• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஜுலைத் திங்கள் முதலாம் நாள்
  2011-07-01 15:11:42  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுலைத் திங்கள் முதலாம் நாள், எங்களுடைய சீனப் பயணத்தின் 12வது நாளாகும். இன்று காலையில் சீன வானொலி நிலையத்திற்குச் சென்றோம். அங்கிருந்து, சீன வானொலிக்குச் சொந்தமான பேருந்து மூலம், சீன வானொலிப் பணியாளர்கள் அனைவருடன் பெய்ஜிங்கின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் புகழ்பெற்ற உணவகமான இந்தியன் கிச்சன் என்னும் இடத்தை அடைந்தோம். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 90 ஆம் ஆண்டு நிறைவு விழா நாளில், சீன வானொலி நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து மதிய உணவை உண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர், தி இநது என்னும் இந்தியப் பத்திரிகையின் செய்தியாளருக்கு கூட்டாக பேட்டியளித்தோம். சீன வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்பதற்கான அடிப்படைக் காரணம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு உணர்வுபூர்வமாக பதில் வழங்கினோம். பிற்பகல், மீண்டும் சீன வானொலி நிலையத்திற்கு வந்து, சிறிது நேரம் நண்பர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தோம். பிறகு, தி.கலையரசி அவர்களுடன் பெய்ஜிங்கின் சில முக்கிய அங்காடிகளுக்குச் சென்றுவிட்டு திரும்பினோம்.

சீன வானொலி நிலையத்திலிருந்து எஸ்.செல்வம், எஸ்.பாண்டியராஜன் மற்றும் என்.பாலக்குமார்.

தொடர்புடைய செய்திகள்
வாசகரில் சேர்க்க
சிறப்புப் பகுதி
வாரச் சிறப்பு
நேயர் அரங்கம்
சீனாவின் திபெத்

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040