ஜுலைத் திங்கள் 8 ஆம் நாள் பிற்பகல் 2.30 மணிக்கு தமிழ்ப்பிரிவுத் தலைவர் தி.கலையரசி மற்றும் கலைமணி ஆகியோர் அன்புடன் வழியனுப்ப, பெய்ஜிங்கை விட்டு புறப்பட்ட நாங்கள், பாங்காக் நகரம் வழியாக இரவு 9.30 மணிக்கு இலங்கையின் தலைநகரான கொழும்பு வந்தடைந்தோம். கொழும்பின் கடற்கரைப் பகுதிகளுள் ஒன்றான நெகாம்போ என்னும் இடத்தில் அமைந்துள்ள கோல்டி சேண்ட் என்னும் விடுதியில் தங்கினோம். பின்னர், காலையில் விமானம் மூலம் பாதுகாப்பாக இன்று காலை 9.00 மணிக்கு சென்னை வந்தடைந்தோம். எங்கள் பயணம் பயனுள்ள முறையில் அமைய வேண்டும் என உளமார விரும்பிய நேயர்களுக்கும், முழுப் பயணத்திலும் எங்களுக்கு பெரும் உதவி செய்த சீன வானொலி தமிழ்ப்பிரிவு பணியாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பல்வேறு பணிச் சூழல்களுக்கிடையே அன்புடன் வழங்கிய உதவிகளையும் உபசரிப்பையும் எப்போதும் மறந்துவிட மாட்டோம். நன்றி.