• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவாரின் எழில்
  2010-10-08 14:45:27  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் வடமேற்கு பகுதியின் தனிச்சிறப்புடைய நாட்டுப்புறப் பாடல் ஹுவாராகும். குறிப்பாக, சீனாவின் கான்சு, சிங்ஹாய் ஆகிய மாநிலங்களிலும் நிங்சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்திலும், பீடபூமி ஆயர்கள், மஞ்சள் ஆற்றின் படகோட்டிகள், விவசாயிகள் ஆகியோர் ஹுவார் பாடலை பாடுகின்றனர்.

இந்த பாடல் பெயர் மலைமேல் சென்று பரந்த நிலத்தைப் பார்ப்பது என்ற பாடலாகும். இந்த பாடல் மூலம், அன்புக்குரிய சிறுமிக்கான நினைவை இளம் ஆயர் வெளிப்படுத்துகின்றார். பாடகர் Kong Gazha கூறியதாவது:

என் குழந்தைப்பருவம் முதல், ஹுவார் பாடல் மற்றும் இசையை விரும்புகின்றேன் என்று அவர் கூறினார்.

நாடளவில் தமது ஹுவார் பாடலை அறியச் செய்வதை நனவாக்கும் வகையில், சீனத் தேசிய தொலைக்காட்சி நிலையம் நடத்திய பாடல் போட்டியில் 35 வயதான Kong Gazha கலந்துகொண்டு, மேற்குப் பகுதியில் முதலிடத்தை பெற்றார். ஹுவார் துறையிலான புகழ் பெற்ற பாடகராக மாறுவது தனது விருப்பமாகும் என்று Kong Gazha தெரிவித்தார். அவர் கூறியதாவது:

முதலாவதாக, என் விருப்பத்தை நிறைவேற்றி, மேன்மையை வெளிப்படுத்த வேண்டும். இரண்டாவதாக, நாடளவில் ஹுவார் பாடலை பரவல் செய்து, ஹுவார் நாட்டுப்புறப்பாடல் துறையின் இளவரசனாக மாற வேண்டும் என்று அவர் கூறினார்.

சீனாவின் வடமேற்கு பகுதியில், Kong Gazha போல், ஹுவார் நாட்டுப்புறப் பாடலை பல பாடகர்கள் விரும்புகின்றனர். சீன மற்றும் வெளிநாட்டு பண்பாட்டுப் பரிமாற்றத்தை அதிகரிப்பதுடன், வடமேற்கு பீடபூமியிலிருந்து வெளியேறி, நாட்டின் பிறபகுதிகளுக்கு அவர்கள் சென்றனர். அத்துடன், உலக அரங்கில் ஹுவார் பாடலைப் பரவல் செய்துள்ளனர்.

சீனாவின் வடமேற்கு பகுதியிலுள்ள சிங்ஹாய் மாநிலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற Sa La தேசிய இனப் பாடகி Su Ping, ஹுவார் நாட்டுப்புறப்பாடல் துறையில் தனிச்சிறப்புத் தன்மையை கொண்டவராவார். குறிப்பாக, சுமார் 70 வயதான அவர் கலை அரங்கில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றார். அவரது குரலை வெளிநாட்டு ரசிகர்கள் விரும்பி கேட்கின்றனர். அத்துடன், ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகியவற்றின் பல நாடுகளில் அவர் கலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். வட கொரியாவில், ஹுவார் நாட்டுப்புறப்பாடலுடன் உள்ளூரின் நீள மேள நடனத்தின் தாளத்தையும் சேர்த்து அவர் அரங்கேற்றியுள்ளார். ஹுவார் போரசி என்று அவர் அழைக்கப்படுகின்றார். பாரம்பரிய மற்றும் நவீன பண்புகளுடன் இணைந்து, பல நாடுகள் மற்றும் பிரதேசங்களின் இசை தனிச்சிறப்புகளை தமது கலைநிகழ்ச்சி சேர்க்கின்றது என்பது வெற்றிபெற்றதற்கு காரணமாகும் என்று அவர் கூறினார். இந்த வழிமுறை மூலம், ஹுவார் நாட்டுப்புறப்பாடல் நிகழ்ச்சியில் உயிராற்றல் ஊட்டப்பட்டுள்ளது என்று Su Ping கருத்துத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பல்வேறு தேசிய இனங்களின் தனிச்சிறப்பியல்புகள் என் கலைநிகழ்ச்சியில் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக, என் கலை நிகழ்ச்சியில் இந்திய தேசிய பாடல் பண்பு சேர்ந்துள்ளது. போதிய இசை அம்சங்களைச் சேர்த்துக்கொண்ட பின்னர், ஒரு பாடலை பாடும் போது, தமது தனிச்சிறப்பியல்பை வெளிப்படுத்தலாம் என்று அவர் கூறினார்.

தற்போது, பாரம்பரிய சிறப்பியல்பை கையேற்றுவதுடன், தற்கால எழுச்சியின் படி, ஹுவார் பாடகர்கள் உள்ளூர் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த ஹுவார் பாடலை இயற்றுகின்றனர். மேற்கு சீனாவின் நிங்சியா ஹுய் இன தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஹுவார் மன்னர் Zhang Jianjun இந்த ஹுவார் நாட்டுப்புறப் பாடலை இயற்றினார். மேற்குப் பகுதியின் பெரும் வளர்ச்சியில், இளைஞர்களின் ஆக்கமுள்ள எழுச்சியும் அருமையான வாழ்க்கைக்கான அவர்களது எதிர்ப்பார்ப்பும் இந்த பாடல் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றது.

50க்கு அதிகமான வயதான Zhang Jianjun ஆக்கமும், ஊக்கமும் கொண்ட பாடகராவார். 2006ம் ஆண்டு நவம்பர் திங்களில், அவரது முதல் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அனைத்து பாடல்களையும் அவர் சொந்தமாக இயற்றினார். பாடல் தொகுப்பின் மொத்த விற்பனை ஒரு இலட்சத்து 60 ஆயிரத்தை எட்டியது. இது மனநிறைவை தரவில்லை. ஹுவார் பாடலை வளர்ப்பது பாடகர்களின் கடப்பாடாகும். வரலாற்றின் எழுச்சியை தற்கால ரசிகர்களுக்கு பொருந்தியதாக எடுத்துச்சொல்லும் புதிய ஹுவார் பாடலை காலம் உருவாக்கச் செய்தது. Zhang Jianjun கூறியதாவது:

சேதிய இன ராகத்தின் அடிப்படையில், ஹுவார் பாடல்களை நாங்கள் இயற்ற வேண்டும். வரலாற்றின் கோரிக்கைக்கு பொருந்தியதாகவும், நவீன தாளலயத்தை உட்புகுத்தியதாகவும் அமைவதுடன், ஹுவாரின் தனிச்சிறப்பியல்பையும் இது நிலைநிறுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

2009ம் ஆண்டு, ஐ.நா பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வங்களின் பட்டியலில் ஹுவார் சேர்க்கப்பட்டது. 68 வயதான ஹுவார் வாரிசு Ma Jinshan கான்சு மாநிலத்தின் Song Ming Yan மாவட்டத்தில் ஹுவார் பள்ளியை உருவாக்கினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040