பேளுக்குறிச்சி கே.செந்தில் அனுப்பிய மின்னஞ்சல்
சுற்றுச்சூழல் பாதுக்காப்புத் துறையில் சீனாவின் கோரிக்கை என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்ட தகவல்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி அறிந்தேன். இது தொடர்பான சீனாவின் கருத்துக்களை வரவேற்கிறேன். தற்போது உள்ள சூழ்நிலையில் சுற்றுச்சூழலை பாதுக்காத்தாலே, சில நோய்கள் வரமல் தடுக்கப்படும். எனவே இதற்கு அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும். அப்போது தான் விரைவில் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். மேலும், உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் ஐந்து நட்சத்திர உணவகம் பற்றிய தகவலை இணையத்தில் படித்தேன். கடல் மட்டத்திலிருந்து எத்தனை அடி உயரத்தில் இந்த உணவகம் உள்ளது என்ற தகவலையும் சேர்த்திருந்தால் முழுமையான தகவலாக இருந்திருக்கும்.
பெருந்துறை பல்லவி கே.பரமசிவன் அனுப்பிய மின்னஞ்சல்
திபெத் லாசா நகரில் முதலாவதாக, Ruiji விடுமுறை ஹோட்டல் என்னும் திபெத்திலுள்ள ஐந்து நட்சத்திரச் சுற்றுலா உணவகம் அதிகாரப்பூர்வமாக இயங்கத் துவங்கியதை அறிந்தேன். ஆடம்பரமான உணவகங்கள் திபெத்தில் உருவாகி வருவதன் மூலம், திபெத் உலகின் முக்கிய சுற்றுலா இடமாக மாறிவருவதை அறிய முடிகிறது. உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான சுற்றுலா உணவகத்தை இதுபோன்று இன்னும் காணப்படும் வளர்ச்சிகளால் 2015ம் ஆண்டின் இறுதிக்குள், திபெத்தில் பயணம் மேற்கொள்ளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை ஒரு கோடியே 50 இலட்சத்தை தாண்டக் கூடும் எனவும் அறிந்தேன். திபெத்திற்கு சுற்றுலா மூலம் கிடைக்கும் வருமானம் 1800 கோடி யுவானை எட்டும் அரசின் இலக்கு நிறவேறும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. பதினொன்னறாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் இருந்ததைவிட ஒரு மடங்கு அதிகரிக்க மேற்கொள்ளப்படும் இலக்கு பாராட்டக்கூடியது.
முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் அனுப்பிய மின்னஞ்சல்
திபெத் பிரதேசத்தில் மின்னாற்றல் பற்றாக்குறை முற்றிலும் ஒழிக்க சிங்காய்-திபெத் மின்னாற்றல் வலைப்பின்னல் உருவாகி வருவதை அறிந்தேன். 1038 கிலோமீட்டரில், 1600 கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கீட்டில், இவ்வாண்டின் இறுதியில் இத்திட்டப்பணி முழுமையாகி இயங்கவுள்ளது. இது , திபெத்தின் மினாற்றல் சேவையின் மையமாக இருக்கும் எனக் கருதுகிறேன். தாவரப் பாதுகாப்பு, காட்டு விலங்குப் பாதுகாப்பு, சதுப்பு நிலப் பாதுகாப்பு முதலியவற்றில் சிறப்புச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் முதலியவற்றிலும் இத்திட்டம் பங்காற்றயிருப்பது கவனத்திற்குரியது. ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்காமல், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதேவேளையில் மின்னாற்றல் வலைபின்னல் திட்டத்தை திபேத் நிறைவேற்றுவது பாராட்டுக்குரியது.
செந்தலை என்.எஸ்.பாலமுரளி அனுப்பிய மின்னஞ்சல்
திபெத் தன்னாட்ச்சி பிரதேசம் 1951 ஆம் ஆண்டு மே 23 அன்று அமைதியான விடுதலை பெற்றது குறித்து செய்திவிளக்கம் மூலம் அறிந்தேன். 60 ஆண்டுககளுக்கு முன்னர் திபெத் இன மக்கள் பட்ட துயரினையும், தற்போது திபெத் மக்கள் சுவாசிக்கும் சுதந்திர காற்று அவர்களுக்கு வழங்கியிருக்கும் மகிழ்ச்சியையும் இந்த செய்தி விளக்கம் உணர்த்தியது.
