• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தொழில் பயிற்சி, வேலை வாய்ப்புடன் தொடர்புடையது
  2012-04-12 14:40:35  cri எழுத்தின் அளவு:  A A A   

கலைமகள்----வணக்கம் அன்புள்ள நேயர்களே. கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. வணக்கம் தமிழன்பன்.

தமிழன்பன்----வணக்கம் கலைமகள். வணக்கம் நேயர் நண்பர்களே. இன்று முதல் நானும் கலைமகளும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்போம். சீனாவில் மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பும் அம்சங்கள் பற்றி கடிதம் மற்றும் மின்னஞ்சல் மூலம் கேள்விகளை அனுப்புங்கள். கலைமகள், இன்றைய நிகழ்ச்சியில் எந்த நேயரின் கேள்விக்குப் பதிலளிக்க இருக்கின்றோம்.

கலைமகள்----கோவா எம்.கணோசன் அனுப்பிய மின்னஞ்சல்களில் சீனாவில் வழங்கப்படும் தொழில் பயிற்சியில் கவனம் செலுத்தி கேள்விகளைக் கேட்டார். அவற்றிற்கு இன்று பதிலளிக்க இருக்கின்றோம்.

தமிழன்பன்----தொழில் பயிற்சி, வேலை வாய்ப்புடன் தொடர்புடையது. மார்ச் திங்கள் நடைபெற்ற சீனாவின் 11வது தேசிய மக்கள் பேரவைக்கூட்டத்தொடரில் சீன மனித மூலவள மற்றும் சமூகக் காப்புறுதி அமைச்சர் பேசுகையில், வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்க்க, சீனா மேலும் ஆக்கப்பூர்வமான கொள்கைகளை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

கலைமகள்----ஆமாம். வேலை வாய்ப்பு விவகாரங்களில் சீன அரசு எப்பொழுதும் கவனம் செலுத்தி வருகிறது. வேலை வாய்ப்புக்களில் பெருங்கவனம், மக்கள் வாழ்க்கை மேம்பாட்டின் அடிப்படை பகுதியாகவும் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய இலக்காகவும் இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சீனா வேலை வாய்ப்பில் பெருமளவில் முன்னேற்றமடைந்த போதிலும் இன்னல்கள் இன்னும் நிலவுகின்றன.

தமிழன்பன்----புதிய வேலைகளை உருவாக்கி, வேலை வாய்ப்பை நிதானமாக நிலைநிறுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கும் சமூக அமைதிக்கும் துணைபுரியும் என்பது ஐயமில்லை. கலைமகள், வேலை வாய்ப்புப் பிரச்சினைகளைத் தீர்க்க சீன அரசு எந்தெந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அவற்றை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.

கலைமகள்----சீனா, 12வது ஐந்தாண்டுக்காலத் திட்டத்தில், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை என்னும் நெடுநோக்குத் திட்டத்தை உறுதிப்படுத்தி, வேலை வாய்ப்பு இலட்சியத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அடிப்படை இட்டுள்ளது. கடந்த ஓராண்டில் உயர் கல்விப் பட்டதாரிகள் வேலை பெறுவது, முக்கிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழன்பன்----ஆமாம். பல்கலைக்கழகப் பட்டதாரிகள், நகரங்களில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்கள் முதலியோருக்கு தொழிலில் திறமை பெறுவதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சீன அரசு, வேலை வாய்ப்புக்கான உதவி கொள்கைகளை மேலும் மேம்படுத்தி, நீண்டகால ஊக்குவிப்பு அமைப்பு முறையை நிறுவி, மனித மூலவளச் சந்தையை உருவாக்கி, வேலை வாய்ப்பு வளர்ச்சி பணி, உரிய இலக்கை அடைவதற்கு பயனுள்ள உறுதியளித்திருப்பதாக தெரிகிறது.

கலைமகள்----சீன மனித மூலவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சர் யீன் வெய்மின் மார்ச் திங்கள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேட்டியளித்த போது பேசுகையில், தற்போது சீனாவில் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக உள்ளது. இப்பிரச்சினையை செல்வனே தீர்க்க, அமைச்சகம் மேலும் ஆக்கப்பூர்வ கொள்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்றும் கூறினார்.

தமிழன்பன்----நன்று. சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் வேலை வாய்ப்பு நிலைமை நிதானமாக இருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அல்லவா?

