• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 13ம் நாளிட்ட நேயர்நேரம் நிகழ்ச்சியின் கடிதப் பகுதி
  2011-07-20 14:26:52  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை அன்பான நேயர்களே! இன்றைய நேயர்நேரம் நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவது தி.கலையரசி.

தமிழன்பன் தமிழன்பன். நிகழ்ச்சிகள் பற்றி நேயர்கள் தெரிவித்த கருத்துக்களை வானலை வழியாக உங்களுக்கு வழங்குகின்றோம்.

கலை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்ட 90 ஆம் நிறைவு ஆண்டு பற்றிய கள ஆய்வு தமிழ்ப் பிரிவின் இணைதளத்திலுள்ள சிறப்புப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள கேள்விகளுக்கு விடையளித்து எமது கள ஆய்வில் பங்கெடுக்க மறந்துவிட வேண்டாம்.

தமிழன்பன் மேலும், இரபீந்திரநாத் தாகூர் பிறந்த 150வது ஆண்டு நினைவாக நடத்தப்படும் பொது அறிவுப் போட்டி வினாக்களுக்கு விடைகள் எழுதி அனுப்ப தொடங்கியிருப்பீர்கள். உங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் இந்த போட்டியில் பங்கெடுக்க செயவதோடு, இந்திய சீன நட்புறவுக்கு இரபீந்திரநாத் தாகூர் ஆற்றிய பங்களிப்பை அனைவரும் அறிய செய்யுங்கள்.

கடிதப்பகுதி

கலை கடிதப்பகுதியில் முதலாவதாக, சென்னை பி.குமரேசன் சீன இசை நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். சீன இசை நாடகத்திலிருந்து சிலப் பாடல்களை திலகவதி அவர்கள் வழங்கினார்கள். சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியோடு அர்பணித்து கொண்டவரின் பாடல் மிகவும் அருமையாக இருந்தது. விளையாட்டுச் செய்திகளில் ரஷியாவில் நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகள் பற்றி திரு மோகன் விரிவாக வழங்கினார். சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு வசந்தகால அலை எண்ணுக்கு மாற்றப்படுவதை அறிவிப்பில் செவிமடுத்தேன்.

தமிழன்பன் அடுத்தாக, இலங்கை ஒலுவில் ஆர்.இஸ்பா சீன தமிழோலி இதழ் பற்றி அனுப்பிய கடிதம். கடைசியாக பெற்றுக் கொண்ட சீன தமிழோலி இதழில், பல விடயங்களை அறிந்து கொண்டேன். புலி ஆண்டு பற்றி கிளிட்டஸ் அவர்கள் மிக தெளிவாக விளக்கியிருந்தார். அந்த இதழை படிப்பதற்கு இனிமையாகவும், சுவையாகவும் இருந்தது. இவ்வாண்டு தொடக்கத்தில் இலங்கையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு எங்களுடைய அன்றாட வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது. போக்குவரத்து, மின்னாற்றல், தொலைத் தொடர்பு வசதிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. எனவே சீன வானொலியை நாள்தோறும் கேட்க முடியவில்லை.

கலை தொடர்வது, திருவண்ணாமலை மேட்டுக்குடிசை எஸ்.இராமனாதன் வறிய மக்கள் தொகை குறைப்பில் சீனா பற்றி எழுதிய கடிதம். சீனாவில் வறிய மக்கள் தொகை ஆறு கோடியே 43 இலட்சத்து பத்தாயிரமாக இருந்ததை 2010 ஆம் ஆண்டில் இரண்டு கோடியே 68 இலட்சத்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்ட சாதனையை செவிமடுத்தேன். சீனாவில் மேற்கொள்ளப்பட்ட வறுமை குறைப்பு சாதனை உலக நாடுகள் முன்னுதாரணமாக கொண்டும் பின்பற்றப்படவேண்டிய ஒன்று. உலக மக்கள் தொகை குறைப்பிலும், ஐநா வகுத்த புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குக்கும் இது சிறந்த பங்களிப்பு செய்திருக்கிறது. இந்த வறுமை ஒழிப்பு சாதனை கூட சீனாவின் படிப்படியான வளர்ச்சியை காட்டுகிறது என்று சொல்லலாம்.

