பல்லூடக வளர்ச்சி
2006ஆம் ஆண்டு ஜூலை திங்கள், சீன வானொலி நிலையம் சொந்தமாக வளர்த்த பல மொழிகளின் வலைப்பூ மேடையை வெளியிட்டது. சீன மொழி, ஆங்கில மொழி, கொரிய மொழி, ஜப்பானிய மொழி ஆகிய நான்கு மொழிகளின் இணைய வலைப்பூ சேவையைத் துவக்கியது. சீனாவில் சிறப்பு வானொலி நிலையம் வழங்கும் முதலாவது பன்மொழி வலைப்பூச் சேவை இணையதளம் இதுவாகும். தரவேற்றப்படும் அதிகமான நிகழ்ச்சிகளில் ஒலி வடிவ நிகழ்ச்சிகள் அதிகம். தவிர, அன்னிய மொழி கற்பித்தல், உரையாடல் மற்றும் அதிகமான வானொலி நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
2007ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் மற்றும் ஆகஸ்ட் திங்களில், சீன வானொலி நிலையம் அடுத்தடுத்து China Unicom நிறுவனம், China Mobile நிறுவனம் ஆகியவற்றுடன் CRI செல்லிடப்பேசி வானொலி மற்றும் தொலைபேசிச் சேவையை துவக்கி, செல்லிடப்பேசியை பயன்படுத்துவோருக்கு செழிப்பான நிகழ்ச்சிகளின் நேரடி ஒலி மற்றும் ஒளிபரப்பு, தரவிறக்கச் சேவைகள் ஆகியவற்றை வழங்கியது. இச்சேவை வழங்கப்பட்டமை, சீன வானொலி நிலையம், பாரம்பரிய செய்தி ஊடகத்திலிருந்து புதிய செய்தி ஊடகத் துறையை நோக்கி மாபெரும் காலடி எடுத்து வைத்துள்ளதை கோடிட்டுக்காட்டுகிறது.
2007ஆம் ஆண்டு செப்டம்பர், CRI Online இணைய தளத்தின் CRI இணைய ஒலிபரப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. உள்ளூர்மயமாக்கத்தை இலக்காகக் கொண்ட பன்மொழி வெளிநாட்டு இணைய வானொலிக் குழு உருவாகத் தொடங்கியது.
2007ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள், சீனாவின் முதலாவது வானொலி கன்பிஃசியூயஸ் கழகம் சீன வானொலி நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது. "இணைய வானொலி மூலம் சீன மொழியைக் கற்பது, புதிய செய்தி ஊடக வழிமுறை மூலம் சீன மொழியைக் கற்பது, சொந்த தாய் மொழியில் சீன மொழியைக் கற்பது, ஐந்து கண்டங்களில் உள்ள நேயர் மன்றங்களின் மூலம் சீன மொழியைக் கற்பது" என்ற கருத்தை சீன வானொலி நிலையம் பெரிதும் பரப்புரை செய்கிறது. உலகளவில் சீன மொழி பரவல் துறையில் மைல் கல் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் இதுவாகும்.
2008ஆம் ஆண்டு ஜூலை திங்கள், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு மேலும் செவ்வனே சேவை புரியும் வகையில், CRI Onlineஇன் "பெய்சிங் ஒலிம்பிக் முஸ்லிம் வழிகாட்டி" என்னும் இணையதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது பெய்சிங்கிறகு வந்த பல்வேறு நாடுகளின் முஸ்லிம் நண்பர்களுக்கு, அவர்களின் தேசிய இன பழக்க வழக்கம் மற்றும் மத வாழ்க்கை தொடர்பான எதார்த்த தகவல்களை இது வழங்கியது.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள், செல்லிட Cri Onlineஇன் ஆங்கில மொழி இணையதளமும், சீன மொழி இணையதளமும் முறையே சோதனை முறையில் இயங்கின. சீன வானொலி நிலையத்தின் புதிய செய்தி ஊடக வளர்ச்சி, செல்லிட இணையத் துறையின் திசையை நோக்கி முக்கிய காலடி எடுத்து வைக்கிறது என்பதை இது கோடிட்டுக்காட்டுகிறது.