கலைமகள்----நிச்சயமாக. இதுவே, சமூகத்தில் அமைதியான சூழ்நிலை அமைய முக்கிய காரணியாகும். தமிழன்பன், இது தொடர்பாக ஒரு புள்ளிவிபரமும் இருக்கிறது. 2011ம் ஆண்டில் சீனாவின் நகரங்களில் சுமார் ஒரு கோடியே 22 இலட்சத்து 10 ஆயிரம் வேலை வாய்ப்புகள் புதிதாக அதிகரித்துள்ளன. புதிய வேலை வாய்ப்புகளாக இதுவே, வரலாற்றில் மிக உயர்வான பதிவு. அதேவேளை, கடந்த ஆண்டில் சீனாவின் வேலை இழப்பு விகிதம், 4.1 விழுக்காடாகும். கிராமப்புறங்களில் உழைப்பு ஆற்றல் குடியேற்ற எண்ணிக்கை, ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. ஆனால், வேலை வாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சீனா பெரும் நிர்பந்தங்களை எதிர்நோக்குகிறது. மொத்த எண்ணிக்கை நிர்பந்தமும், புதிய வேலைகளை உருவாக்கக் காணப்படும் கட்டமைப்புகளிலுள்ள முரண்பாடும் முக்கிய இன்னல்களாகும்.

தமிழன்பன்----அப்படியா?இவ்வாண்டில் சீனாவில் வேலை வாய்ப்புத் தேவைப்படுவோரின் எண்ணிக்கை, 2 கோடியே 50 இலட்சத்தை எட்டக்கூடும். அதேவேளை, சுமார் ஒரு கோடி கிராமத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் பல்கலைக்கழகங்களின் பட்டத்தாரிகள் வேலை பெறுவது எளிதல்ல என்றெல்லாம் கேட்டறிந்தேன். அவையெல்லாம் உண்மையா?

கலைமகள்----ஆம். வேலை வாய்ப்பு நிர்பந்தம் இடைவிடாமல் அதிகரித்த போதிலும், சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலாவது, மேலும் ஆக்கப்பூர்வ வேலை வாய்ப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, குறிப்பாக, வேலை வாய்ப்புக் கொள்கைகளை ஒட்டுமொத்தப் பொருளாதார கொள்கைகளை பயனுள்ளதாக இணைக்க முயற்சித்து வருகிறது. இரண்டாவதாக, தொழில் நுட்பப் பயிற்சியை பெரிதும் வலுப்படுத்தி, தொழிலாளர்களின் வேலை செய்யும் திறனை உயர்த்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மூன்றாவதாக, குறிப்பிட்ட மக்கள் குழுவின் வேலை வாய்ப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பது கவனம் செலுத்தப்படுகிறது. நான்காவதாக, சுயத் தொழில் புரிவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஊக்குவித்து வழிக்காட்டப்படுகிறது. ஐந்தாவது, வேலை வாய்ப்பு வழங்குதலுக்கு தேவைப்படும் பொது சேவைப் பணிகளை செவ்வனே செய்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. சீந அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இவையெல்லாம் அடங்குகின்றன.

தமிழன்பன்----நல்ல நடவடிக்கைகள். மேலதிக வேலை வாய்ப்புகளை வழங்க சீன அரசு விடாமுயற்சி செய்வதைக் கேட்டோம். கலைமகள், சீனாவின் 12வது ஐந்து ஆண்டுத் திட்டக்காலத்தில் பல்கலைக்கழகப் பட்டத்தாரிகளின் வேலைப் பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமானதாக தெரிகிறது. இதற்கு சீன அரசு சிறப்பான கொள்கைகளை வகுத்து வெளியிட்டிருக்கிறதா?