தமிழன்பன் இனி, ஆரணி ஜி.கீதா செய்திகள் பற்றி அனுப்பிய கடிதம். சீன தேசிய அருங்காட்சியகத்தின் புதுப்பிப்பு பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்ட செய்தி அறிவிக்கப்பட்டது. நவீன நுட்பங்களோடு, விரிவாக்கப்பட்டு உலகில் பெரிய அருங்காட்சியகமாக உருவாக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. சீன மக்கள் குடியரசு உருவான பாதையையும், வரலாற்றையும் இந்த அருங்காட்சியகத்தை கண்டு களிப்போர் அறிந்து கொள்ளும் வகையில் முப்பரிமாண காட்சிகளோ வடிவமைக்கப்பட்டுள்ளதை கேட்டு வியப்படைந்தோம். மேலும், திபெத் புத்தாண்டின்போது லாசா நகரில் மேற்கொள்ளப்படும் கொண்டாட்ட நடவடிக்கைகளையும் அதற்காக லாசா நகர் அழகுபடுத்தப்பட்டு கோலாகல சூழ்நிலை உருவாக்கியிருப்பதையும் அறிந்து மகிழ்ச்சியடைந்தோம்.

கலை அடுத்து, சீன தேசிய மக்கள் பேரவையின் 11வது கூட்டத்தொடரில் சீன தலைமை அமைச்சரால் வழங்கப்பட்ட பணியறிக்கையின் தகவல்கள் பற்றி திருச்சி எம்.தேவராஜா எழுதிய கடிதம். நடப்பாண்டிற்கான வளாச்சி இலக்கை ஏழு விழுக்காடாக நிர்ணயித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்ட தொடர் அசுர வேக பொருளாதார வளாச்சியால் அதிகமான இயற்கை மூலவள பயன்பாடும், பல்வேறு தொழில்துறையில் சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களிடையே வரவாய் ஏற்றத்தாழ்வு இடைவெளி அதிகரித்துள்ளது. எனவே வளர்ச்சி வேகத்தை கட்டுபடுத்தி உள்நாட்டு நுகர்வை அதிகரிக்கும் திட்டங்கள் பணியறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. இது வரவேற்கதக்க அணுகுமுறை.

தமிழன்பன் தொடர்வது, என்.எஸ்.பாலமுரளி இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பற்றி அனுப்பிய கடிதம். இரு நாட்டு உள்துறை செயலாளாகள் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதை சீன வானொலி மூலம் அறிய வந்தேன். பாதுகாப்பு, பயங்கரவாத தடுப்பு, இரு நாட்டு மக்களிடை பரிமாற்றம் ஆகியவை பற்றி பேசப்படுவது மனநிறைவை தருகிறது. 2008 மும்பை பயங்கரவாத தாக்குதல் புலனாய்வு, கூட்டு பயங்கரவாத தடுப்பு, இரு நாடுகளின் விசா விண்ணப்ப கட்டுபாடுகளை குறைத்தல் போன்றவற்றால் பதற்றமாக தொடரும் இந்திய பாகிஸ்தான் உறவில் முன்னேற்றம் ஏற்பட விரும்புகின்றோம்.

கலை இனி, ராஷியாவில் நடத்தப்பட்டு வரும் செவ்வாய் 500 என்ற சோதனை பற்றி மதுரை அண்ணாநகர் ஆர்.அமுதாராணி எழுதிய கடிதம். செய்வாய் கிரகத்திற்கு செல்வதை, புவியிலிலேயே வடிவமைக்கப்பட்ட கலத்திற்குள் 500 நாட்கள் பயணச் சோதனை செய்வது, செவ்வாய் கிரக பயணத்திற்கு முதல் காலடி என்று கூறலாம். விண்வெளிப் பயணத் திட்டங்களின் அடுத்தக்கட்ட வளர்ச்சியை இந்த செவ்வாய் கிரக ஆய்வு முயற்சி காட்டுகிறது. விண்வெளியில் ஆய்வு தொடங்கிய மனிதன் அதன் தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டதுபோல இந்த செவ்வாய் கிரக ஆய்வு முயற்சிகளும் வெற்றியடையும் என்று நம்புகின்றேன்.

