• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவில் நடைபெற்ற நினைவு நடவடிக்கைகள்
  2011-07-01 09:03:00  cri எழுத்தின் அளவு:  A A A   








இந்தியாவின் புகழ் பெற்ற மகத்தான கவிஞர் ரபீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூருவது பற்றி சீன-இந்திய பண்பாட்டு ஆண்டின் அம்சமாக பொது அறிவு போட்டியை நடத்துகின்றோம். இந்த போட்டியின் இரண்டாவது கட்டுரையில் இந்தியாவில் ரபீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நினைவு கொண்டாட்டம் பற்றி கூறுகின்றோம். கட்டுரை வழங்குவதற்கு முன் இது தொடர்பான இரண்டு வினாக்களை கவனமாக கேளுங்கள்.

1. நினைவு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட இந்திய நிதி அமைச்சரின் பெயரை எழுதுக.

2. கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 2011ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் எத்தனை நினைவு நடவடிக்கைகள் நடைபறவுள்ளன?

சரி, இப்போது எங்களுடன் சேர்ந்து இப்போட்டியின் இரண்டாவது கட்டுரையை பாருங்கள்.

மே 7ம் நாள் பெய்ஜிங்கில் தாகூரின் 150வது பிறந்த நாளை நினைவு கூரும் போது புதுதில்லியில் இதே போன்ற நினைவு நடவடிக்கையும் நடைபெற்றது.

எட்டாத வானை என் மனத்தால் அணைக்கிறேன். அழகான காட்சியிடங்கள் என்னுடன் பேசுகின்றன. என் ஆத்மா இசை மூலம் பதிலளிக்கும் என்று இந்த கவிதை வர்ணிக்கின்றது.

மே 7ம் நாள் முற்பகல் ஒரு பெண் உணர்வுப்பூர்வமாக இக்கவிதையை வாசித்ததுடன் தாகூர் பிறந்த 150வது ஆண்டு நினைவு கூரும் கூட்டம் தில்லியில் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், ஆளும் கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி அம்மையார், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா உட்பட இந்திய அமைச்சரவையின் முக்கிய உறுப்பினர்கள் இந்த நினைவு கூட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு அலுவலர்கள் நினைவு கூட்டத்தில் கலந்து கொள்வது இந்தியாவில் தாகூருக்கான முக்கியத்துவத்தையும், தாகூர் இந்தியாவுக்கு ஆற்றிய பங்கையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

கூட்டத்தில் தலைமை அமைச்சர் மன்மோகங் சிங் முக்கிய உரை நிகழ்த்திய போது, இந்திய வரலாற்றில் தாகூர் வகிக்கும் சிறப்பு நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். தாகூரின் மனித நேயமும் பல்வேறு நாடுகளுடன் அவர் மேற்கொண்ட பரிமாற்றமும் வெளிநாடுகளுக்கு இந்தியா பண்பாட்டுப் பரவலை வளர்ப்பதற்குத் தலைசிறந்த வாய்ப்பினை வழங்கியுள்ளன. இது பற்றி அவர் கூறியதாவது.

தாகூர் உலகில் பரவச்செய்த மனித நேயச் சிந்தனை தற்போதைய உலகில் பல ஒத்த கருத்துக்களை எழுப்பச் செய்துள்ளன. கீழை மற்றும் மேலை உலகுக்கிடையிலான வெவ்வேறான நாகரிகங்கள் நிலைநிறுத்தப்பட வேண்டும். அவற்றின் எழுச்சி ஒத்தத் தன்மையுடையது. தற்போதைய மக்கள் அவர்களின் உள்ளார்ந்த பலவீனத்தைச் சமாளிப்பதற்கு இது வழிகாட்டும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலகின் பல இடங்களில் குறிப்பாக தாகூருடன் தொடர்பு கொண்ட நாடுகளில் அவரை நினைவு கூரும் நடவடிக்கைகள் நடந்தன. இது மிகச் சிறந்த சாட்சியாக திகழ்கின்றது என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கூறினார்.

இதற்கிடையில் இந்திய பண்பாட்டு அமைச்சர் குமாரி செல்ஜாவும் நினைவு கூரும் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

தாகூர் உலகத்துக்கு இந்திய பண்பாட்டை அறிமுகப்படுத்திய தூதராக விளங்கினார். கவிதை, இசை, நாடகம், ஓவியம் முதலிய துறைகளில் தாகூரின் செழுமையான அனுபவங்கள் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தின. அவரது தத்துவச் சிந்தனை அவர் தோற்றுவித்த சர்வதேச பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று பண்பாட்டு அமைச்சர் குமாரி செல்ஜா கூறினார்.