அமெரி்க்கா கலிபோர்னியா செல்வி ரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்
நெகிழி பை பயன்படுத்துவதை கட்டுப்படுத்த சீனா கட்டளையிட்டது முதல் இதுவரை நாடு முழுவதிலும் 6 இலட்சம் டன் நெகிழி மூலப்பொருட்களின் நுகர்வு குறைக்கப்பட்டிருப்பது. நல்லதொரு சமூகநல நடவடிக்கையாகும். இதற்கு மக்களின் ஆதரவும் இருக்கும் போது முழு பலனும் கிடைக்கிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் வருங்கால தலைமுறையை பதுகாக்கவும் எடுத்துள்ள நல்லதொரு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
தார்வழி பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்
கடந்த 60 ஆண்டுகளில் திபெத் மகளிரின் வளாச்சியை வெளிப்படுத்தும் நிழற்படக் கண்காட்சி பற்றிய தகவலினை செய்திவிளக்கத்தில் படித்தேன். இந்த நிழற்பட கண்காட்சியானது பெய்ஜிங்கிலுள்ள மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சீன அருங்காட்சியகத்தில் துவங்கியதாக அறிந்தேன். திபெத் தன்னாட்சி பிரதேச மகளிர் பெற்ற முன்னேற்றங்களைப் வெளிப்படுத்தும் 160க்கு மேலான நிழற்படங்களை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதை அறிந்து கொண்டேன். திபெத்தில் சுமார் பத்து இலட்சம் அடிமைகள் விடுதலை பெற்று, இன்று உரிமை குடிமக்களாய் வலம் வருவதை பறைசாற்றுவதாக இக்கண்காட்சி அமைந்திருக்கிறது.
தேவநல்லூர் எஸ்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்
மே திங்கள் 25 காலை ஒலிபரப்பில் செய்திகள் மூலம் தகவல்கள் பல அறிந்தேன். அதன் பின்னர் இடம்பெற்ற நேருக்கு நேர் பகுதியில் திருநெல்வேலி பொருனை பாலு அவர்கள் வழங்கிய பேட்டியின் இரண்டம் பகுதி இடம்பெற்றது. அதில் நேயர் வட்டம், கருத்தரங்கு கூட்டத்தில் நடந்த நேயர்கள் சந்திப்பு ஆகியவை பற்றி சிறப்புற வழங்கினார். தொடர்ந்த சீன கதையில் கேட்பதற்கு நன்றக அமைந்தது. நன்றிகள் பல.
நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்
சீனாவில் குழந்தைகள் இழப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது என்று சீன வானொலி செய்திகளில் ஒலிபரப்பியது. வருங்கால சன்னதியினரின் நலவாழ்வுக்கு சீன அரசு அதிக முக்கியத்துவம் தருவது பாராட்டத்தக்கதாகும். 1991 ஆம் ஆண்டு இருந்த குழந்தைகளின் இறப்பை விட 73.1 விழுக்காடு குறைத்து ஐநாவுக்கு அளித்த வாக்குறுதிகளை 5-ஆண்டுகளுக்கு முன்பே நனவாக்கியுள்ள சீன அரசுக்கு பாராட்டுகள். மேலும், உலகிலேயே கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்திலுள்ள ஐந்து நட்சத்திர உணவகம் பற்றி செய்தி பிரமிக்க வைத்தது.
திண்டுக்கல் கே. வேலுச்சாமி அனுப்பிய மின்னஞ்சல்
மலர்சோலை நிகழ்ச்சி கேட்டேன். "அன்னையும் பிதாவும் முன்னறிவு தெய்வம்" "தாயிற்சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்ற கூற்றுகள் தாய் தந்தையின் பெருமையினை பறைசாற்றுகின்றன. ஒவ்வொரு பிள்ளையும் தனது தாயை போற்றும் வகையில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் அன்னையர் தினம் முதன் முதலாக எங்கு தோன்றியது? அக்கொண்டாட்டத்தின் ஆரம்ப கால வளர்ச்சி முதல் இன்றைய கால கட்டம் வரை அனைவரும் அருமையாக அறிந்துகொள்ளும் வகையில் மலர்சோலை நிகழ்ச்சி அமைந்திருந்தது என்றால் மிகையாகாது.
வளவனுர் புதுபாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்
அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்புநிகழ்ச்சியில், உடலில் தோன்றும் வலிகள் தொடர்பான தகவல்களை மிகவும் சிறப்பான முறையில் வாணி வழங்கினார். உடலின் பின்பகுதியி்ல் தோன்றும் வலிகள் மிகவும் கடுமையானவை. அவற்றை அகற்ற எவ்வாறெல்லாம் முயற்சிக்க வேண்டும் என கூறப்பட்ட தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. பொதுவாக, தற்போதைய இளைய சமூகம், கணினி முன் அமர்ந்து, ஒரு நாளின் பல மணி நேரங்களை கழிக்கின்றது. ஆனால், இத்தகைய பழக்க வழக்கம் தவறு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நோயற்ற வாழ்வே வாழ்வின் சாதனையாக இருக்க வேண்டும்.