• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 13ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதி
  2011-07-20 14:27:15  cri எழுத்தின் அளவு:  A A A   
திருச்சி அண்ணாநகர் வி.டி இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

ஜூன் திங்களில், சீன மக்கள் நுகர்வு விலை குறியீடு, கடந்த ஆண்டு இத்திங்களை விட 6.4 விழுக்காடு உயர்ந்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறது. இது சீன மக்களின் வாங்கும் ஆற்றல் அதிகரிப்பையும், வாழ்க்கை வசதிகள் மேம்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. மேலும், கடற்சர்ச்சை குறித்து சீனா பிலிப்பைன்ஸ் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கருத்துக்களைப் பரிமாறியிருக்கின்றனர். இந்த சர்ச்சையால் இரு நாடுகளுக்கிடை நட்பார்ந்த ஒத்துழைப்பு பாதிக்கப்படாமல் இருக்க இது துணைபுரியும் என நினைக்கின்றேன். அமைதியான வளர்ச்சிப் பாதையை முதன்மை கடமையாக மேற்கொள்வதே சீனாவின் தூதாண்மைக் கொள்கை என பல காலகட்டங்களில் சீனா தெளிவுபடுத்தி வருகிறது.

சென்னை அ.அப்துல் காதர் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவின் நாணயக் கொள்கையின் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதை செய்திகளில் அறிந்தோம். சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் இது ஒரு முக்கியமான அம்சம். மேலும் கடந்த ஆண்டை விட இவ்வாண்டு ஏற்றுமதியின் அளவு 25 விழுக்காடு அதிகரித்திருப்பது சீனாவின் வளர்சிக்கு நல்ல அடித்தளம். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட நேயர் நாச்சிமுத்து தமது கருத்துகளை நன்றாகவே வெளிபடுத்தினார். சீன வானொலி பற்றி பள்ளிகள் தோறும் சென்று அறிமுகபடுத்தி வருவது பாராட்டுக்குரியது.

காங்கேயம் பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்

பாண்டிச்சேரி என்.பாலகுமார், வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், விழுப்புரம் பாண்டியராஜன் ஆகிய மூவரும் வெற்றிகரமாக சீனப்பயணத்தை முடித்து தாயகம் திரும்புகிறார்கள் என்ற செய்திகேட்டு மிகவும் மகிழ்ந்தேன். அவர்கள் சீனாவில் இருந்த போது சீன வானொலி அறிவிப்பாளர்கள் அவர்களை குடும்ப நண்பர்களிடம் பழகுவது போல் உபசரித்து வந்ததை அன்றாடம் சீன வானொலி மூலமாகவும், இணையத்தின் வாயிலாகவும் அறிந்தேன். மேலும், இவ்வாண்டிற்கான சர்வதேச நிதி மையத்தின் வளர்ச்சி குறியீட்டில் உலகளவில் ஷாங்காய் ஆறாவது இடத்தை பெற்றிருக்கிறது. ஷாங்காயின் நிதி மையங்களின் வளர்ச்சி தொடர வாழ்த்துக்கின்றேன். இவ்வாண்டின் முதல் அரையாண்டில் சீனாவின் சின்ச்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா அசுர வேக வளர்ச்சி, அதன் எதிர்கால சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை நனவாக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

தேவநல்லூர் எஸ்.செந்தில்குமார் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் சுற்றுப் பயனம் செய்த செல்வம் பாலக்குமார் பாண்டியராஜன் ஆகியேர் 19 நாள் பயண அனுபவங்களை அறிவித்தது, நாங்களும் அவர்களோடு சேர்ந்து சீனாவை சுற்றி பார்த்தது போல் இருந்தது. இந்த பயண அனுபவங்கள் சீனாவில் சுற்றுலாபயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலை தூண்டியது. அதற்கான முயற்சிகளை செய்து வருகிறேன். சொந்த செலவில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும், அதற்கு விசா பெறுவது எப்படி? சென்னையில் இருந்து பெய்ஜிங் செல்ல வழிகள் ஆகியவற்றை தற்போது சுற்றுப்பயணம் செய்திருக்கிற பாலகுமாரிடம் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியாக ஒலிபரப்பலாமே.

சேந்தமங்கலம் எஸ். எம். இரவிச்சந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

மன்னர் மஞ்சள் பேரரசர் நெல்லை சீனாவில் அறிமுகம் செய்திருக்கிறார். தெற்கு சீனாவில் தான் நெல் முதன்முதலில் விளைவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் தாய்லாந்து, இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்கு நெல் அறிமுகமாகியுள்ளது. அலெக்ஸாண்டர் இந்தியா வந்தபின் இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு அரிசி அறிமுகம் ஆனாது. இந்த தகவல்களை மலர்ச் சோலை மூலம் அறிந்தேன். அரிசி இந்தியாவில் தான் முதலில் விளைந்தது என்று எண்ணியிருந்தேன். ஆனால் சீனாவில் இருந்து தான் இந்தியாவிற்கு நெல் பயிரிடும் முறை வந்துள்ளதை சீன வானொலி நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன்.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

சீன வியட்நாம் தலைவர்களின் சந்திப்பு பற்றி சீன வானொலி ஒலிபரப்பிய செய்தி மிகவும் வரவேற்கதக்கதாக இருந்தது. வியட்நாம் வெளியுறவு அமைச்சர் சீன அரசவை உறுப்பினரை பெய்ஜிங்கில் சந்தித்து தென் சீன கடல் நிலைமை பற்றி விவாதித்தது பாராட்டத்தக்கதாகும். 1970-களில் அமெரிக்கா வியட்நாமை கொடியமுறையில் துன்புறுத்தியபோது சீன அரசும், மக்களும் வியட்நாம் அரசுக்கும், மக்களுக்கும் எல்லா வகைகளிலும் உதவி செய்ததை வியட்நாம் அரசு கருத்தில் கொண்டு சீன அரசுடன் ஒத்துழைப்புக்களை தொடர்ந்து வருவதை அறிந்து மகிழ்ந்தேன்.

சென்னை மணலி எப்.எம்.பி.மாறன் அனுப்பிய மின்னஞ்சல்

சீன வானொலியின் துணைத்தலைவர் மாபோஹூய் அவர்களிடம் செல்வம் அவர்கள் உரையாடியது நட்புபாலத்தில் ஒலிபரப்பானது. மிகவும் அருமை. இதுரை 22 நேயர்கள் கருத்தரங்கு நடந்துள்ளது. நேயர்களுக்காக இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளதையும் செல்வம் துணைத்தலைவரிடம் கூறினார். அடுத்ததாக, நேயர்நேரம் நிகழ்ச்சியில் டி.கலையரசி அவர்கள் பல நேயர்களின் கடித மலர்களை வாசித்து காட்டியது இனிமையாக இருந்தது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040