• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜுலை 20ம் நாளிட்ட நேயர் நேரம் நிகழ்ச்சியின் மின்னஞ்சல் பகுதி
  2011-07-20 14:27:54  cri எழுத்தின் அளவு:  A A A   
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம் அனுப்பிய மின்னஞ்சல்

சீன அரசுத் தலைவர் அமெரிக்காவின் சிக்காகோ நகரின் பள்ளி ஒன்றின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துரையாடினார் என்பதை இன்றைய செய்திகளில் அறிந்தேன். இத்தகைய நிகழ்வுகளின் மூலம், சீனாவை புரிந்து கொள்ள மறுக்கின்ற சில நாடுகளின் இளைய தலைமுறையினரிடையே சரியான புரிந்துணர்வை உருவாக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகளை மனதார வரவேற்கின்றேன். மேலும், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் அமைதி விடுதலை பெற்ற 60 ஆம் ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில், சீனத் துணை அரசுத் தலைவர் சிஜீங்பிங் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிக்குழு லாசா நகரம் சென்றடைந்ததை அறிந்து கொண்டேன். அவர்களின் லாசா பயணம், இனிமையான முறையில் நிறைவேறவும், வெற்றி பெறவும் அன்பான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். திபெத்தில் நடைபெறும் கொண்டாட்ட நிகழ்வுகள் பற்றி, சீன வானொலி மூலம் விரிவான தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

முனுகபட்டு பி.கண்ணன்சேகர் அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவில் ஜூன் திங்கள் முதல் நாள் தொடங்கி, புயல் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 355 பேர் உயரிழந்தும் 112 பேர் காணாமல் போயுள்ளதை கேட்டு வருத்தமடைந்தேன். சீனாவின் 29 மாநிலங்கள், மாநகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களைச் சேர்ந்த 263 நகரங்களின் 1439 மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மண் அரிப்பு, ஆலங்கட்டி மழை முதலிய இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அவற்றில் சில மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்கள் சொல்லமுடியாத துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை கூறிக்கொள்கிறேன். 6320 கோடி யுவான் நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்புதவிகளை செய்து வருவதை அறிந்து நிம்மதி கொள்கிறேன்.

புதுக்குடி ஆர்.பாலகிருஷ்ணன் அனுப்பிய மின்னஞ்சல்

திதாக வாங்கிய வானொலியில் கடந்த பதினெட்டு நாட்களாக பு சீன வானொலி தமிழ்ப்பிரிவின் நிகழ்ச்சிகளை கேட்டு வருகின்றேன். தமிழப்பிரிவை எப்படி தொடர்புகொள்வது என்று தெரியாத நிலையில் நேயர் காங்கேயம் பி.நந்தகுமார் அவர்களின் தொலைபேசி எண் சீன வானொலி வாயிலாய் கிடைத்தது. அவர் மூலம் சீன வானொலியை பற்றி தெளிவாக அறிந்து கொண்டு மின்னஞ்சல் அனுப்ப தொடங்கிவிட்டேன். .

காங்கேயம் வி.பாலாமணி நாகராஜ் அனுப்பிய மின்னஞ்சல்

நேருக்கு நேர் நிகழ்ச்சி கேட்டேன் அதில் பகலாயூர் பி.எ. நாச்சிமுத்து கீளீட்டஸ் அவர்களுடன் உரையாடியது நன்றாக இருந்தது. அதன் மூலம் பல தகவல்களை அறிந்து கொண்டேன். மேலும், தெற்கு சூடான் ஐநாவின் அதிகாரப்பூர்வ உறுப்பு நாடாக மாறுவதற்கு சீனா ஆதரவு அளிக்கும் என்ற செய்தியையும் அறிந்தேன்.

திருச்சி அண்ணாநகர் வீ.டி.இரவிசந்திரன் அனுப்பிய மின்னஞ்சல்

இந்தியாவின் மும்பை மாநகரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் பதினெட்டு பேர் உயிரிழந்து,. 131 பேர் காயமுற்ற சம்பவம் மிகுந்த துயரினை ஏற்படுத்தியது. இது இன்ந்தியாவின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருப்பதை தெளிவுபடுத்துகிறது. இச்சம்பவம் இந்திய-பாகிஸ்தான் உறவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பது ஒருபுறம் இருக்கட்டும். மும்பையின் நிச்சயமற்ற வாழ்கை நிலையை எப்போது சரிசெய்யப் போகின்றனர்?

மேலும், திபெத் தன்னாட்சிப் பிரதேசம் இன்பமான வாழ்க்கை எனும் திட்டப்பணியை மேற்கொள்ள துவங்கியது முதல் உள்ளூர் மக்கள் முன்பிருந்த நாடோடி வாழ்க்கையிலிருந்து மாற தொடங்கினர். தற்பாச்சிங் மாவட்டத்தில் தற்போது குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்பட கடந்த அறுபது ஆண்டுகளில் நிறைவேறிய தொடர் வளர்ச்சி நடவடிக்கைகளே காரணம் என்பது தெளிவாகிறது.

