குவான் ச்சுன் பாஃன் நன்கையர் தான் பாடிய ஒலி இதுவாகும். அவரது வயது 44. சிச்சுவான் மாநிலத்தின் யிங் சியூ வட்டத்தைச் சேர்ந்த யூச்சுசீ கிராமத்தில் வாழ்கின்றார். பாடுபதில் தேர்ச்சி பெறுவது மட்டுமல்ல பூ தேயல், காலணித் துணி, தலைத் துணி, தோல் துணி ஆகியவற்றில் சியாங் இனத்தின் பாரம்பரிய பூ வடிவத்தில் தேயலிலும் அவர் தேர்ச்சி பெற்றவராவார். அவரிடமிருந்து சியாங் இனத்திந் பண்பாட்டு வளர்ச்சியில் நம்பிக்கை காணப்படுகின்றது.
சியாங் இனம் சீனாவின் மிகவும் பண்டைகால வரலாறு கொண்ட இனங்களில் ஒன்றாகும். அதன் வரலாறு 3000 ஆண்டுகளுக்கு முன் உருவாகியது. அப்போது சியாங் இன மக்கள் முக்கியமாக சீனாவின் வட மேற்கு எல்லைப் பிரதேசத்தின் வாழ்ந்தனர். பின் படிப்படியாக சிச்சுவான் மாநிலத்தில் நகர்ந்தனர். மலையின் நடுவில் கற்களால் கட்டியைமைக்கப்பட்ட வீட்டில் வாழ்வது அவர்களின் விருப்பமாகும். ஆகவே மக்கள் மேகத்திலுள்ள இனம் என அவர்களை அழைக்கிறார்கள். அவர்கள் தங்கியிருக்கும் கோப்புரங்கள் பாரம்பரிய தொழில் நுட்பத்துடன் கட்டியமைக்கப்பட்டன. இது சீனா மற்றும் உலகின் கட்டிட வரலாற்றில் செல்வாக்கு பெறுகின்றது. சியாங் இனத்தின் ஆடைகள், பாடல் மற்றும நனம், இசைக் கருவிகள் ஆகியவை இனத்தின் பாணியுடையவை.
பெய்ச்சுவான் சீனாவின் ஒரேயொரு சியாங் இன தன்னாட்சி வாமட்டமாக திகழ்கின்றது. அதன் பண்பாட்டை வெளிக்கொளரும் வகையில் பெய்சுவான் இடைநிலை பள்ளி நிலநடுக்கத்துக்கு பின் குறிப்பாக சியாங் இன பண்பாட்டு வகுப்பு நடத்தியது. சியாங் இன பாடல்கள் வாரத்துக்கு இரண்டு முறை கற்பிக்கப்படுகின்றன. இதற்கு பொறுப்பாக குறிப்பிட்ட ஆசிரியகள் நியமிக்கப்பட்டனர். இது பற்றி பள்ளியில் பணிபுரிகின்ற சியூ ஆசிரியர் கூறியதாவது.
சியாங் இன பண்டு தொடர்பான பாடநூல்களை வகுக்கப்படுகின்றன. இது நிறைவேற்ற பின் பள்ளி முழுவதிலும் பாடம் கற்பிக்கப்படும் என்று அவர் கூறினார்.