• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
நவம்பர் 12ம் நாள்
  2010-11-12 22:40:55  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்ற தெற்காசிய விளையாட்டுப் பிரதிநிதிக் குழுக்கள்

16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா இன்று இரவு சீனாவின் குவாங் சோ Hai Xinsha சதுக்கத்தில் நடைபெற்றது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் முதலிய தெற்காசிய நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள, வரலாற்றில் முன் கண்டிராத மிகப் பெரிய அளவு பிரதிநிதிக் குழுக்களை அனுப்பியுள்ளன. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் மிகச் சிறப்பான சாதனைகளை பெற வேண்டுமென இவை விரும்பி வருகின்றன.

முதல் மற்றும் 9வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய இந்தியா, தெற்காசிய விளையாட்டு வளர்ச்சியில், முன்னேறிய நிலையில் இருந்து வருகின்றது. துப்பாக்கி சுடுதல், தடகள விளையாட்டுக்கள், ஹாக்கி, குத்துச்சண்டை போட்டி ஆகிய விளையாட்டுகளில் இந்தியா வலுலான ஆற்றலை கொண்டுள்ளது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 தங்கப் பதக்கங்களுடன், இந்தியா பதக்கப் பட்டியலின் 8வது இடத்தை பெற்றது. குறிப்பாக, 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் பிந்திரா தங்கப் பதக்கத்தை பெற்றார். ஒலிம்பிக் வரலாற்றில், தனிநபர் விளையாட்டு போட்டி நன்றில் இந்தியா தங்கப்பதக்கம் பெற்றது, அதுவே முதல்முறை. இவ்வாண்டு அக்டோபர் திங்கள் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 14 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளி பதக்கங்கள், 5 வெண்கலப் பதக்கங்களை இந்தியா பெற்றது. எனவே, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறந்த சாதனைகளை பெறுவது இந்திய விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் முக்கிய நோக்கமாகும். இந்திய விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவின் தலைவர் கூறியதாவது:

ஒலி

கடந்த சில ஆண்டுகள், அரசு மற்றும் மக்களின் ஆதரவில், இந்திய விளையாட்டுத்துறை மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக, இளம் வீரர்களுக்கான பயிற்சியில், இந்தியா பல முயற்சிகளை நிறைவேற்றியுள்ளது. இந்திய விளையாட்டுப் பிரதிநிதிக் குழுவில், சுமார் 50 விழுக்காட்டு வீரர்கள் 1990ம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்கள். 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கென இளைஞர்களிடையே திறமைசாலி பயிற்சியை அளிப்பத்தோடு, இந்தியாவில் பாரம்பரிய விளையாட்டுக்களையும் பரவல் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

வூசு, கபடி முதலிய ஒலிம்பிக் சாரா விளையாட்டுகளில் இந்திய விளையாட்டுப் பிரதிநிதிக் குழு மிகவும் கவனம் செலுத்தியது. குவாங் சோ ஆசிய விளையாட்டிப் போட்டியின் வூசு போட்டியில் கலந்துகொள்ளும் வீரர் கூறியதாவது:

சீனாவில் பழமை வாய்ந்த ஓர் விளையாட்டு வூசுவாகும். தனிப்பட்ட ஒருவரின் பல்வகை ஆற்றலை இது நெறிப்படுத்தும். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீன புகழ் பெற்ற வீரர்களுடன் இணைந்து, போட்டியிடுவதற்கு, நான் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று அவர் கூறினார்.

தவிர, கடந்த பல ஆண்டுகள், விளையாட்டுப் பணிகளில் மாபெரும் முன்னேற்றம் ரண்ட இலங்கை, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராக உள்ளது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு 102 வீரர்களுடன் இலங்கை விளையாட்டுப் பிரதிநிதிக் குழு களமீறங்குகிறது. இலங்கை விளையாட்டு அமைச்சகத்தின் செயலாளர் சலிச்சிய்னா லியநகம் கூறியதாவது:

தடகள விளையாட்டுக்கள், கடற்கரை வாலிபால் போட்டி, கிரிக்கெட் முதலிய 10 விளையாட்டுகளில் பதக்கம் வெல்ல பெற வேண்டுமென இலங்கை பிரதிநிதிக் குழு விரும்புகின்றது. பல ஆண்டுகால முயற்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றதன் மூலம், இலங்கையின் விளையாட்டு நிலை மிக வேகமாக உயர்ந்தது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெற்ற சாதனையை குவாங் சோவில் நாங்கள் தாண்ட வேண்டும் என்று அவர் கூறினார்.

குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில், தெற்காசிய விளையாட்டு பாரம்பரிய வல்லரசான பாகிஸ்தான் வலிமையான ஆற்றலை கொள்கின்றது. கிரிக்கெட், ஹாக்கி, குத்துச்சண்டை, squash, கபடி முதலி விளையாட்டுகளில், தங்கப் பதக்கத்தை பெறும் விருப்பத்தை பாகிஸ்தான் கொண்டுள்ளது. குறிப்பாக, 1960ம் ஆண்டு Rome, 1968ம் ஆண்டு மெக்சிகோ மற்றும் 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் ஹாக்கி போட்டியின் தங்கப்பதக்கத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், ஹாக்கி நிலை குறைந்த போதிலும், இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில், சிறந்த சாதனையைப் பெற பாகிஸ்தான் ஹாக்கி அணி விரும்புகின்றது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசியாவின் பல்வேறு விளையாட்டுப் பிரதிநிதிக் குழுக்கள் சிறந்த சாதனைகளை பெற வேண்டுமென நான் விரும்புகின்றேன்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040