கலைமகள்----வணக்கம் அன்புள்ள நேயர்களே. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வணக்கம் க்ளீட்டஸ்.
க்ளீட்டஸ்----வணக்கம் கலைமகள், வணக்கம் நேயர்களே. மீனாட்சிப்பாளையம் கே.அருண், மின்னஞ்சல் மூலம் சில கேள்விகளை அனுப்பினார். இன்றைய நிகழ்ச்சியில் அவரின் கேள்விகளுக்குப் பதிலளிப்போம்.
கலைமகள்----கே.அருணின் கவனத்தை ஈர்த்த பிரச்சினைகளில் பல, சீனாவின் மின் உற்பத்தி நிலைமையுடன் தொடர்புடையவை.
க்ளீட்டஸ்----சரி, கலைமகள், முதலில் சீனாவில் மின் உற்பத்தியின் பொது நிலைமை பற்றி விபரமாக அறிமுகப்படுத்திக் கூறுங்கள்.
கலைமகள்----சீனா மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து வருகிறது. இப்போது, சீனா, எரியாற்றல் வளர்ச்சிக் கட்டமைப்பை மேம்படுத்தி, முக்கிய திட்டப்பணிகளின் கட்டுமானங்களை சீராக மேற்கொண்டு மொத்த எரியாற்றல் உற்பத்தி அளவின் நிதானத்தை உறுதிப்படுத்தி, மின்சார உற்பத்தித் தளம் மற்றும் எரியாற்றல் போக்குவரத்து வழியின் கட்டுமானத்தை வலுப்படுத்தி வருகிறது. அதே வேளை, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி ஆகியவற்றின் சேமிப்பு ஆற்றலையும் சீனா வலுப்படுத்தும். மேலும், திட்டப்படி, 2012ம் ஆண்டில் சீனாவில் புதிதாக அதிகரிக்கும் மின் உற்பத்தி திறன், 7 கோடி கிலோவாட்டை எட்டும்.
க்ளீட்டஸ்----நீங்கள் சொன்னதைக் கேட்டப் பிறகு, சீனாவின் மின் உற்பத்தி நிலைமை பற்றி நன்றாக அறிந்துகொண்டேன். அண்மையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களிலிருந்து, சீனாவின் மின் உற்பத்தி கட்டமைப்பை கொஞ்சம் தெரிந்துகொண்டேன். நேயர்களுக்கு அதை சொல்லலாமா?
கலைமகள்----நிச்சயமாக! நீங்கள் சொல்லுங்கள்.
க்ளீட்டஸ்----சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை இயக்குநரும், சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் தலைவருமான லீயு தியே நன், 2012ம் ஆண்டில், சீனா, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மக்கள் குடியேற்றத்தையும் செவ்வனே செய்யும் அடிப்படையில் நீர் மின்னாற்றலை ஆக்கமுடன் வளர்க்கும். மேலும், பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் முன்னிபந்தனையுடன் அணு மின்னாற்றலை வளர்க்கும். மக்கள் வாழ்க்கையுடன் தொடர்புடைய எரியாற்றல் திட்டப்பணிக் கட்டுமானத்தை வலுப்படுத்தும் வகையில், தொலைத்தூரப் பகுதிகளிலுள்ள வேளாண் மற்றும் மேய்ச்சல் பிரதேசங்களில் சூரிய ஆற்றல் மின்சாரத்தையும் காற்று ஆற்றல் மின்சாரத்தையும் வளர்க்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.
கலைமகள்----இந்த வசதிகளின் மூலம், நகரவாசிகள் மற்றும் கிராமவாசிகளின் அன்றாட வாழ்க்கை மின் வினியோக நிபந்தனை மேம்படுத்தப்படலாம்.
க்ளீட்டஸ்----சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் கூட்டத்தொடர்களில் வெளியிடப்பட்ட பணியறிக்கையில், புதிய எரியாற்றல் வளர்ச்சி குறித்து சிறப்புப்பகுதி இருக்கிறது.
கலைமகள்----ஆமாம். அதாவது, ஒட்டுமொத்தத் திட்டத்தை வலுப்படுத்தி, சூரிய ஆற்றல் மின்சாரம் மற்றும் காற்று ஆற்றல் மின்சாரம் அளவுக்கு மீறி விரிவாக்கி வளர்க்காமல் தவிர்த்து, நீர் மின்சாரம், அணு மின்சாரம் உள்ளிட்ட மரபுசாரா மின் உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். க்ளீட்டஸ், மீனாட்சிப்பாளையம் கே.அருண் அனுப்பிய கேள்விகளில், சீனாவில் மரபுசாரா மின் உற்பத்தித் திட்டங்கள் பற்றி விளக்குமாறு கேட்டுக்கொண்டார். நீங்கள் நேயர்களிடம் அறிமுகப்படுத்திக்கூற முடியுமா?
