• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 6ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதி
  2011-07-20 14:26:31  cri எழுத்தின் அளவு:  A A A   
திருச்சிஅண்ணாநகர் வீட்டியார்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 90வது ஆண்டு நிறைவுக்கு எனது வாழ்த்துக்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், தேசிய இன சுதந்திரம் மற்றும் விடுதலையை சீன மக்கள் நனவாக்கி, சோஷியலிச அடிப்படை அமைப்பு முறையை நிறுவி, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷியலிச பாதையைத் துவக்கி வைத்து சீன மக்கள் குடியரசை உன்னத நிலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஊத்தங்கரை கவி. செங்குட்டுவன்,

ஜூலை முதல் நாள் ஒலிபரப்பில் இடம்பெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 90வது ஆண்டு நிறைவு எனும் செய்தித் தொகுப்பு கேட்டேன். பெய்சிங் மக்கள் மாமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 90 வது ஆண்டு நிறைவுக் கூட்டம் பற்றியும் அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் முக்கிய உரை நிகழ்த்திய செய்தியையும் அறிந்தேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 90 ஆம் ஆண்டு நிறைவிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வளவனுர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்,

ஜுலைத் திங்கள் முதல் நாள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 ஆம் ஆண்டு நிறைவு நாளாகும். இந்த நாளின்போது, சீனாவின் பெய்ஜிங் மாநகரில் தங்கியிருப்பதை நினைக்கும்போது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. சீன மத்திய தொலைக்காட்சியின் பல்வேறு தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம், கொண்டாட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக அறிந்து கொண்டேன். கம்யூனிஸ்ட் கட்சியின் கொண்டாட்ட நடவடிக்கைகளில் சீன மக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளதை கவனிக்கும்போது, சீனாவின் வளர்ச்சிக்கு மேலும் ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இதே நாளில் துவக்கப்பட்டிருக்கும் பெய்ஜிங்-ஷாங்காய் உயர்வேக இருப்புப் பாதை போக்குவரத்து அதன் அடையாளம்தான். வாழ்த்துக்கள்.

முனுகபட்டு பி.கண்ணன்சேகர்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் 90வது ஆண்டு நினைவு கலந்துரையாடல் கூட்டம் பெய்சிங்கில் நடைபெற்றுள்ளது. சீனாவின் முன்னேறிய அடி மட்ட நிலை கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளும், தலைசிறந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், தலைசிறந்த கட்சி பணியாளர்களின் பிரதிநிதிகளும் அக்கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி பொதுச் செயலாளர் ஹூச்சிந்தாவ் அவர்களைச் சந்தித்தது பயனுள்ள நிகழ்ச்சியாக கருதுகிறேன். கடந்த 90 ஆண்டுகளில், புரட்சி, கட்டுமானம் மற்றும் சீர்திருத்தத் துறைகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்றுள்ள ஒளிமயமான சாதனைகளில், மிகப் பல அடி மட்ட நிலை கட்சி அமைப்புகளும், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பெரும் பங்கு வகிக்கின்றனர் என்றால் அது மிகையில்லை.

விழுப்புரம். எஸ்.பாண்டியராஜன்,

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் சீனா பெற்றுள்ள மாபெரும் முன்னேற்றம் இன்று உலகை நிமிர்ந்து பார்க்கச் செய்துள்ளது. வளர்ச்சியில் எதிர்கால முன்னேற்றம் என்ற நோக்கத்துடன் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்களும் இணைந்து பாடுபட்டு இன்றைய நிலைக்கு வழிவகுத்துள்ளனர். தற்சார்பு நிலையில் இன்று சீனா உலகின் முன்னணியில் மிடுக்குடன் நடைபோட்டு வருகிறது. இந்த நாளில் நாங்கள் சீனாவில் இருந்து சீன மக்களுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த பெருமை கொள்கின்றேன்.

சேந்தமங்கலம், S.M.இரவிச்சந்திரன்

செய்திகளில் ஷாங்காயிலிருந்து பெய்ஜிங்கிற்கு அதிவேக தொடர்வண்டிச் சேவை துவக்கி வைக்கப்பட்டதை அறிந்தேன். பொதுவாக 10மணி நேரம் பயணம் என்பதை இந்த உயர்வேக தொடர்வண்டி நான்கே கால் மணி நேரமாக குறைப்பதை அறிந்தபோது, இதே போல் இந்தியாவிலும் விரைவில் உயர்வேக தொடர்வண்டிச் சேவை வரவேண்டும் என்று தோன்றியது.

சிறுநாயக்கன்பட்டி, திண்டுக்கல் கே.வேலுச்சாமி

பிரிட்டனில் சீனத்தலைமை அமைச்சர் ஆற்றிய சொற்பொழிவு என்ற செய்தி விளக்கத்தினை கேட்டேன். தத்தம் நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கு தனது முழு பங்களிப்பினை தந்த அரசுத் தலைவர் அல்லது தலையமைச்சருக்கு மட்டுமே தரப்படும் பிரிட்டனின் ராயல் கழகத்தின், மன்னர் இரண்டாம் சார்லஸ் பதக்கத்தை மதிப்பிற்குரிய சீன தலைமை அமைச்சர் வென்சியாபாவ் அவர்களுக்கு பிரிடடன் அரசு வழங்கி சிறப்பு செய்தது. இது இரு நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரியும் என்றால் மிகையாகாது. சீனத்தலைமை அமைச்சரின் இப்பயணம் இரு நாட்டின் நட்புறவில் புதிய மைல் கல்லாகும்.

