன் எங்களது பணி, சிறப்படையும். நாம் மேலும் சிறப்படைய, உங்கள் எண்ணங்களை தொடர்ந்து எங்களுக்கு கடிந்தங்களாக தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை மனதில் கொண்டு இனி வரும் நிகழ்ச்சிகள் அமையும். சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கேட்டுவரும் நேயர்களுக்கும் புதிய நேயர்களுக்கும் இவ்வேளையில் மீண்டும் நன்றிகளை கூறுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம் . சரி இனி உங்கள் வானஞ்சல், மின்னஞ்சல் வரிசையை பார்க்கலாம் வாருங்கள்.

கடிதப்பகுதி:

தமிழன்பன்: திருச்சி ம.தேவராஜா எழுதியது. அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில், சீனாவில் குடும்ப கல்வி பற்றிய புதிய கருத்தெனும் கட்டூரை கேட்டேன். பயனுள்ள பல தகவல்கள் கேட்டு அறிந்தோம். உலக சூழ்நிலைக்கேற்ற குடும்ப கல்வி, சீனாவிற்கு மிகுந்த பலனைத் தரும் என்பது தெரிவிக்கப்பட்டது. மாறுபடும் உலகச் சூழலுக்கு ஏற்றவாறு பெற்றோரும் தங்களை மேம்படுத்தி, தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறை, கல்வி மற்றும் அல்லாது, அன்றாட வாழ்வை எதிர்கொள்ளும் வழிமுறைகள், என இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்புடைய வகையில் குடும்ப கல்வி முறை அமைக்கபட்டுள்ளதை அறிந்தோம். இந்த புதிய கருத்துக்கள் எற்புடையதே என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலை: சின்னவளையம் கு.மாரிமுத்து மலர்சோலை நிகழ்ச்சியில் திருமதி.புஷ்பா ரமணி வழங்கிய கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பற்றிய விவரங்கள் அறிந்து மகிழ்ந்தேன். தலைமுடியால் செய்யப்பட்ட ஒவியம், விலங்குகளின் பற்களால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் மற்றும் வேர்களால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் என பல அரிய தகவல்கள் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன. வாரலாற்று சம்பவங்கள் குறித்த தகவல்களும் நிறைந்திருந்தன. எங்கும் கேட்டு அறியாத இந்த தகவல்களை சீன வானொலி மூலம் கேட்டு அறிந்து வியந்ததாகவும், நன்றிகள் பல கூறி கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழன்பன் : சென்னை மறைமலை நகர் எ. சிவசாமி சீன வானொலி செய்தி விளக்கம் கேட்டேன். சீனத் தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்களின் வெற்றிப் பயணத்தைப் பற்றியக் கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு நன்கொடை அளித்தது, சீன இந்திய ஒற்றுமைக்கு மிகச் சிறந்த பணியாகும். அது மட்டுமின்றி, சீனாவும் இந்தியாவும் தூதான்மை உறவுக் கொண்டு 60 ஆண்டு நிறைவை ஒட்டிய நிகழ்ச்சில் கலந்துகொண்டது அருமை உறவுக்கு மேலும் பாலம் வலுவாகிறது.

கலை: ஆந்திர மும்பை சுகுமார் நீர்ப்பாசியிலிருந்து துணிகள் தயாரிப்பு தகவல் புதுமை என்றும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிப்பிகள் பற்றிய தகவல் பயனளித்தன. சீனா, மற்ற வளரும் நாடுகளுக்கும் இது போன்ற மனித குலத்தை மேம்படுத்தும் புதிய ஆராய்வுகளின் பலன்களை பகிர்ந்து உதவ வேண்டும் என்று தனது கருத்தைக் கூறியுள்ளார். மேலும், அவர் சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் கூறப்பட்ட யூன்னான் மாநில தகவல்கள் குறித்தும் அங்கு வாழும் 25 சிறுபான்மை இன மக்கள் பற்றியும் அறிந்ததாகவும் அதைத் தொடர்ந்து வந்த யி இன கலைஞரின் பாடல் மிகவும் இனிமையாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழன்பன் : அடுத்த நேயர் மதுரை என். இராமசாமி சீன வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் கேட்டு மகிழ்வதைப் பற்றியும் சீன வானொலி ஒலிப்பரப்பில் இடம்ப்பெற்ற உணவு குச்சிகள் பற்றிய கதைகள் மூலம், சீனாவில் 3000 ஆண்டுகளுக்கும் முன்பே உணவு குச்சிகள் இருந்த தகவல் பற்றி அறிந்ததை தெரிவித்துள்ளார். உணவு உண்ண உதவும் இக் குச்சிகள் சீனாவின் ஆழமான பண்பாட்டினையும் சர்வதேச முக்கியத்துவத்தைக் காட்டுவதாக உள்ளன. இவை தற்சமையம் தங்கம், வெள்ளி, வெண்கலம், பீங்கான், மரம் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது என்ற தகவல்கள் குறிப்படத்தக்கது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கலை: திருவண்ணாமலை சூசைநகர் ச.இராஜலட்சுமி எழுதிய கடிதம். நிகழ்ச்சிகள் அனைத்தும் சிற்ப்பாக உள்ளன. வாழ்த்துக்கள். நான் அனைத்து நிகச்சிகளையும் தவறாமல் கேட்பேன். நாட்டு நடப்புகளுடன் வியத்தகு தகவல்களுடன் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன. சீனாவின் முதல் 400 செல்வந்தர்களைப் போலவே இந்தியாவின் முதல் 100 செல்வந்தர்கள் சம அளவிற்கு செல்வந்தர்களாக உள்ளதை அறிந்து மிகவும் வியந்ததாகவும், யாங்சு ஆறு, மஞ்சள் ஆறு, லான்சான் ஜியாங் ஆறு ஆகிய நதிகள் உருவாகும் இடம் என்ற வரலாற்று தகவலை அறிந்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழன்பன்: மேல்மாயில் வி.ரங்கோலி ராதாகிருஷ்ணன். அறிவியல் உலகம் நிகழ்ச்சி குறித்து எழுதியுள்ள கடிதத்தில், நிகழ்ச்சியில் சீனாவின் பாரம்பரிய மருந்து தயாரிப்பு முறை பற்றியும், மூலிகைகளைக் கொண்டு புற்று நோய், வயிற்றுப் போக்கு, போன்ற நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதனையும் செய்யப்பட்ட தகவலையும் அறிய முடிந்ததாகவும் அறிந்தேன. நல்ல பயனுள்ள தகவல் என்று பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கலை: அடுத்த நேயர் திமிரி வீர.ராமதாஸ். சீன வானொலி இசை நிகழ்ச்சியை பாராட்டி, இயற்க்கையோடு இணைந்துள்ள எந்த நிகழ்வும் மகிழ்ச்சியே என்று குறிப்பிட்டுள்ளார். மேற்கு சீனாவில் பயன்படுத்தப்படும் நாட்டுப்புற இசை தற்போது திபெத், உய்கூர் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்துவது, நாட்டுப்புற இசை வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாகவும், இயற்கையோடு இணைந்துள்ள நாட்டுப்புற இசை என்றும் அளவில்லா மன மகிழ்வைத் தரும். நாட்டுப்புற இசை சிறிது சிறிதாக மறைந்துவரும் இக்காலச் சூழ்நிலையில், இது போன்ற எடுத்துக்காட்டுக்கள் அவசியம். நாட்டுப்புற இசை வாழ்க! என்று தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040