2009ம் ஆண்டு ஜுலை, சீன வானொலி நிலையத்தின் செல்லிடபேசி வழியாக செய்தி சேவை வழங்கும் இணையதளம் பெய்ஜிங்கில் தொடங்கப்பட்டு சேவை புரிய துவங்கியது. சீன வானொலி நிலையம் தமது அன்னிய மொழிகளின் சேவையில் மேம்பாட்டைப் பயன்படுத்தி வழங்கிய புதிய சேவை இதுவாகும்.
2010ம் ஆண்டு பிப்ரவரியில், ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அதிகார வட்டாரத்தின் பல்வகை மொழிகளில் வெளியான மின்னணு இதழ்—நகரங்களின் தனிச்சிறப்புகள் ஆகி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. உலகளவிலான இணையப் பயன்பாட்டாளர்கள் crionline என்னும் சீன வானொலியின் இணையதளத்திலிருந்து இவ்விதழை பதிவிறக்கம் செய்யும் டவுன்லோடு வசதி வழங்கப்பட்டது. அதேவேளை, ipad மூலம் அதைப் பார்க்கலாம் வசதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
2010ம் ஆண்டு மார்ச் 23ம் நாள், www.chinesefilm.cn என்னும் இணையதளம், ஹாங்காங்கின் பொருட்காட்சி மையத்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. சீனாவில், அன்னிய மொழிகளின் மூலம் சீனாவின் திரைப்படத் தொழிற்துறையை அறிமுகப்படுத்தி விளம்பரம் செய்யும் இணையதளம் தொடங்கப்படுவது, அதுவே முதல்முறை. சீன வெளிநாட்டு திரைப்படப் பண்பாட்டுப் பரிமாற்றங்களை விரைவுபடுத்தி, வெளிநாட்டு பார்வையாளர்கள், இணையதளம் மூலம் சீனாவின் திரைப்படங்களையும் சீனப்பண்பாட்டையும் புரிந்துகொண்டு கண்டுகளிப்பதற்கு வசதியை வழங்குவது, அதன் நோக்கமாகும்.
2010ம் ஆண்டு ஏப்ரல், crinoline ஐ சேர்ந்த சீன-ஆசியான் இணையதளம் சேவைபுரிய தொடங்கியது. கம்போடியன், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியன்மார், தாய்லாந்து, வியாட்நாம் ஆகிய ஆசியானின் 8 உறுப்பு நாடுகளின் அதிகார மொழிகளில், சீனாவுக்கும் ஆசியான் நாடுகளுக்குமிடை நட்பு ஒத்துழைப்புக்கு மேடையை இது உருவாக்கியுள்ளது.
2010ம் ஆண்டு ஏப்ரல் 15ம் நாள், சீன வனொலியும், துருக்கி வானொலியும் கூட்டாக நிறுவிய சீன-துருக்கி பண்பாட்டு சுற்றுலா இணையதளம் தொடங்கப்பட்டது. துருக்கியில் தயாரிப்பு, வெளியீடு, செயல்பாடு என்ற முறைமையுடன், இந்த இணையதளம் சேவைபுரிகிறது. துருக்கி மக்களுக்கு, சீனப்பண்பாட்டை அறிமுகப்படுத்தி, சுற்றுலா சேவையை வழங்கும் முதலாவது இணையதளமாக இது செயல்படுகிறது. தகவல்மயமான காலத்தின் புதிய பட்டுப் பாதையென இது அழைக்கப்படுகிறது.
2010ம் ஆண்டு ஜுன், சீன வானொலியும் mirosoft நிறுவனமும் இணைந்து இணைய தொலைக்காட்சி சேவையை தொடங்கின. இந்த ஒத்துழைப்பில், சீன வானொலியும், mirosoft நிறுவனமும் முறையே, இணையத் தொலைக்காட்சியை இயக்குவேராகவும், தொழில் நுட்ப சேவை புரிவோராகவும் விளங்குகின்றன. உள்ளடக்கங்களிலும் வடிவங்களிலும், இது, சீனாவிலுள்ள தற்போதைய இணைய தொலைக்காட்சி சேவையின் முன்னேற்றம் என்று சொல்லலாம்.