• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஜனவரி 15ம் நாள்
  2011-01-14 10:48:15  cri எழுத்தின் அளவு:  A A A   
கலை.......வணக்கம் நேயர்களே. நேர்கள் அனைவருக்கும் எமது இதயங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

புஷ்பா.......இன்று நாவிற்கு சுவை சேர்க்கும் இனிப்பு மிகுந்த பொங்கலையும், இயற்கை இனிமயான கரும்பையும் சுவைத்து பொங்கல் திருநாளைக் கொண்டாடி இருப்பீர்கள்.

கலை........இப்பொழுது செவிக்கு இனிமை தரும் எமது இனிய பொங்கல் நிகழ்ச்சிகளைக் கேட்டு மகிழுங்கள்.

காலை நமது துறையின் ஆசிரியர் திருமதி புஷ்பா ரமணி அவர்களது இல்லத்தில், பெய்ஜிங் தகவல் தொடர்பு கல்லூரி மாணவர்களுடன், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த தொகுப்பை கேளுங்கள்  

புஷ்பா.......அடுத்து நேற்றைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, கிறிஸ்துராஜ் கலைக்கலூரி மாணவ மாணவிகள் வழங்கும் பல்சுவை நிகழ்ச்சியின் இரண்டாவது பகுதியைக் கேட்டு ரசியுங்கள்.

கலை........தொடர்வதும் மாணவச் செல்வங்கள் பங்கு பெற்ற சிறப்பு நிகழ்ச்சிதான்.

புஷ்பா.......நமது தமழ்மொழி கடல், மலை கடந்து தனது சிறப்பைப் பறைசாற்றியுள்ளது. பேராசிரியர் சுந்தரன் மற்றும் திருமதி கலையரசி, தமிழ்த் துறை தலைவர், முன்னிலையில், பெய்ஜிங், தகவல் தொடர்பு கல்லூரி மாணவர்கள் அனல் பறக்க விவாதித்த பட்டிமன்ற நிகழ்ச்சியைக் கேட்கலாம்.

கலை........தலைப்பு மேலைநாட்டு நாகரிகம், பாரம்பரிய பண்பாட்டைப் பாதிக்கிறதா? பாதிக்கவில்லையா? பாதிக்கிறது என்று பேசியிருப்பவர்கள் செல்வி நிலானி, செல்வி இலக்கியா, செல்வி. நிறைமதி, பாதிக்கவில்லை என்று பேசியிருப்பவர்கள் செல்வன். நித்திலன், செல்வி. மேகலா, செல்வி. ஓவியா, நடுவர் திருமதி புஷ்பா ரமணி. கேட்டு ரசியுங்கள்.

புஷ்பா.......என்ன நேயர்களே, நமது சீன மாணவர்களின் கருத்துகளைக் கொஞ்சும் சீனத் தமிழில் கேட்டு ரசித்தீர்களா? கலை........இன்றைய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன. மீண்டும் நாளைய சிறப்பு நிகழ்ச்சியில் சந்திப்போம் வணக்கம்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040