

ஜுன் திங்கள் 26 ஆம் நாள், எங்கள் சீனப் பயணத்தின் ஏழாவது நாளாகும். கடந்த ஒரு வார காலமாக ஷாங்காய், வூஜென் மற்றும் நான்ஜிங் ஆகிய இடங்களில் தொடர்ந்து சுற்றுப் பயணம் மேற்கொண்டதால், திட்டப்படி இன்று எங்களுக்கு ஓய்வு நாள்தான். எனவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழ்ப்பிரிவின் முன்னாள் தலைவர் திரு.சுந்தரன் அவர்களின் இல்லத்திற்கு சென்றோம். தைவான் பாணி உணவு விடுதியில், இன்று மதிய விருந்தினை அவர் வழங்கினார். அங்கே நல்ல சுவையான உணவு வகைகளை வயிறார உண்டு மகிழ்தோம். மீண்டும் அவருடைய இல்லத்திற்கு திரும்பிய நாங்கள், விரைவில் தமிழ்ப்பிரிவில் பணியாற்ற இருக்கும், நிலாநி, இலக்கியா மற்றும் ஓவியா ஆகிய மாணவிகளுடன் நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தோம். தமிழ்மொழி மீது அவர்கள் காட்டிய ஆர்வம் எங்களுக்கு மனநிறைவை ஏற்படுத்தியது. பின்னர், திரு. சுந்தரனின் மூன்று திங்கள் வயதுடைய இரட்டையர்களாகப் பிறந்த இரு பேரக் குழந்தைகளை கண்டு களித்தோம். நாளை முதல், பெய்ஜிங்கின் சில முக்கிய காட்சியிடங்களைக் கண்டுகளித்துவிட்டு, தொடர்ந்து செய்திகளை அறிவிப்போம்.
பெய்ஜிங்கிலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார்.