• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வசந்த நகரமான குன்மிங்
  2010-06-07 16:33:14  cri எழுத்தின் அளவு:  A A A   
ஜுன் திங்கள் 6ம் நாள், 3வது தெற்காசிய நாடுகளின் வணிகப் பொருட்காட்சி யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரத்தில் துவங்கியது. இப்பொருட்காட்சியில் கலந்துகொண்டு செய்திகளை அறிவிக்க தமிழ்ப் பிரிவின் பணியாளராகிய நான் கலைமகள் குன்மிங் வந்தடைந்தேன்.

குன்மிங் நகரம், நல்ல வானிலையினால் வசந்த நகரமாக அழைக்கப்படுகிறது. குன்மிங்கில் 26 சிறுப்பான்மைத் தேசிய இனங்களைச் சேர்ந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்கின்றனர். நீண்டகால உற்பத்தி மற்றும் வாழ்வில், பல்வேறு இன மக்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புகொள்வதோடு, தத்தமது பாரம்பரியத்தை நிலைநிறுத்தி, தனிச்சிறப்பான வாழ்க்கை வழிமுறைகள், வழக்கப்பழக்கங்கள், பண்பாடு மற்றும் கலைகளை நிலைநிறுத்தி வருகின்றனர். சுவையான உள்ளூர் உணவு வகைகள், வண்ணமய ஆடைகள், பல்வேறு பாணிகளைக் கொள்ளும் கட்டிடங்கள், சிறப்பான திருமண விழா நிகழ்வுகள் முதலியவை, பல்வேறு இடங்களின் பயணிகளை ஈர்க்கின்றன.

குன்மிங் நகர் நிறைவாக மலரும் பூ நகரமாகும். தங்கு விடுதியின் நுழைவாயில், அறையின் மூலை, பணம் பரிமாற்ற சன்னல், மேசை முதலிய இடங்கள் எங்கெங்கும் மலர்கள் வைக்கப்படுகின்றன. இந்த அழகான மலர்களைப் பார்கின்ற போது முழு நாளிலும் நல்ல மனநிலை கொள்கின்றேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040