தமிழன்பன் அடுத்ததாக, மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி மெட்டாலா எஸ்.பாஸ்கர் அனுப்பிய கடிதம். சீன கிராமப்புற பணிக் சுட்டம் பற்றி ஈஸ்வரி அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். நீர் சேமிப்பதை வலுப்படுத்தி மக்களின் வாழ்க்கை நிலைநிறுத்தும் விவசாயத்துறை கடந்த பத்தாண்டுகளாக சீனாவில் தொடர் வளர்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான விளைநிலங்கள் தானிய உற்பத்தியை பாதிக்கும் நிதானமற்ற காரணிகளை கொண்டுள்ளன. ஆகையால் மக்களின் வருமானத்தை உயர்த்தி அவர்களின் வாழ்க்ககையை மேம்படுத்த கிராமப்புற பணிக்கூட்டம் திட்டமிட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்கள் அருமையான வாழ்வு வாழ இது வழிவகுக்கும்.

கலை தொடர்வது, இலங்கை மீராவோடை ஜே.எஸ்.நஸ்லியா சீன மொழி கற்கும் ஆவலை தெரிவித்து எழுதிய கடிதம். சீன வானொலி ஒலிபரப்பை வானலை வழியாக கேட்டு வருகின்றேன். எமது நாட்டில் ஒலிபரப்பாகும் தமிழ் நிகழ்ச்சிகளில் சீன வானொலி நிகழ்ச்சிகள் இரசிக்கக்கூடியதாய் உள்ளன. அன்றாட சீன மொழி, தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சிகளை கேட்டு, சீன மொழியை கற்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்துள்ளது. அதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். சீன மொழியை சற்று தெரிந்து கொண்டு சீனாவில் வந்து, கல்வி பயின்று, சீனா முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்துள்ளது.

தமிழன்பன் இனி, சென்னை எஸ்.ரேணுகாதேவி அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி அனுப்பிய கடிதம். நோய் வருமுன் காப்பதையே பாரம்பரிய மருத்துவம் அறிவுறுத்துகிறது. இதையொட்டி உணவு வகைகள் மற்றும் உடல் நலம் பயக்கும் கஞ்சி வகைகள் பற்றி வழங்கிய கருத்துக்கள் மிகவும் நன்று. மருத்துவ குணமுடைய கஞ்சிகள் பற்றிய இந்த குறிப்புகள் அனைத்தும் கணினி உலகில் நுழைந்துவிட்ட பல இளையோருக்கு புதிய தகவலாகவே இருக்குமென்று நம்புகின்றேன். உணவு வகைகளை உடல் நலம் காக்கும் மருந்துகளாகவும் கருத முடியும் என்பதை இது உறுதி படுத்தியது.

கலை அடுத்து, ஆரணி கொசப்பாளையம் எம்.என்.சரஸ்வதி இந்தியாவில் நடைபெற்ற சீன தொல்பொருட்களின் கண்காட்சி பற்றி எழுதிய கடிதம். சீன தொல்பொருட்களின் கண்காட்சி புதுதில்லியிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தில் நடத்தப்பட்டதை வரவேற்கிறேன். சாங்சி, பெய்ஜிங் உள்பட சீனாவின் பலநகரஙகளில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்கள், பீங்கான்கள், ஜேடு போன்ற விலை உயர்ந்த பல்வண்ண கற்கள், வெண்கலப் பொருட்கள், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் என 95 சீன தொல்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதாக அறிந்தேன். மேலும், 2008 ஆண்டு ஏற்பட்ட உணவு தானிய விலை உயர்வோடு, உலகளவில் நிலவிவரும் நெருக்கடி பற்றிய விபரங்களையும், பாதிப்புகளையும் செய்திகள் மூலம் அறிந்து கொண்டேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040