• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையதளத்தின் வளர்ச்சிப் போக்கு
  2011-01-16 20:06:38  cri எழுத்தின் அளவு:  A A A   
முன்பு, சீன வானொலி நிலையத்தில் 43 மொழிகளின் ஒலிப்பரப்புகள் செயல்பட்டன. அதன் பின், CRI Online எனப்படும் இணையதளம் 1998ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டபோது, சீனம், சீனாவின் கேண்டனீஸ், ஆங்கிலம், ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆகிய 5 மொழிகளின் இணையதளங்கள் முதலில் இயங்கத் துவங்கின.

2003ஆம் ஆண்டு, மங்கோலியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன், போலந்து, ஹங்கேரி, செர்பியா, ஹாசா, இந்தியாவின் ஹிந்தி, தமிழ் மொழிகள், லாவோஸ், செக், அல்பேனியா, துருக்கி, ஸ்வாகிலி, பெர்சியன், புஷ்தூ, நேபாளம், உருது, கம்போடியா, இலங்கையின் சிங்கள மொழி, வங்காளதேசம், மியன்மார், சீனாவின் கேசியா, மின்னான் மற்றும் சாவ்சோ வட்டார வழக்கு மொழிகள் ஆகிய 26 மொழிகளின் இணையதளங்கள் செயல்படத் துவங்கின. பிரான்ஸ், போர்ச்சுக்கல், கொரியா, ரஷியா, அரபு, இந்தோனேசிய, வியட்நாம், ருமேனிய, பல்கேரிய, எஸ்பர்ன்தோ, இத்தாலி மற்றும் ஜப்பான் மொழிகளோடு, மொத்தம் 43 மொழிகள் சேவை இணையதளம் வழியாக வழங்கப்பட்டன.

2004ஆம் ஆண்டு, சீன வானொலி இணையதளமும் சின்ச்சியாங் மக்கள் வானொலி நிலையமும் ஒத்துழைத்து, உய்கூர், கசகஸ்தான் மற்றும் கிர்கிஸ் ஆகிய 3 மொழிகளின் இணைதளங்களையும் இணைய வானொலி ஒலிப்பரப்பு நிகழ்ச்சிகளையும் வழங்க தொடங்கின

2005ம் ஆண்டு, திபெத் மக்கள் வானொலி நிலையத்துடன் இணைந்து ஒத்துழைத்து, திபெத் மொழியின் லாசா மற்றும் காங்பா வட்டார வழக்கு மொழிகளின் இணையதளங்களை அமைத்துள்ளன. அவ்வாண்டு முதல், சீன வானொலி இணையதளம் 48 மொழிகளில் செயல்பட்டது.

சீன வானொலி நிலையமும் பின்லாந்தின் நாளைச் செய்தி ஊடக நிறுவனமும் ஒத்துழைத்ததன் மூலமாக, ஸ்வீடிஷ், டென்னிஷ் மற்றும் பின்னிஷ் மொழிகள் தொடர்பான இணையதளங்களை வட ஐரோப்பாவில் 2007ம் ஆண்டு நிறுவப்பட்டன. அவ்வாண்டு முதல், சீன வானொலி இணையதளத்தில் 51 மொழிகளில் சேவைகள் வழங்கப்பட தொடங்கின.

2008ம் ஆண்டு திறக்கப்பட்ட கிரோஷியன் மற்றும் உக்ரேனியன் மொழி இணையதளங்களோடு, மொத்தம் 53 மொழி சேவைகளை CRI Online இணையதளம் வழங்கியது.

2009ம் ஆண்டு முதல்முறையாக திறக்கப்பட்ட பெலாரஸ், எபிரேயம், கிரேக்கம், நெதர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய 6 மொழிகளுடன், மொத்தம் 59 மொழிகளின் கிளை இணையதளங்கள் உருவாக்கப்பட்டன.

2010ஆம் பிப்ரவரி 8ஆம் நாள், எஸ்டேனியன் மற்றும் லித்துவனியன் மொழிச் சேவைகள் சீன வானொலியின் இணையதளத்தில் தொடங்கப்பட்டன. இதுவே, தற்போது சீனாவில் இத்தகைய மொழிகளை வழங்கும் ஒரே இணையதள சேவையாகும்.

இதுவரை, CRI Online எனப்படும் சீன வானொலி நிலைய சேவை 61மொழிகளைக் கொள்கின்ற பல்லூடக இணைய மையமாக மாறியுள்ளது. அதுவும், உலகளவில் மிக அதிக மொழிகளைக் கொள்கின்ற இணைய வலையமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040