சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசம் சுற்றுலாத் துறையில் மாபெரும்
பொற்காலத்தை நோக்கி நகர்ந்து செல்வதை செய்திகளில் அறிந்தேன்.
எழில்மிகு இயற்கைவளம் நிறைந்த பிரதேசமாக திபெத் இருப்பதால் தான்
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பயணிகள் திபெத்தில் சுற்றுலா
மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் என்பதையும், அமெரிக்கா, ஜெர்மனி,
சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஜப்பான், நேபாளம் உட்பட 40நாடுகளை
சேர்ந்தவர்கள் அதிகளவில் பயணம் மேற்கொண்டு வருவதையும் இச்செய்தி மூலம்
தெரிந்து கொண்டேன்.
திபெத்தின் இவ்வாண்டின் இலக்கான 1கோடி பயணிகளை வரவேற்பதும், இதன் மூலம்
சுற்றுலா வருமானமாக ஆயிரத்து 200கோடி யுவான் வருமானம் எட்டும் என்ற
மாபெரும் இலக்கு நிச்சயம் நனவாகும் என்று நம்புகிறேன்.