• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏப்ரல் 20ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதி
  2011-04-22 20:43:04  cri எழுத்தின் அளவு:  A A A   
ஏப்ரல் 20ம் நாளிட்ட மின்னஞ்சல் பகுதியில் 12 நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள்.

பேளுக்குறிச்சி, கே. செந்தில் அனுப்பிய மின்னஞ்சல்

சித்திரை திருவிழா சிறப்பு நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை செல்வி சச்சு அவர்களின் பேட்டிக் கேட்டேன். நான் பெரும்பாலும் திரைப்படங்களை பார்பதில்லை. ஆனால் இந்த பேட்டியில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பற்றி கேட்டதும் அந்த படத்தை பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.

திருவண்ணாமலை சூசைநகர் நவீன் அனுப்பிய மின்னஞ்சல்

தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக பழங்கால திரைப்பட நகைச்சுவை நடிகை சச்சு அவர்கள் திரைப்பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். நடனம் ஆடுவதில் பயிற்சி இருந்ததால் பல படங்களுக்கு நடனம் ஆடியிருப்பதையும், பல முன்னனி நட்சத்திரங்ளுடன் இருந்த தொடர்புகளையும் குறிப்பிட்டார். சீன வானெலியில் இந்த பேட்டி புதிய திசை. அந்நடிகை அவருடைய அனுபவங்களை மனம்திறந்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்.

தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன் அனுப்பிய மின்னஞ்சல்

ஐநா பாதுகாப்பு அவையின் சீர்திருத்தம் என்ற செய்திவிளக்கம் கேட்டேன். சீனா நிலைப்பாடுகளை மாற்றாமல் ஐநா பாதுகாப்பு அவையின் சீர்திருத்தங்களை ஆதரிப்பது மட்டுமல்லாமல் ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதித்துவத்தை ஆதரிக்கும் வகையில் செயலாற்றி வருகிறது. சீனாவின் பரந்துபட்ட உலகமயமாக்க கொள்கை வெளிக்காட்டும் சான்றாக இது உள்ளது. ஆசிய நாடுகளிடையே அனைத்து துறைகளிலும் ஒருமித்த கோட்பாடுகள் இருக்க வேண்டும் என்ற சீனாவின் உயர்ந்த எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்.

நாகர்கோயில் -பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

Fukushima அணு கதிர்வீச்சு கசிவிலிருந்து படிப்பினை என்னும் சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அணு உலை பாதுகாப்பு பற்றி சீன அணு பாதுகாப்பு தலைவரின் கருத்துகள் நியாயமானதே. அதே சமயம் உலக நாடுகளில் இலாப நோக்குடன், நிர்பந்தம் செய்து அணு உலை நிறுவப்படுவது கேள்விக்குறியது. இந்த படிப்பினையை கருத்தில் கொள்ளும் உலக நாடுகள் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்கு முழு உத்திரவாதம் வழங்கி அணு மின நிலையங்களை நிறுவுவதே சாலசிறந்தது.

திண்டுக்கல் கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்

கலைமணி அவர்கள் தொகுத்தளித்த பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களது பேச்சுவார்த்தை என்ற செய்தி விளக்கத்தினைக் கேட்டேன். பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த 5 நாடுகளின் தலைவர்களது 3வது பேச்சுவார்த்தை சான்யா நகரில் துவங்கியதை அறிந்தேன். சேவை, பொருளாதார மற்றும் எரியாற்றல் உள்ளிட்ட அனைத்து துறைகளில் இந்த 5 நாடுகளும் மேற்கொள்ளும் ஒத்துழைப்புகள் அவற்றுக்கு மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும், அனைத்து துறைகளிலும் அபரிதமான வளர்ச்சியினை பெற இந்நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி தந்திருக்கின்றது.

வளவனூர் புதுப்பாளையம், எஸ். செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில், கத்தரிக்காயைக் கொண்டு தயார் செய்யப்படும் உணவு வகை ஒன்றை வாணியும் கிளிட்டசும் அறிமுகம் செய்தனர். பொதுவாக, எனக்கு கத்தரிக்காய் பிடிக்காது. தமிழகத்தைப் பொறுத்தவரை, கத்தரிக்காயில் கிட்டத்தட்ட பத்து வகை உண்டு. நாட்டுக் கத்தரிக்காய், நாக்பூர் கத்தரிக்காய், அண்ணாமலை கத்தரிக்காய் இப்படி...பல. கத்தரிக்காயில் வெண்புரதம் அதிகம் என்பதை புரிந்து கொண்டேன். இனி வருங்காலங்களில், கத்தரிக்காயை எனக்கு பிடித்த உணவாக மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். எளிய உணவு வகை ஒன்றை அறிமுகம் செய்து வைத்தமைக்கு என் நன்றி.

