புஷ்பா......வணக்கம் நேயர்களே. உழவர் திருநாள் என்று நமது கிராமப்புற மக்களுக்காக, அந்த மக்களால் கொண்டாடப்படும் இந்த நாளில் உழவர்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். உழவர் திருநாளில் நமது பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியை வழங்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
கலை........இன்றைய நிகழ்ச்சியில் தொடர்ந்து எல்லோருக்கும் மிகவும் அறிமுகமான, கல்லூரி தமிழ் பேராசிரியர், பட்டிமன்ற நடுவர், தொலைகாட்சி நிகழ்ச்சி வழங்குபவர், மற்றும் திரைப்பட நடிகரான பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தம் அவர்களின் தமிழ் அமுத நேர்காணலை வழங்குகிறோம்.
புஷ்பா.......என்ன நேயர்களே, கடந்த நான்கு நாட்களாகக் கேட்ட பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் எப்படி இருந்தன. பொங்கலைப் போல இனிப்பாகவும் சுவையாகவும் இருந்ததா? சர்க்கரைப் பொங்கல் வேண்டுமானால் அதிகமாக உண்டால் திகட்டக் கூடும். ஆனால் எமது நிகழ்ச்சிகளை எவ்வளவு கேட்டாலும் திகட்டாது என்று நம்புகின்றோம்.
கலை.......இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய உங்களுடைய மேலான கருத்துகளை வரவேற்கின்றோம். எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.
புஷ்பா.......பொங்கல் விழாவுக்கான சிறப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. மீண்டும் சந்திப்போம் வணக்கம் நேயர் நண்பர்களே.