க்ளீட்டஸ்----நிச்சயமாக! சீனாவின் 12வது ஐந்தாண்டுக்காலத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில கொள்கைகளைப் பார்த்தால், எதிர்காலத்தில் சீனா மரபுசாரா மின் உற்பத்தியை வலுப்படுத்தும் என்பதை அறியலாம். 2012ம் ஆண்டில், சீனாவின் தேசிய எரியாற்றல் பணியகம் திட்டப்படி அணு மின்சாரத் திட்டப்பணியைக் கட்டியமைக்கத் தொடங்கும். காற்று ஆற்றல் மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம் முதலியவற்றின் புதிய சந்தை மேலும் விரிவாக்கப்படும். குறிப்பாக, சீனாவின் சூரிய ஆற்றல் மின் உற்பத்தித் துறை, சுமார் 2100 கோடி யுவான் முதல் 2700 கோடி யுவான் வரையான முதலீட்டை எட்டக்கூடும்.
கலைமகள்----ஆமாம். இவ்வாண்டு, சீனா, ஒரு கோடியே 50 இலட்சம் முதல் ஒரு கோடியே 80 இலட்சம் கிலோவாட் அளவிலான மின் உற்பத்தித் திட்டப்பணிக்கட்டுமானத்தைத் தொடங்கும். சூரிய மின்சாரத்தின் முதலாவது தொகுதி கட்டுமானத் திட்டப்பணியின் அளவு, 30 இலட்சம் கிலோவாட்டை எட்டக்கூடும் என்று தெரிகிறது.
க்ளீட்டஸ்----அப்படியா! வியப்பான அளவுதான். கலைமகள், மரபுசாரா மின் உற்பத்தியில் அணு மின்சாரம் முக்கிய இடம் வகிக்கிறது. 2020ம் ஆண்டுக்குள், வேதியியல் மற்றும் எண்ணெய் சாரா எரியாற்றல், மீண்டும் பயன்படுத்தப்படமுடியாத எரியாற்றல் நுகர்வில் 15 விழுக்காடு வகிக்கும் என்று சீனா வாக்குறுதியளித்துள்ளது. இதனால், 2020ம் ஆண்டில் சீனாவில் அணு மின்சார திறன், குறைந்தது 7 கோடி கிலோவாட்டை எட்டும். இவ்வளர்ச்சித் திட்டத்தின்படி, சுமார் 40 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள சந்தை உருவாகும்.
கலைமகள்----ஆமாம். 12வது ஐந்தாண்டுக்காலத் திட்டத்தில் அணு மின்சாரம் மட்டுமல்ல, காற்று ஆற்றல் மின்சாரம், நீர் மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம் முதலியவற்றின் கட்டுமானமும் முக்கியமானது. மரபுசாரா எரியாற்றல் வளர்ச்சியில், நீர் மின்சாரம் மேன்மேலும் முக்கியமான இடம் வகிக்கும். சீனத் தேசிய எரியாற்றல் பணியகத்தின் திட்டப்படி, இவ்வாண்டில் 2 கோடி கிலோவாட் திறனுடைய நீர் மின்சாரத் திட்டப்பணிக் கட்டியமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 14 ஆயிரம் கோடி யுவான் முதலீட்டுத்தொகை கொண்டு வரப்படும் என்று, ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
க்ளீட்டஸ்----ஆமாம். கலைமகள், இப்போது பெய்ஜிங் மாநகரத்தில் புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றல் தொழில்துறையின் நிலைமையை பற்றி உங்களுக்கு தெரியுமா?
கலைமகள்----கொஞ்சம் தெரியும். பெய்ஜிங் வளர்ச்சி மற்றும் சீர்திருத்த பணியகத்தின் திட்டப்படி, 12வது ஐந்தாண்டுக்காலத்தில், பெய்ஜிங் மாநகரத்தை, சீனாவின் புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றல் உயர்நிலை ஆய்வு மையமாகவும், முன்மாதிரி மையமாகவும், தயாரிப்பு மையமாகவும் உருவாக்க, முயற்சி மேற்கொள்ளப்படும். 2011ம் ஆண்டில் பெய்ஜிங் மாநகரில் மரபுசாரா எரியாற்றலின் பயன்பாட்டு அளவு, மொத்த எரியாற்றல் நுகர்வு அளவில் சுமார் 4 விழுக்காடாக இருந்தது. அதேவேளை, புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றல் துறையின் உற்பத்தி மதிப்பு, 6 ஆயிரம் கோடி யுவானுக்கு கூடுதலாக இருந்தது.