காங்கேயம் பி.நந்தகுமார்

ஜூலை முதல் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சி கேட்டேன். அதில் எஸ்.செல்வம் தமிழகத்தில் சீன வானொலியை பண்பலையில் ஒலிபரப்ப முடியாததற்கான காரணத்தை கூறினார். இருப்பினும் சமுதாய பண்பலை வானொலியில் ஒலிபரப்ப முயற்சி மேற்கொள்வது பாராட்டக்கூடியது.

அமெரிக்கா.கலிபோர்னியா=செல்வி ரவிச்சந்திரன்

உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த கடந்த 10 ஆண்டுகளாக, சீனா தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பது குறித்து தமிழ்ப்பிரிவின் இனையதளத்தில் பார்த்தேன். உலக வர்த்தக எழுச்சியை சீனா முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப நேர்மையுடன் செயல்பட்டிருப்பதை இது காட்டுகிறது. அதே வேளையில், பிற உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்கும் பங்கு ஆற்றியிருப்பது சீனாவின் பெருந்தன்மையை காட்டுகிறது..

பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார்

ஜுன் திங்கள் 29 அன்று காலை செய்திகளில், கடிகாசலம் அவர்கள் சென்னையில் இருந்து இலங்கை திரிகோணமலைக்கு விடபட்ட கப்பலை பற்றி சிறப்பாக தகவல் தந்தார். அதைத் தொடர்ந்து சுற்றுப்பயணம் செய்த நேயர்கள் தந்த செய்தியில் அவர்கள் சுற்றி பார்த்த இடங்களை அறிய முடிந்தது.

பரசலுர்=பி.எஸ்.சேகர்

ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு புதிதாக 25 உலக மரபுச் செல்வங்களை பட்டியலில் சேர்த்துள்ளது என்று அறிந்தோம். அவற்றில் சீனாவின் ஹாங்ஷோ நகரின் மேற்கு ஏரிப் பண்பாட்டுக் காட்சியிடம் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சி. அதிலும், பண்பாட்டு மரபுச் செல்வங்கள் அதிக எண்ணிக்கையில் சீனாவில் இருப்பது எங்களுக்கு பெருமையே.

சென்னை, மணலி எப்.எம்.பி.மாறன்

ஜூலை இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் விளையாட்டுச் செய்திகளில் ஆசிய விளையாட்டை பற்றி, அரங்குகள் மற்றும் திடல்களின் தொடர் பயன்பாடு பற்றி அருமையாக வழங்கினிர்கள் நன்றி..! உங்கள் குரல் நிகழ்ச்சியும் அருமை.

ஏரிக்காடு பூபதி

ஜூன் 27 முதல் 30ம் நாள் வரை தாகூர்அவர்களின் 150 வது பிறந்த நாளை நினைவுகூர்வது பற்றிய பொதுஅறிவு போட்டியின் நான்கு கட்டுரைகள் ஒலிபரப்பப்பட்டன. கேட்டு மகிழ்ந்தோம். விரைவில் விடைத்தளை நிரப்பி அனுப்பிவைப்போம்.

கோகுல்வாடி, கணேசன்

நேயர்கள் எஸ். செல்வம், எஸ். பாண்டியராஜன் மற்றும் என். பாலக்குமார் சீனாவில் நட்புப்பயணம் மேற்கொண்டதை அறிந்து மகிழ்ந்தேன். அவர்கள் பயணத்துக்கான உதவி, வானலை மற்றும் இணையதளத்தில் அவர்கள் பயண அனுபவங்களை பகிர்ந்துகொள்ள வாய்ப்பு, இவையெல்லாம் சீன வானொலி மட்டுமே செய்யக்கூடியது. வானொலி நேயர்களுக்கு வேறு எந்த வானொலியில் இவ்வளவு முக்கியத்துவம் தருவதில்லை. அதற்காக, அனைத்து நேயர்களின் சார்பில் என் நன்றியை சீன வானொலிக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்ப்பிரிவின் நேயர்கள் சார்பில், செல்வமும் நண்பர்களும், சீன வானொலியின் துணை இயக்குனருக்கு அன்பளிப்பு நினைப்பொருட்கள் அளித்ததற்காக அவருக்கும், நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

தார்வழி. பி.முத்து

ஜூன் திங்கள் 20ம் நாள் முதல் நமது நண்பர்களான செல்வம், பாண்டியராஜன், பாலக்குமார் நாள்தோறும் சீனாவில் பயணம் மேற்க்கொண்டுவரும் விவரத்தினை வழங்குவது சிறப்பாக உள்ளது. நாங்களும் அவர்களுடன் பயணம் செய்வது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. நன்றி, பாராட்டுக்கள்.

திருநீலக்குடி, மா.உலகநாதன்

சீன வானொலிக்கு ஓயாமல் தொடர்ந்து எழுதி எழுதி, வானொலியின் ஆதரவோடு , இன்று சீனாவில் பயணம் மேற் கொண்டிருக்கும் திருவாளர்கள் செல்வம்,பாண்டியராஜன், பாலகுமார் ஆகிய அன்பு நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள். சீன வானொலி துனைத்தலைவரை சந்தித்து உரையாடியிருப்பது மகிழ்ச்சிக்குரியது

சீனாவின் ,மனங்கவரும் சுற்றுலாதலங்களையும் பார்த்து வருகிறீர்கள் .நான் மானசீகமாக இங்கிருந்தே நினைத்து மகிழ்கிறேன். தமிழ்ப்பிரிவின் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைத்து வருவது ,அவர்களின் விருந்தோம்பல் பண்புக்கு சான்றாகிறது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040