• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வடமேற்கு சீனாவில் வாழும் பொது மக்களின் கதைகள்
  2010-10-15 14:59:57  cri எழுத்தின் அளவு:  A A A   
வடமேற்கு சீனாவில் இளம் ஆண்களும் பெண்களும் டூயட் எனும் இணைப் பாடல்களை பாடுவதன் மூலம், இன்பமான வாழ்க்கை மற்றும் இனிமையான காதலின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்த விரும்புகின்றனர். இத்தகைய நாட்டுப்புறப் பாடல் வகை சீனாவில் ஹுவார் என்று பெயருடையது. நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது ஹுவார் பாடலாகும்.

ஹுவார் என்ற பாடல் வகை வடமேற்கு சீனாவில் 600 ஆண்டுகளுக்கு மேலாக பரவியுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில், மூத்த பாடகர்கள் அடுத்தடுத்து காலமானதுடன் அதிகமான பாடல்கள் மற்றும் பாட்டுக் கலைகளை அறிந்து கொண்டவரும் குறைந்து வருகின்றனர். நாட்டுப்புறங்களில் பரவிய இந்த பாடல் கலை வளர்ச்சி அறைகூவல்களை எதிர்நோக்குகின்றது.

வடமேற்கு பகுதியில் ஹுவார் பாடல் மன்னராக அழைக்கப்பட்ட புகழ்பெற்ற பாடகர் zhang jian jun இது பற்றி ஆழமாக கவலைப்பட்டார். முன்பு, தனது இளம் மகளுக்கு ஹுவார் பாடல்களை அவர் கற்பித்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்கு பின், தனது மகள் இதைக் கைவிட்டார் என்று அவர் சோகத்துடன் கூறினார்.

ஆரம்பத்தில் அவர் இதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். அடிக்கடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொண்டார். மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், 3,4 ஆண்டுகளுக்குப் பின், வெளிநாட்டுப் பாடல்களைப் பாடவே விரும்பினார். காரணம், ஒரு புகழ்பெற்ற பாடகர் இங்கே ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு 2 இலட்சம் 80 ஆயிரம் யுவானைப் பெற்றார். இச்செய்தியை அறிந்த பிறகு அவள் ஹுவார் பாடல்களைக் கற்றுக்கொள்வதை கைவிட்டார் என்று அவர் கூறினார்.

இந்த நிலைமை அரசு வாரியங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2007ம் ஆண்டு பள்ளிகளில் ஹுவார் நாட்டுப்புறப்பாடல் பரப்புரை நடவடிக்கையை நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேச அரசு மேற்கொள்ள துவங்கியது. இந்நடவடிக்கை நல்ல பயன் பெற்றுள்ளது.

நிங்சியாவின் தெற்கு பகுதியில் Hai yuan என்ற சிறிய வட்டம் உள்ளது. நடுநிலைப் பள்ளி மாணவர் tui wei cheng தனது பள்ளியில் தலைசிறந்த 10 பாடகர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறியதாவது  

இது உண்மையான கலை. எனக்கு ஹுவார் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்றார் அவர்.

MA HAN DONG என்பவர் இசை ஆசிரியராவார். 2008ம் ஆண்டு அவர் இந்த பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தின் முதலாவது தொகுதி வாரிசுகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் கூறியதாவது

இந்தப் புகழைப் பெற்ற பின் பொறுப்பு அதிகம் என்று உணர்ந்தேன். பள்ளிகளில் ஹுவார் பரப்புரை நடவடிக்கையிலோ மாணவர்களுக்கு பாடல் பாடம் வழங்குவதிலோ நான் என்னால் இயன்ற அளவில் பாடுபட்டு வருகி்ன்றேன் என்று அவர் கூறினார்.

உள்ளூர் அரசின் வழிகாட்டல் மற்றும் பொது மக்களின் ஆதரவுடன் தற்போது பல மாணவர்கள் பல ஹுவார் பாடல்களைப் பாட முடியும். அவர்களில் பலர் ஹுய் இனத்தின் தனிச்சிறப்புமிக்க இசை கருவியான நிவாலூ மூலம் ஹுவார் இசையை இசைக்கலாம். இந்த இனிமையைன ஹுவார் இசையைக் கேளுங்கள்.

நடைமுறையில் நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைத் தவிர, அதற்கு அருகிலுள்ள சிங்காய் மாநிலம், கான்சூ மாநிலம் ஆகியவற்றிலும் ஹுவார் பாடல்கள் மிகப் பரவலாக பரவி வருகின்றன. Ma jinshan என்ற முதியவர் இந்தப் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தின் தேசிய நிலை வாரிசாவார். 2004ம் ஆண்டு, அவர் தனது ஊரான கான்சூ மாநிலத்தின் hezheng மாவட்டத்தில் சொந்த செலவில் ஹுவார் கலை பள்ளியை ஆரம்பித்தார். அவர் கூறியதாவது

ஹுவார் பாடல் என்பது எமது நாட்டுப்புறக் கலையும் தேசிய இனக் கலையும் ஆகும். தற்காலத்தில், பல இளைஞர்கள் டிஸ்கோ நடனத்தில் அதிக நேரம் செலவழிக்கின்றார்களே ஒழிய, ஹுவார் பாடல்களைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை. இந்த நிலைமை தொடர்ந்தால், ஹுவார் பாடல் கலை அழியும். ஆகையால், எவ்வளவு களைப்பு அடைந்தாலும், எவ்வளவு பணம் செலவானாலும், ஹுவார் பாடல் கலையைத் தொகுத்து மாணவர்களிடம் சொல்லி பரப்புவேன் என்று அவர் கூறினார்.

இதுவரை இந்தப் பள்ளியில் 70 வயது நேரிட்ட ma jinshan 70 ஆயிரம் யுவானைச் செலவழித்தார். அவரது முயற்சி வீண் போகவில்லை. தற்போது அவரது ஹுவார் கலை பள்ளியில் 100க்கு மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். மிக இளம் மாணவருக்கு வயது 8. உள்ளூர் பிரதேசத்தில் புகழ்பெற்ற நடுத்தர மற்றும் இளம் வயது பாடகர்கள் அனைவரும் அவரிடமிருந்து வழிகாட்டலைப் பெற்றுள்ளனர். அவருடைய மாணவர்கள் சிலர் பல முறை விருதுகளைப் பெற்று அழைப்பின் பெயரில் பெய்ஜிங்கின் அரங்கில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். தற்போது அவரது மகன் ma xiaolong அவரது பொறுப்பை ஏற்று மாணவர்களுக்கு பாடங்களை வழங்குகின்றார்.

ஹுவார் நாட்டுப்புறப் பாடல் கலையின் பரப்புரை பணி இன்னும் கடினமானது என்று நிங்சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பாதுகாப்பு மையத்தின் இயக்குநர் jin zongwei வலியுறுத்தினார்.

பள்ளிகளில் ஹுவார் பாடல் கலையின் பரப்புரை நடவடிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகின்றேன். இதற்கு 3 பயன்கள் உண்டு. ஒன்று, சமூகக் கல்வியில் இது புதிய அம்சங்களைச் சேர்க்கலாம். இரண்டு, பாரம்பரிய பண்பாட்டின் பரவல் மற்றும் கையேற்றும் நடவடிக்கையாகவும் இது அமையலாம். மூன்று, கலை கல்வியை இது செழுமைப்படுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040