

மதிய உணவு நண்பர் கிளிட்டஸ் அவர்களின் வீட்டில் சாப்பிட்டோம். ஒரு வார காலத்திற்குப் பிறகு, சாம்பார் மற்றும் இரசம் உள்ளிட்ட இந்திய உணவு வகைகளை உண்டு மகிழ்ந்தோம். மாலை வேளையில், அரைவடிவ நிலாப் பூங்கா சென்றோம். அங்கே, பொதுமக்கள் பலர் ஒன்றுகூடி மாலை நேரத்தை மகிழ்வுடன் கழித்துக் கொண்டிந்தனர். வயதான தம்பதியினருக்கான நடனப் போட்டி ஒருபக்கம், இளம்பெண் ஒருவருக்கு வூசு கலையைக் கற்றுத் தரும் ஆசிரியர் மறுபக்கம், இசைக்கு ஏற்றவாறு நடனமாடும் பெண்கள் இன்னொரு பக்கம், நம்மூர் ஆடு-புலி ஆட்டம் போல ஒரு வகை சீன விளையாட்டை விளையாடும் சீன நண்பர்கள் பிறிதொரு பக்கம் என அங்கே வேறுபட்ட காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தோம். பின்னர், கிளிட்டஸ் மற்றும் பஷ்டூ மொழி நிபுணர் ஆகியோருடன் காலார நடந்து சென்று பழைய பாணியிலான காய்கறி அங்காடிகளைக் கண்டுவிட்டு திரும்பினோம்.
பெய்ஜிங்கிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார்.