காங்கேயம் என்.பாண்டி ஜோதி அனுப்பிய மின்னஞ்சல்

சீனாவுக்கு எதிராக சதிசெயலில் ஈடுபடும் தலாய்லாமா, அமெரிக்க அரசுத்தலைவர் ஒபமாவை சந்தித்து பேசியதை செய்திகளில் அறிந்தேன். இச்செயல் அமைதியாக வளர்ந்து வரும் திபெத்தை சீர்குலைக்கும் செயலாகவே தோன்றுகிறது.

தார்வழி.பி.முத்து அனுப்பிய மின்னஞ்சல்

இன்ப நகரமான லாசா செய்தித் த‌க‌வ‌லை இணையத்தில் உலாவந்து அறிந்தேன். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசமானது அமைதியாக விடுதலைப் பெற்ற அறுபது ஆண்டுகள் நிறைவில் திபெத்தின் ஆயர்கள் மற்றும் விவசாயிகளின் சராசரி நபர்வாரி வருமானம் ஐந்தயாயிரம் யுவானை தாண்டியுள்ளதை அறிந்தேன். இந்த வளர்ச்சியானது 1959ம் ஆண்டில் இருந்ததை விட, 88 மடங்கு அதிகம் என்பது வியப்பளித்தது. திபெத்தின் காட்சியிடங்களை இணையத்தில் காணும்போது, அவை எங்களுக்கு தேவலோகம் போல் காட்சியளிக்கின்றது. திபெத் மக்கள் நீல வானம், தூய்மையான நீர், மாசுபடாத காற்று ஆகியவற்றை அனுபவித்து, இயற்கையோடு இணைந்த‌ இன்பமான வாழ்கை வாழ்வதை அறிந்துகொண்டேன்.

காங்கேயம் பி.நந்தகுமார் அனுப்பிய மின்னஞ்சல்

திபெத் மக்களின் வாழ்க்கை தரம் நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் தருவாயில் பௌத்த மதத்துறவி தலாய்லாமா திபெத்தை பிளவுபடுத்தும் விதமாய் செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது. இத்தருணத்தில் அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபமா தலாய்லாமாவை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியிருப்பது சீன அரசின் உறுதியான எதிர்ப்பை மீறிய செயலாகும். பராக் ஒபமா சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது இருநாட்டு உறவுகளுக்கு தீங்கு விளைவிக்கும். தற்போது திபெத் வரலாற்றில் மிகச் சிறந்த காலகட்டத்திலுள்ள நிலையில் இதுபோன்ற செயல்கள் கடுமையாக கண்டனத்திற்குரியவை. மேலும், சீனாவில் மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பொது நல மருத்துவ காப்புறுதி வழங்கப்பட்டுள்ளதை அறிந்தேன்.

சென்னை மணலி எப்.எம்.பி.மாறன் அனுப்பிய மின்னஞ்சல்

நட்புபாலம் நிகழ்ச்சியில் நண்பர் ஜெயசக்திவேல் அவர்கள், சர்வதேச வானொலி மாத இதழ் நடத்தி வருவதையும், தற்போது பணியின் காரணமாக டெல்லி வந்திருப்பதையும் பேட்டியில் குறிப்பிட்டார். மேலும், இன்பப் பயணம் நிகழ்ச்சியில், சீஆன் உலக தோட்டக்கலை கண்காட்சிக்கு செல்வதெப்படி? என்றும், பேருந்துகள், சீருந்துகள் மற்றும் மிதிவண்டி என போக்குவரத்திற்கு வசதியாக பல தெரிவுகள் இருப்பதையும் அறிந்தேன்.

பேளூக்குறிச்சி க.செந்தில் அனுப்பிய மின்னஞ்சல்

திபெத்தின் வளர்ச்சிப் பற்றி இணையத்தில் உலாவந்து படித்தேன். திபெத் அரசின் திட்டங்களும், அவற்றை செயல்படுத்த ஒத்துழைப்பு தந்த மக்களுமே திபெத்தின் வளர்ச்சிக்கு காரணம் என நினைக்கிறேன். இதனை பிற நாடுகளும் பின்பற்றினால் வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங் அனுப்பிய மின்னஞ்சல்

தைவான் நீரிணையின் இரு கரை பத்து ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் பரிமாற்ற நடவடிக்கையில் சீன அரசுத் தலைவர் பங்கேற்பை சீன வானொலி தமிழ்ப் பிரிவின் செய்தி ஒலிபரப்பில் கேட்டேன். தைவான் நீரினை இரு கரை மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இந்த பங்கேற்பு அமையும். தாய் நாடான சீனாவுக்கு எதிரான தைவானின் செயல்பாடுகள் கூடிய சீக்கிரம் மறையும் என்பதன் அறிகுறியாகவே இந்த கலந்த்துரையாடலை பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040