சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவை வரவேற்கும் வகையில், இலங்கையிலுள்ள சீனத் தூதரமும் பண்டாரநாயக்க சர்வதேச ஆய்வுக் கழகமும் கூட்டாக ஏற்பாடு செய்யும் சீன திரைப்படத் விழா ஜனவரி 21ஆம் நாள் தொடங்கி 23ஆம் நாள் வரை இக்கழகத்தின் மண்படத்தில் நடைபெற்று வருகிறது. இத்தகைய விழா மூலமாக, இலங்கையின் மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு சீனாவின் பண்பாட்டை பரப்புரை செய்ய, இக்கழகம் முயற்சி செய்துள்ளது.
இத்திருவிழாவில் 6 திரைப்படங்களும் 2 ஆவணப்படங்களும் ஒளிப்பரப்பப்படும். பண்டைய சீனாவின் வரலாற்றையும் விரைவாக வளர்ந்து வருகின்ற நவீன சீனாவையும், குறிப்பாக, உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்களின் புதிய வாழ்க்கையை இந்த திரைப்படங்கள் முக்கியமாக வெளிப்படுத்துகின்றன.