கலைமகள்----நிச்சயமாக!பல்கலைக்கழகப் பட்டத்தாரிகள் வேலை வாய்ப்பு பெறுவதை முன்னேற்றும் வகையில் சீன மனித மூலவள மற்றும் சமூக காப்புறுதி அமைச்சகம் நான்கு முக்கிய கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் வெளியிட்டது. அவை, பல்கலைக்கழகப் பட்டத்தாரிகள் பணிபுரியும் துறைகளை விரிவாக்கி, அவருகளுக்குப் பொருந்திய வேலை வாய்ப்புகளை மேலதிகமாக வழங்க வேண்டும். பட்டத்தாரிகள் அடி மட்ட பணி இடங்களிலும் மத்திய மற்றும் மேற்கு பிரதேசங்களிலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிலும் வேலை செய்வதை ஊக்குவிக்க வேண்டும். பட்டத்தாரிகள் சுயத் தொழில் தொடங்குவதற்கு வழிக்காட்டி ஊக்கமளிக்க வேண்டும். மேலும், பல்கலைக்கழகப் பட்டத்தாரிகள் வேலை வாய்ப்பு பெறுதலுக்கான சேவையை வலுப்படுத்த வேண்டும். இவை, பல்கலைக்கழக பட்டத்தாரிகளின் வேலை வாய்ப்புக்காக சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழன்பன்----அப்படியா! இந்த சிறப்பான கொள்கைகளுடன் சீனாவில் பல்கலைக்கழகப் பட்டத்தாரிகள் மனநிறைவான வேலை வாய்ப்புகளைப் பெறுவது உறுதி என்று நம்புகின்றேன். கலைமகள், ஒரு நாட்டைப் பொறுத்தவரை, தொழில் நுட்பத் திறன் பெறுவதற்கு அது தொடர்பான கல்வியின் சீரான வளர்ச்சி மேன்மேலும் முக்கியமாக இருக்கிறது. எங்கும் எதிலும் அறிவியல் தொழில்நுட்பமயமாக்கம் அதிகரித்திருப்பது, பெரும்பாலான வேலைகளில் தொழில் நுட்பத் திறனுக்கான தேவையை உயர்த்தி வருகிறது. கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் தொழில் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உழைப்பாளர்களாக இல்லாமல் இருப்பது சிக்கலை தோற்றுவிக்கும். அதனால், கல்வியின் பயிற்சித் திட்டம், சந்தையின் வளர்ச்சிக்கும் தேவைக்கும் பொருந்த அமைய வேண்டும்.

கலைமகள்----ஆமாம். நீங்கள் சொன்னது சரிதான். தொழில் பயிற்சி, வேலை வாய்ப்பை விரைவுபடுத்தும் அடிப்படைப் பணியாகும். விவசாய் தொழிலாளர்கள் நகரங்களில் வேலை செய்வதை விரைவுபடுத்தும் வகையில், சீனாவின் பல்வேறு இடங்களில் சிறப்பான கொள்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.

தமிழன்பன்----இது பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும்.

கலைமகள்---சரி, நீங்கள் அறிமுகப்படுத்திச் சொல்லுங்கள்.

தமிழன்பன்----விவசாய் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புப் பெறுவதற்கு, சீனாவின் ஹேபைய் மாநிலத்தின் தாங் சான் நகரில் "வசந்த காற்று என்னும் நடவடிக்கை" 2011ம் ஆண்டில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்நடவடிக்கையில் விளம்பரம் மூலம் வேலைக்கு விண்ணப்பங்களை வரவேற்கும் 78 இலவசப் பணித் தேர்வுகள் குறிப்பிடத்தக்கவை. அதன் மூலம், சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பேர் வெற்றிகரமாக வேலை பெற்றுள்ளனர். அதேவேளை, நகரங்களுக்குச் சென்று வேலை செய்யும் விவசாய தொழிலாளர்கள் எதிர்நோக்கும் உண்மையான பிரச்சினைகள் குறித்து, அந்நகரத்தின் பொது வேலை வாய்ப்பு நிறுவனங்கள், பன்முகங்களில் சேவையையும் உதவியையும் வழங்கின.

கலைமகள்----பரவாயில்லையே. கிராமப்புறங்களிலிருந்து வந்த இந்த தொழிலாளர்கள் தொடர்புடைய வாரியங்களின் உதவியுடன் வெகுவிரைவில் நகரங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்று புதிய வாழ்க்கை தொடங்குவதை விரும்புகின்றேன்.

தமிழன்பன்----ஆம். சரி, நேயர்களே, இத்துடன், இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நிறைவடைகிறது. கோவா எம்.கணோசன் வழங்கிய சுவையான கேள்விகளுக்கு மீண்டும் நன்றி தெரிக்கின்றோம்.

கலைமகள்----சீனா, சீன வானொலி, தமிழ்ப்பிரிவு முதலியவை பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால், மின்னஞ்சல், கடிதம், மற்றும் தொலைபேசி மூலம் எங்களுக்கு தெரிவியுங்கள்.

தமிழன்பன்----அடுத்த வியாழக்கிழமை, இன்றைய திபெத் என்னும் நிகழ்ச்சியின் சிறப்புப் பகுதி தொர்டர்ந்து ஒலிபரப்பாகும். இதனால், கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி அன்று ஒலிபரப்பாகாது. ஏப்ரல் 26ம் நாள் சந்திப்போம். வணக்கம்.

கலைமகள்----வணக்கம் நேயர்களே.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040