• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
டிசம்பர் 17ம் நாள்
  2010-12-17 17:32:14  cri எழுத்தின் அளவு:  A A A   
குவாங் சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்ற தெற்காசிய வீரர்களின் கதைகள் பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர் மோகன்

குவாங் சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டி, ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு அமைப்பு புதிதாக உருவாக்கப்பட்ட பின், நடைபெறும் முதல் ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியாகும். 2512 மாற்று திறனாளி வீரர்கள் இந்தப் போட்டியில் கலந்துகொள்கின்றனர். தங்களது வழிமுறைகளின் மூலம், விளையாட்டு எழுச்சியின் உள்ளடக்கங்களை அவர்கள் அதிகரித்துள்ளனர். இது அமைவரது மனதிலும் ஆழமாக பதிந்துள்ளது.

குவாங் சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், இந்திய பளுதூக்குதல் வீரர் ஃபர்மன் பஷா இந்திய பிரதிநிதிக் குழுவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார். அத்துடன், அவரது காதல் கதையும் நம் கவனத்தை ஈர்க்கக்கூடியது.

குழந்தைப் பருவத்தில், ஃர்மன் பஷா Polio நோய்யால் பாதிக்கப்பட்டார். எனவே, சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோலைப் பயன்படுத்துகிறார். மாற்றுத்திறனாளியாக அவர் தனது கருத்துக்களை குறிப்பிட்டார். ஃர்மன் பஷா கூறியதாவது:

மக்கள் அனைவரும் நெருக்கடியில் சிக்கக் கூடும். மக்கள் அனைவரும் குறைகள் உண்டு. என்னுடைய குறைபாட்டை நீங்கள் நேரடியாக பார்க்கலாம். ஆனால், சிலரது குறைபாடுகள் அவரது மனங்களில் மறைந்து கிடக்கும். எங்களுக்கு உடல் திறனில் பிரச்சினைகள் இருந்த போதிலும், இயல்பாக மற்றவர்களைப் பேன்றே பணிகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம். ஏறக்குறைய இயல்பு நிலையை எங்களால் எட்ட முடியும் என்று அவர் கூறினார்.

இந்த திடமான எழுச்சியை கண்டு, ஃபர்மன் பஷாவின் மனைவி அழமாக ஈர்க்கப்பட்டார். அவர் ஒரு தடகள விளையாட்டு வீராங்கணையாவார். ஆனால், ஃபர்மன் பஷாவை நல்லபடி கவனித்துக்கொள்ளும் வகையில், அவர் தமது விளையாட்டு வாழ்க்கையை கைவிட்டார். தற்போது, அரசு வாரியம் ஒன்றில் அவர் பணி செய்கின்றார். தமது காதல் அனுபவம் பற்றி குறிப்பிடுகையில், ஃர்மன் பஷா கூறியதாவது

அப்போது, உடற்பயிற்சியகத்தில் நான் நாள்தோறும் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தேன். விளையாட்டுத்திடலில் என் மனைவி நாள்தோறும் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார். விளையாட்டு சார்ந்த வேலையாலும், நேர்மையாக ஒருவரை ஒருவர் அறிந்துபழகியதாலும், காதல் வயப்பட்டு நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என்று அவர் கூறினார்.

பளுதூக்குதல் வீரர்களை பொறுத்த வரை, எடையை தூக்கிக் கட்டுப்படுத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், இந்திய உணவு பொருட்களில், அதிகப்படியான எண்ணெய் மற்றும் இனிப்பு உள்ளன. எனவே, சிறப்பு உணவு பொருட்களை வாங்குவது அதிகப்படியான பணத்தை தேவைப்படுகிறது. இத்துறையில், நாங்கள் 15 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் ருபாயை திங்கள் தோறும் செலவிட வேண்டும். ஃபர்மன் பஷா கூறியதாவது:

என் மனைவிதான் என்னுடைய பெருமை. என் பளுதூக்குதல் பயிற்சிகளில் எனக்கு அவர் மாபெரும் உதவி மற்றும் ஆதரவு வழங்கி வருகின்றார். என் விளையாட்டு பணியில், அவர் தமது அனைத்து பணத்தை செலவிழித்து வருகிறார் என்று அவர் கூறினார்.

தவிர, தமது மகனுடன் சேர்ந்து விளையாடுவது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஃர்மன் பஷா கூறியதாவது:

என் மகனுக்கு 9 வயதாகிறது. நானும் என் மனைவியும் அவருக்கு ஒரு எடுத்துக்காட்டு பேல. எதிர்காலத்தில், ஒரு வீரராக மாற்றி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தை பெறுவது அவரது நோக்கமாகும் என்று அவர் கூறினார்.

ஃர்மன் பஷாவின் பளுதூக்குதல் விளையாட்டில், ஆற்றல், உற்சாகம் மற்றம் அவரது காதலை நாம் அறிந்தோம்.

அடுத்து, இலங்கையைச் சேர்ந்த மாற்று திறனாளி வீரர் Jagath Weerathunga தற்கொலை தாக்குதல் ஒன்றில், தமது வலது காலை இழந்தவர். 5 ஆண்டுகால நலம் பெறும் பயிற்சியின் மூலம், 2005ம் ஆண்டு முதல், அவர் வில்வித்தை விளையாட்டுர்களில் பங்கெடுக்கத் துவங்கினார். கடந்த 5 ஆண்டுகால பயிற்சி மற்றும் போட்டி அனுபவத்தில், அவருக்கும், அவரது 2 குழந்தைகளுக்கிடையில் நெகிழ்ச்சியான கதை உருவாகியுள்ளது.

Jagath Weerathungaவின் 2 குழந்தைகள் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்கின்றனர். இதில் அவருக்கு பெருமை. குடும்பம் எனக்கு மாபெரும் மனவுறுதியும் நம்பிக்கையும் தருகிறது என்றும். தனது செல்வாக்கில், குழந்தைகளும் குடும்பத்தின் பெருமையாக வளர்ந்து காட்டுவர் என்றும் அவர் கூறினார். Jagath கூறியதாவது:

மாற்று திறனாளி வீரரான நான் நாள்தோறும் பயிற்சி மேற்கொள்கின்றேன். எனது 2 குழந்தைகளுக்கும்இது பெரிய அளவில் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. என் உடம்பில், தொட்டு உணர முடியாத எழுச்சி ஆற்றலை அவர்கள் பெற்றுள்ளனர். ஆக்கமுள்ள ஆற்றலின் செல்வாக்கில், 2 குழந்தைகள் எங்கள் குடும்பத்தின் பெருமையாக மாறுவர். தவிர, தாய்நாடு மற்றும் சமூகத்துக்கு மாபெரும் பங்காற்றலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த குவாங் சோ ஆசிய பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், பல வீரர்களின் கதைகள் நம் மனதில் ஆழமாக பதியக்கூடியவை. ஆசியாவின் பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் மாபெரும் எழுச்சி அனுபவத்தை இவை வழங்கும் என்று நம்புகிறோம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040