• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்களின் காதல் கதைகள்
  2010-10-08 15:30:07  cri எழுத்தின் அளவு:  A A A   
வடமேற்கு சீனாவில் பரவிவந்த ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்கள், உள்ளூரில் வாழ்கின்ற திபெத், ஹுவெய், தூ, ஹன், உய்கூர் ஆகிய தேசிய இன மக்களால் வரவேற்கப்பட்டவை. அதன் பாடல் வரிகளில், காதல் முக்கியமாக வர்ணிக்கப்பட்டிருக்கும். எனவே, இளைஞர் பலர், இந்தப்பாடல்களின் அடிப்படையில் காதலரைத் தேடி வருகின்றனர். ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடலின் சொந்த ஊராக அழைக்கப்பட்ட சிந்ஹேய் மாநிலத்தின் லாவ்யே சான் என்னும் மலை, உள்ளூர் இளைஞர்களின் மனதில் காதலரைத் தேடிச் செல்லும் பொருத்தமான இடமாக திகழ்கிறது.

கடந்த சில நூற்றாண்டுகளில், ஆண்டுதோறும் சந்திர நாட்காட்டின் படி 6வது திங்கள் 6ம் நாளன்று, இம்மலை விழாக்கோலம் மாறி வருகிறது. உள்ளூர் மக்கள், ஹுவார் நாட்டுப்புறப்பாடல் விழாவை நடத்துகினி்றார்கள். மேலும், மலர்கள் நிறைந்த மலர்கள் அடர்ந்த காட்டில், பாடகர்கள் பாடல் பாடுகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முந்தைய ஓர் இலையுதிர்காலத்தில் ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடலைப் பாடிய இளைஞர் ஒருவரும் ஓர் இளம் மங்கையும், லாவ்யே சான் மலையில் சந்தித்தனர். அவர்கள் அடுத்தடுத்து பாடல் பாடி, அருமையான பாடலொலியுடன் ஒருவருக்கொருவர் மனதளவிலும் ஒன்றிவிட்டனர். இந்தப் பாடகர், பெயர் யாங்ஹேய்சுவென், தூ இனத்தைச் சேர்ந்தவர். 20 ஆண்டுகளுக்கு முன் லாவ்யேசான் மலையில் நடைபெற்ற ஹுவார் பாடல் பாடும் போட்டியில், வேறு இடங்களிருந்து வந்த, வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த பாடகர்களுடன் போட்டி இட்டார். அவருடைய இனிமையான குரல், ஹுவேய் இனப் பாடகி யாங்சியுர் மனதில் ஆழப்பதிந்து விட்டது. யாங் ஹேய்சுன் கூறியதாவது:

நாங்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே, பாடல் பாட்டு போட்டியில் கலந்து கொண்டோம். எனக்கு அழகான முகம் இல்லாவிட்டிலும், என்னுடைய இனிய குரல், அவளை ஈர்த்து விட்டது என்று குறிப்பிட்டார்.

எமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது, யாங்ஹேய்சுன் ஹுவார் நாட்டுப்புறப்பாடலைப் பாடி, முந்தைய இனிமையான நினைவு கூர்ந்தார்.

இப்போது, யாங்ஹேய்சுன் ஜோதி, சுமார் 20 ஆண்டுகால திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அடிக்கடி ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்களை இயற்றி, ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்பாக வழங்கி கொள்கின்றனர். இவ்வாண்டின் டிராகன் விழா நாளில், யாங்ஹேய்சுன், வெளியூரில் பணிப்பயணம் செய்த மனைவிக்காக ஹுவார் பாடல் ஒன்றை இயற்றி, செல்லிடபேசி குறுந்தகவல் மூலம் அனுப்பினார்.

நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, திபெத்தின பாடகர் சியாங்கோஅன் பாடிய ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல். அவரும், பாடல் விழாவில் தான் அவரது காதலியைச் சந்தித்தார்.

உள்ளூர் மக்களின் அறிமுக விளக்கத்தின் படி, லாவ்யேசான் மலையில் நடைபெற்ற ஹுவார் நாட்டுப்புறப்பாடல் விழா, ஆண்டுதோறும் திபெத், ஹான், மங்கோலியா முதலிய சுமார் 30 தேசிய இனங்களின் ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்து வருகிறது. கடந்த நூறு ஆண்டுகளில், ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல் மூலம் காதலருக்கு தமது மனதைத் தெரிவித்த இளைஞர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாது. தாதுங் மாவட்டத்தின் சாலா இனத்தைச் சேர்ந்த ஹன்சான்சியாங் கூறியதாவது:

பல்வேறு தேசிய இனங்களின் இளைஞர்கள், பாடல் பாடிய போது, பரஸ்பர புரிந்துணர்வு கொண்டு திருமணம் செய்தனர். இப்பிரதேசத்தில் இது சாதாரண நிகழ்ச்சியாகும் என்று தெரிவித்தார்.

காதல் என்பது, ஹுவார் என்னும் வடமேற்கு சீனாவின் நாட்டுப்புறப்பாடல்களின் முக்கிய உள்ளடக்கமாகும். இது, வடமேற்கு சீனாவில் ஹுவார், வரவேற்கப்பட்டதற்கு மிகவும் முக்கியமான காரணமாகும் என்று சிந்ஹேய் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், ஹுவார் பற்றிய ஆய்வு நிபுணருமான மாச்சென்சான் குறிப்பிட்டார். ஒலி6

ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்களில் காதல் மாறாத முக்கிய உள்ளடக்கமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இந்தப் பாடல்கள் பெருமளவில் பரவி, வலுமையான உயிராற்றலை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கோடைக்காலம், மலர் மலரும் காலமாகவும், காதல் வளர்க்கும் காலமாகவும் இருக்கிறது. ஹுவார் என்னும் நாட்டுப்புறப்பாடல்களை விரும்பும் இளைஞர்கள் எதிர்காலத்தில் லாவ்யேசான் மலையில் மேலதிக காதல் கதை வரலாறுகளைப் படைப்பர்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040