மகத்தான கவிஞர் தாகூரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு மே 7ம் நாள் முதல் 9ம் நாள் வரை புதுதில்லி, கல்கத்தா, வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா ஆகியவற்றில் ஒரே நேரத்தில் பல நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன. 2011ம் ஆண்டு முழுவதும் இந்தியாவில் 200க்கும் அதிகமான நினைவு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளன. வெளிநாடுகளில் நினைவு நடவடிக்கைகளை நடத்த இப்போது திட்டமிடப்பட்டு வருகின்றது. அப்போது இந்திய அரசு போதியளவில் நிதி ஆதரவு வழங்கும். இது பற்றி இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் இந்நினைவு கூட்டத்தில் கூறியதாவது

மனித குலத்தின் ஒற்றுமையை இடைவிடாமல் முன்னேற்றி ஒருவருக்கொருவர் உதவி, அன்பாக பழகுவதற்கு சிறந்த முறையில் பங்கு ஆற்றியவர்களைப் பாராட்டும் வகையில் இந்திய அரசு தாகூர் பெயரிலான சர்வதேச விருதை நிறுவத் தீர்மானித்துள்ளது. இதற்காக தேர்வுக் குழுவை இந்திய தலைமை அமைச்சர் தானே உருவாக்குவார். ஆண்டுதோறும் உலகளவில் தலைசிறந்தவர் ஒருவரை தேர்ந்தெடுத்து விருதளித்து பாராட்டும். தாகூர் பரப்பிய மனித குலத்தின் பொறுமையைப் பாராட்டுவோர் தமது செயல்களின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் கூறினார்.

இந்திய பண்பாட்டு ஆணையம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, உலகின் 21 நாடுகளில் இந்தியா 24 தாகூர் பண்பாட்டு மையங்களை நிறுவியுள்ளது. அவற்றின் மூலம் பண்பாட்டுப் பரவல் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. தாகூரை மையமாக கொண்ட அமைப்புமுறையின் மூலம் இந்தியா உலகளவில் அழகான பாலமொன்றை நிறுவியுள்ளது என்று உணரலாம்.

இந்திய அரசு மேற்கொண்டுள்ள பல நடவடிக்கைகள் கல்வியியல் துறையால் ஆதரிக்கப்படுகின்றன.

தில்லி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையில் பணிபுரிகின்ற பேராசிரியர் Sreemati Chkrabarti இது பற்றி எமது செய்தியாளரிடம் கூறிய கருத்தை கேட்போம்

பண்பாட்டுப் பரவல் மிகவும் முக்கியமானது. இதன் மூலம் பல்வேறு நாடுகளின் பொது மக்களுக்கிடை உறவு நெருக்கமாக்கப்படும். இது மக்களுக்குள் நட்பை ஏற்படுத்தும். இது நாட்டின் தூதாண்மை முயற்சியின் அடிப்படையாக உணரலாம் என்று அவர் கூறினார்.

மகத்தான கவிஞர் தாகூரின் பேத்தி பேரன்கள் தாத்தாவின் சிந்தனை, தத்துவம் மற்றும் படைப்புகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகத்தின் அறிஞராக போற்றப்படுகின்ற தாகூரின் கொள்ளுப் பேரன் Saranindranath Tagore நமது செய்தியாளருடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.

தாகூர் தன் வாழ்நாளில், உலகின் பல்வேறு இடங்களில் பயணம் மேற்கொண்ட போது உள்ளூரின் புகழ் பெற்ற அறிஞர்கள் மற்றும் சமூகத்தின் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு பழகினார். அவரது படைப்புகள் பலப்பல மொழிகளில் பெயர்க்கப்பட்டு பொது மக்கள் படிக்க விரும்பும் படைப்புகளாகியுள்ளன. இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்குமிடை பண்பாட்டுப் பரிமாற்றத்துக்குத் தாகூர் நட்பு விதையை நட்டார் என்று Saranindranath Tagore கூறினார். திரு Saranindranath Tagore மேலும் கூறியதாவது.

தாகூர் இந்திய பண்பாட்டை அடையாளப்படுத்தும் மனிதராவார். அவரது வாழ்க்கை அனுபவம் மற்ற நாடுகளுடன் நட்பாக பழகும் இந்தியாவுக்கு சிறந்த பங்கு ஆற்றியுள்ளது. அவர் பரப்பிய மனித குலத்தின் பொறுமை என்ற எழுச்சி தொடர்ந்து வழிகாட்டும் பங்கை வெளிக்கொணரும் என்று திரு Saranindranath Tagore கூறினார்.

சரி நேயர் நண்பர்களே, சீன-இந்திய பண்பாட்டு ஆண்டு என்னும் பொது அறிவு போட்டியின் 2வது கட்டுரையை கேட்டீர்கள். நாளை இந்த பொது அறிவுப் போட்டியின் 3வது கட்டுரை ஒலிபரப்பப்படும். தவறாமல் கேளுங்கள். போட்டியில் விறுவிறுப்பாக கலந்து கொண்டு பங்கு ஆற்றுங்கள். அருமையான பரிசு பெறும் வாய்ப்பு உங்களுக்காக காத்திருக்கும்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040