• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வேறுபட்ட ராகங்களில் ஹுவார் பாடல்கள்
  2010-10-08 14:47:33  cri எழுத்தின் அளவு:  A A A   

நேயர்களே, நீங்கள் கேட்டது, சீனாவின் மேற்கு பகுதியில் நடைபெற்ற 8வது நாட்டுப்புறப்பாடல் போட்டியின் பாடலாகும். இக்கூட்டம், நிங்ஷியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தால் நடத்தப்பட்டது. இதுவரை, 20க்கு மேலான இனங்களை சேர்ந்த சுமார் 600 பாடகர்கள், இப்பாடல்ப் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். நிங்ஷிய பண்பாட்டுப் பிரிவின் துணைத் தலைவர் tao yufang கூறியதாவது,

ஹுவார் எனும் நாட்டுப்புறப்பாடல்கள், 2009ம் ஆண்டு உலகப் பண்பாட்டு மரபுச் செல்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்ததொரு மேடை மூலம் அவற்றை பரவல் செய்ய வேண்டும். இப்பாடல் போட்டி நாட்டுப்புறப்பாடல்களை பரவல் செய்யும் மிக சிறந்த வழிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

நீங்கள் கேட்கின்ற பாடல், மயிலும் peonyமலரும் என்ற பாடலாகும். பழங்காலத்தில், peony பூ, காதலை குறிக்கின்ற அருமையான பொருளாக சீனாவில் கருதப்பட்டது. வடமேற்கு சீனாவில், ஹுய் இன மக்கள், peony பூக்களை மிகவும் விரும்புகின்றனர். இப்பாடல், ஹுய் இன இளைஞர்களிடை அருமையான காதலை வெளிப்படுத்துகின்றது. நீங்கள் இந்த இனிமையான ஒலியைக் கேட்ட போது, இப்பாடல், ஒரு 70 வயது முதிர்ந்த பாடகர் பாடியது என்பதை நினைக்க தோன்றியதா? அவர் தான், இவ்வாண்டின் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டியில் கலந்து கொண்ட மிக வயதான போட்டியாளர். Lv xiufeng என்ற இப்பாடகர், வயதான போதிலும் சிறந்த உடல்நலத்தோடு இருக்கிறார். அவர் பாடிய சிறந்த பாடல், அனைவரின் கரவொலி பராட்டுகளைப் பெற்றது.

நான் 3 முறை இந்த நாட்டுப்புற பாடல் போட்டியில் கலந்து கொண்டேன்,. குழந்தை பருவத்திலேயே நான் ஹுவார் நாட்டுப்புறப் பாடல்களை பாட விரும்பினேன். எனவே அப்போதே பல ஹுவார் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்றுக்கொண்டேன். இப்போதே கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் இங்கே பாடுகிறேன். தவிர, எனது மருமகனுக்கும் இதில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் ஹுவார் நாட்டுப்புறப் பாடல்களைக் கற்பிக்க விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

ஒவ்வொரு ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டியிலும் கலந்து கொள்வோர் lv xiufeng போல பலர் சிறப்பான ஹுவார் நாட்டுப்புறப் பாடகர்கள் அல்ல இருப்பினும், அவர்கள் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் மீதான ஆர்வத்துடந் இம்மேடையில் கூடி போட்டியிடுகின்றனர். அடுத்து, ஒரு நவீன பாணி ஹுவார் நாட்டுப்புறப் பாடலை கேட்டு ரசியுங்கள்.

5 அழகான இளம் பெண்கள் இப்பாடலைப் பாடி நடனம் ஆடினர். அவர்கள் நீல வண்ண முஸ்லிம் பாணி ஆடைகளை அணிந்து, சிறந்த அசைவுகளுடன் இந்நடனத்தை ஆடி பாரம்பரிய இப்பாடலை மிக உற்சாகமாக பாடவும் செய்தனர். இது, புதிய பாணி ஹுவார் நாட்டுப்புறப்பாடல் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்த சிறிய அணியின் தலைவரான 21 வயதான wangjing கூறியதாவது

இளைஞரான நாங்கள், ஹவார் நாட்டுப்புறப் பாடல்களை வெளிகொணர வேண்டும். அதன் பழைய சுவையை இழக்கக் கூடாது. அத்தோடு, நவீன காலத்தின் புதிய சுவையை இதில் அதிகரிக்க செய்ய முடியும். எனவே, ஹவார் நாட்டுப்புறப்பாடல்களில், வரலாறு, மனிதரின் உணர்வுகள் ஆகியவற்றோடு, வாழ்க்கை அனுபவங்களும் இடம்பெற செய்ய முடியும் என்று அவர் கூறினார்.

நிங்ஷியாவில் மட்டுமல்ல, சீனாவின் முழு வடமேற்கு பிரதேசத்திலும் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டி மிகவும் வரவேற்கப்படுகிறது. கான்சு, சிங்காய் முதலிய மாநிலங்களின் ஹுவார் நாட்டுப்புறபாடல் போட்டிகள், மக்கள் கொண்டாடும் விழாக்களை அடுத்து, மக்கள் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டு, உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்ற மேடையாக மாறியுள்ளது. கான்சு hezheng மாவட்டத்தின் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டி, அப்பகுதிக்கு பல பொருளாதார நலன்களை கொண்டு வந்துள்ளது. இது பற்றி அம்மாவட்டத்தின் சுற்றுலா பணியகத்தின் தலைவர் gao yaqin கூறியதாவது,

ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டி ஏற்படுத்திய பொருளாதார மேம்பாட்டை நாங்கள் உணர்ந்துள்ளோம். அது, சுற்றுலா பண்பாட்டின் பொருளை அதிகரித்தது. ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டி, 1 இலட்சத்திற்கு மேலான பயணிகளை ஈர்க்கிறது என்று அவர் கூறினார்.

சிங்காய் மாநிலத்தின் yao ye shan என்ற இடத்தில் நடைபெற்ற ஹுவார் நாட்டுப்புறப்பாடல் போட்டி மிகவும் புகழ் பெற்றது. சந்திர நாட்காட்டின்படி 6வது திங்களின் 6ம் நாள், பல்வேறு இனங்களின் மக்கள் இங்கு, 10க்கு மேலான நாட்டுப்புறப்பாடல் போட்டிகளை நடத்துகின்றனர். இளம் ஆண்களும் பெண்களும், இதன் மூலம், காதலர்களைத் தேடுகின்றனர். இது பற்றிய விபரங்களை, அடுத்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040