கிளீடஸ்.......தொடர்ந்து சீன இலங்கை பண்பலை ஒலிபரப்பில் பணிபுரிகின்ற பணியாளர்கள் உங்களிடம் அறிமுகம் செய்து கொள்கின்றனர். இவர்கள் அனைவரும் நிகழ்ச்சி அறிவிப்புகள், தொடர்புகள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டு பண்பலை ஒலிபரப்பிற்கென மேற்கொள்வர்.
கலையரசி......முதலாவதாக, சீன வானொலி தமிழ் ஒலிபரப்புப் பணிகளை மேற்கொள்ளும் தமிழ்ப் பிரிவின் தலைவரான எனது தமிழ் பெயர் கலையரசி. தலைமை பணிகளோடு, சீன வானொலி நிலையத்தில் முதன்மை அறிவிப்பாளராகவும் உங்களுக்கு சேவை புரிய இருக்கின்றேன். நட்புப் பாலம் மற்றும் கேள்வியும் பதிலும் நிகழ்ச்சிகள் மூலம் உங்களுக்கு சீனாவின் அனுபவங்கள் பலவற்றை வழங்க விரும்புகின்றேன்.
வாணி.......எனது பெயர் வாணி. தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கின்றேன். அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு, சீன உணவரங்கம் நிகழ்ச்சிகளின் அறிவிப்பாளராக உங்களோடு உரையாடவுள்ளேன்.
கலைமகள்......நான் கலைமகள். தமிழ்ப் பிரிவின் துணைத் தலைவராகவும் சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் உங்களுக்காக பணிபுரிய இருக்கின்றேன்.
கிளீடஸ்.......எனது பெயர் க்ளீட்டஸ். தமிழ்ப் பிரிவின் நிபுணராக பணிபுரிகின்றேன். இப்பண்பலையில் நான் வழங்கவுள்ள சீனப் பண்பாடு, சீனக் கதை, மலர்ச்சோலை நிகழ்ச்சிகள் உங்களை ஈர்க்கும் என்று நம்புகின்றேன்.
தமிழன்பன்.......நான் தமிழன்பன். தமிழ்ப் பிரிவின் நிபுணராக இருந்து, அறிவியல் உலகம், நேயர் நேரம் நிகழ்ச்சிகள் மூலம் பண்பலையில் வலம்வருவேன்.
மீனா......எனது பெயர் மீனா. சீனாவின் சமூகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் சீன சமூக வாழ்வு, இசை மழையில் நனைய வைக்கும் சீன இசை நிகழ்ச்சி இவற்றின் மூலம் உங்களுடன் பேச இருக்கின்றேன்.
வான்மதி....நான் தான் வான்மதி. வேறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் வாழ்வில் உயர்ந்த அல்லது வளர்ந்து வரும் சீனப் பெண்களை சீன மகளிர் நிகழ்ச்சி மூலம் உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன். சீன இசை நிகழ்ச்சி மூலம் உங்கள் உள்ளங்களை கொள்ளை கொள்வேன்.
தேன் மொழி.....தேன் மொழி எனது தமிழ்ப் பெயர். நேயர்களின் விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ளேன். உங்களது கடித மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளுக்கு உடனடி பதிலளித்து சேவைபுரிவேன்.
மோகன்......நான் மோகன். தேன்மொழியுடன் இணைந்து நேயர்களின் விவகாரங்களை கையாண்டு, உங்களோடு என்றும் தொடர்பிலிருப்பேன். கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் மூலம் உங்களோடு பேசுவேன்.
மதியழகன்...மதியழகனாகிய நான், சீன வரலாற்றுச் சுவடுகள் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்கின்றேன். தவிரவும் தமிழ் இணையதளத்தின் நிர்வாகத்திலும் ஈடுபடுகின்றேன். நிகழ்ச்சி அறிவிப்பு மற்றும் இணையதளப் பணி மூலம் நீங்கள் எனது சேவையை அறியலாம்.
ஈஸ்வரி.....எனது பெயர் ஈஸ்வரி. மக்கள் சீனம், சீன தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சிகளை சீன இலங்கை பண்பலை 102 யில் வழங்கயிருக்கின்றேன். சீன மக்களின் பழக்கவழக்கங்களை உங்களுக்கு அறிய தருவேன்.
சரஸ்வதி.....நான் சரஸ்வதி. மக்கள் சீனம் நிகழ்ச்சி மூலம் உங்களை சந்திப்பேன். இதன் மூலம் சீன மக்களின் பண்புகளை, சிறப்புகளை உங்களுக்கு தெளிவுபடுத்துவேன்.
சீதா.....எனது பெயர் சீதா. நேயர் விருப்பம் நிகழ்ச்சி மூலம் உங்கள் மனங்களில் இடம்பிடிப்பேன். நீங்கள் விரும்பி கேட்கும் தமிழ்ப் திரைப்படப் பாடல்களை இப்பண்பலை மூலம் வழங்குவேன். நான் தமிழ் இணையதளப் பணியிலும் ஈடுபடுகின்றேன்
திலகவதி......திலகவதி எனது பெயர். சீனப் பாடல்களை நீங்கள் இரசிக்கும் விதத்தில், சீன இசை நிகழ்ச்சியை வழங்கயிருக்கிறேன். தமிழ் இணையதளப் பணியையும் மேற்கொள்கின்றேன்.
சிவகாமி......நான் தான் சிவகாமி. சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்கின்றேன். பல்வேறு தேசிய இனங்களை இந்நிகழ்ச்சி மூலம் அறிவிக்கயிருக்கின்றேன்.
தமிழன்பன்..........நண்பர்களே! சீன வானொலி இலங்கை பண்பலை 102 ஒலிபரப்பு ஏப்ரல் 23ம் நாளில் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளதில் மகிழ்ச்சியடைகின்றோம். நாள்தோறும் இரண்டு மணிநேர தமிழ் நிகழ்ச்சிகள்லி காலை ஒரு முறையும் மாலை ஒரு முறையும் ஒலிபரப்பாகும். ஒவ்வொரு நாளும் வெவ்வேறான நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
கலையரசி, கிளீடஸ்.......... கொழும்பு பண்பலை 102 மொகாஹெர்ட்ஸில் இலங்கை நேரம் பிற்பகல் 1.30 முதல் 3.30 மணி வரையும், இரவு 7.30 முதல் 9.30 மணி வரையும் தமிழ் ஒலிபரப்பு இடம்பெறும்.
வாணி.........இந்நிகழ்ச்சிகளை கேட்பதன் மூலம் சீனாவை பற்றியும் சீநாவின் 56 தேசிய இனங்களை பற்றியும் அதிகமாக அறிய முடியும். சீனாவின் அருமையான காட்சியிடங்கள் பற்றிய தகவல்களும், பழம்பெரும் சீன வரலாற்றின் தொகுப்புகளும் உங்கள் செவிக்கு விருந்தாய் அமையும். உடல்நல பாதுகாப்பு ஆலோசனைகளும், சுவைமிக்க தகவல்களும் அறிவுக்கூர்மையை வளர்க்கும். இலங்கை, சீனா, இந்தியா ஆகிய தெற்காசிய நாடுகளுக்கிடை நட்புறவை அறிந்து கொள்ளவும் அதனை வளர்க்கவும் வாய்ப்பளிக்கும்.
தமிழன்பன்.......சரி நண்பர்களே! தொடர்ந்து சீன வானொலி இலங்கை பண்பலையில் இடம்பெறும் முதல் நாள் நிகழ்ச்சியை கேட்டு மகிழுங்கள்.