செந்தலை என்.எஸ். பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்

அறிவியல் கல்வி பாதுகாப்பு நிகழ்ச்சி செவிமடுத்தேன். அணுக்கதிர் வீச்சினை தவிப்பது பற்றிய விழிப்புணர்வு கருத்துக்கள் அனைவர்க்கும் பயனுள்ளது. சீன வானொலி நிகழ்ச்சிகள் என்றாலே, சீனாவும் அதனுடைய கலாச்சாரமும் கலந்திருக்கும். ஆனால் இந்நிகழ்ச்சி சமுதாயத்திற்கு விழிப்புணர்வை வழங்கும் விதமாகவும் இருந்ததோடு, உலக சுகாதார தினமான இன்று இந்நிகழ்ச்சியை கேட்டதில் பெருமையடைகிறேன்.

மெட்டாலா எஸ். பாஸ்கர் அனுப்பிய மின்னஞ்சல்

காலை ஒலிபரப்பில் செய்திகள் மலர்ச்சோலை நேயர்கடிதம் நேயர் விருப்பம் போன்ற நிகழ்ச்சிகளை கேட்டேன். சீனாவில் மாற்று திறனாளிகளின் கல்வி உரிமையை பாதுகாத்துவரும் சீன அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத் திறனாளிகளின் கல்வி உரிமையில் சீனா அதிக கவனம் செலுத்திவருகிறது. அதனால் அவர்களின் நலனும் அவர்கள் மீது உள்ள அக்கறையும் முன்னேற்றம் அடைந்துவருவதில் பெருமிதம் அடைகின்றேன். தொடர்ந்து வந்த மலர்ச்சோலை நிழ்ச்சியில் அறிய தகவல்களை தெரிந்துகொள்ள பயனுள்ளதாக அமைந்திருந்தது.

பரசலூர் பி.எஸ்.சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

சீன வனொலி வழங்கிய அறிவியல் கல்வி நலவாழ்வு நிகழ்ச்சியில் திரும்பதிரும்ப ஒரே கனவு தோன்றினால், உடல் நலமின்மையை அறிந்து கொள்வது பற்றிய சிறந்த தகவல்களை அறிந்தோம். நாடித்துடிப்பு, இதயதுடிப்பு பார்த்து நோயாளியின் நோயை கண்டறிந்து சரியான மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சிலரே. ஆனால் உடலில் ஏற்பட்டுள்ள நலக்குறைவை கனவிலிருந்து கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்கும் மருத்துவர் லியுஜியேவின் சிகிச்சைமுறை விந்தையிலும் விந்தைதான்.

திருச்சி அண்ணாநகர் வி.டி.இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

நட்புப்பாலம் பகுதியில் தொழில் அதிபர் மகாலிங்கத்திடம் பேட்டி எடுத்த நாச்சிமுத்துக்கு நன்றிகள். சீனவில் உணவு விடுதியில் வெளிநாட்டு பயனிகளுக்கு அளிக்கப்படும் அன்பான உபசரிப்பு, சீனாவின் பொருளாதார முன்னேற்றம், சீன மக்களின் அயலாத உழைப்பு என பலவற்றைக் குறித்து எடுத்துரைத்தார் மகாலிங்கம் அவர்கள். சீன அரசும் சரி, மக்களும் சரி அன்டைய நாடுகளிடம் உறவை தான் வளர்க்கிறனர். சீன வானொலி தமிழகத்தில் பண்பலை ஒலிபரப்பு சேவை தொடங்கும் நோக்கம் தமிழக மக்கள், மற்றும் சீன மக்கள் அன்பு உறவை வளர்க்கவே. இந்த நோக்கத்தை நிறைவேற்ற நிலையத்தின் தமிழ்ப் பிரிவு பணியாளர்கள் முயற்ச்சிக்க வேண்டும்.

பகலாயூர் பி.எ. நாச்சிமுத்து அனுப்பிய மின்னஞ்சல்

சீனா உலகின் பல்வேறு நாடுகளுடன் மேலும் பரந்ததாகவும் ஆழமாகவும் சுற்றுலா துறையில் ஒத்துழைக்க விரும்புகிறது என்று சீன தேசிய சுற்றுலா வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய-பசிபிக் சுற்றுலா சங்கம் நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவடைந்துள்ளது. சுற்றுலா தொழில் துறையில் பெரிய நாடான சீனா, உலக நாடுகளின் சுற்றுலா துறைகளுடன் இணைந்து சர்வதேச நிதி நெருக்கடி, இயற்கைச்சீற்றங்கள் முதலிய பல்வகை அறைகூவல்களைக் கூட்டாக சமாளிக்க விரும்பும் எண்ணத்தையும் இதன் மூலம் அறிந்து கொண்டேன்.

சேந்தமங்கலம் எஸ்.எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

சீன மக்களின் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் குறித்து நிகழ்ச்சியில் கேட்டேன். இரவு உணவை 7 மணிக்குள் முடிந்து விடுகிறார்கள். தமிழகத்தை போல தேர்வுக்கு தெர் டீ, காப்பி கடைகள் இல்லை. கறுப்பு தேனீர் தான், இதை போன்ற பல தகவல்களை நட்பு பாலம் நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன். சீனவிற்கு செல்கின்ற தமிழர்களை கண்டு பிடித்து. அவர்களை நட்பு பாலம் நிகழ்ச்சிக்கு இடம் பெற செய்தது தமிழ் பிரிவுக்கு பாராட்டுகள்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040