க்ளீட்டஸ்----இவ்வாண்டின் முற்பாதியில் பெய்ஜிங்கின் புறநகரப்பகுதியில் சூரிய ஆற்றல் மின்சாரம் உள்ளிட்ட சில புதிய எரியாற்றல் பயன்பாட்டுத் திட்டப்பணிகள் கட்டியமைக்கப்படும். அவற்றில் மொத்தமாக 300 கோடி யுவான் முதலீடு செய்யப்படும் என்று தெரிகிறது.
கலைமகள்----ஆமாம். புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றலின் வளர்ச்சியிலும் பயன்பாட்டிலும் சீனா குறிப்பிடத்தக்க முன்னேற்றமடைந்துள்ளது. தொழில் நுட்ப நிலை பெருமளவில் உயர்ந்துள்ளது. 2008ம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் மொத்த எரியாற்றலின் உற்பத்தி அளவில் புதிய எரியாற்றல் 9 விழுக்காடாக இருந்தது. 2007ம் ஆண்டில் சீனாவின் சூரிய ஆற்றல் எரியாற்றல் தொழில் துறையின் அளவு உலகில் முதலிடம் வகித்தது. 2008ம் ஆண்டின் பிற்பாதிக்குப் பின், உலக நிதி நெருக்கடியின் பாதிப்பில் இருந்த போதிலும், சீனாவின் சூரிய ஆற்றல் மின் உற்பத்தித் தொழில் துறை தொடர்ந்து 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
க்ளீட்டஸ்----காற்று ஆற்றல் மின்சார வளர்ச்சியில் சீனா பெரும் வளர்ச்சியடைந்து வருகிறது. புள்ளிவிபரங்களின் படி 2008ம் ஆண்டில் சீனாவில் காற்று ஆற்றல் மின்சார உற்பத்திச் சாதனங்களின் மொத்த ஆற்றல் ஒரு கோடியே 30 இலட்சம் கிலோவாட்டைத் தாண்டியுள்ளது. சீனாவின் காற்று ஆற்றல் மின்சார திறன், உலகில் 4வது இடம் பெறுகிறது. இது மட்டுமல்ல, அணு ஆற்றல், புவி வெப்ப ஆற்றல் முதலிய புதிய எரியாற்றலின் வளர்ச்சியில் உள்ளார்ந்த ஆற்றல் அதிகமுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் அவை வளர்ச்சியடைந்து வருகின்றன.
கலைமகள்----ஆமாம். 2008ம் ஆண்டு முதல் இதுவரை உலக நிதி நெருக்கடியினால், சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மெதுவாக அதிகரித்து வருகிறது. உள்நாட்டு எரியாற்றல் சந்தை ஓரளவு பாதிக்கப்பட்டது. ஆனால், புதிய எரியாற்றல் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களும் உருவாயின. சீன அரசு, எரியாற்றல் தொழில் துறையின் கட்டமைப்பை மேம்படுத்தி, புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றலை பெருமளவில் வளர்த்து வருகிறது.
க்ளீட்டஸ்----நல்ல வளர்ச்சி வாய்ப்பு வருவது உறதி என்று நம்புகின்றேன். சீரான வளர்ச்சி எதிர்காலத்தைப் பார்த்ததால், சீனாவின் புதிய எரியாற்றல் துறையில், அரசுசாரா தொழில் நிறுவனங்கள், சர்வதேச மூலதனம், இடர்பாட்டு முதலீடு முதலியவற்றில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.
கலைமகள்----ஆமாம். எதிர்காலத்தில் புதிய எரியாற்றல் மற்றும் மரபுசாரா எரியாற்றலின் வளர்ச்சியுடன் சுற்றுச்சூழல் மேலும் தூய்மையாகவும் மக்களின் வாழ்க்கை மேலும் இன்பமாகவும் இருக்கும்.
க்ளீட்டஸ்----சரி, நேயர்களே, இத்துடன், இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகிறது. மீனாட்சிப்பாளையம் நேயர் கே.அருணின் சுவையான கேள்விகளுக்கு நன்றி தெரிக்கின்றோம்.
கலைமகள்----சீனா, சீன வானொலி, தமிழ்ப்பிரிவு முதலியவை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல், கடிதம், மற்றும் தொலைபேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள்.
க்ளீட்டஸ்----அடுத்த வாரம், மீனாட்சிப்பாளையம் கே.அனிதா அனுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்போம். கேட்கத்தவறாதீர்கள். வணக்கம் நேயர்களே.
கலைமகள் ----வணக்கம்.