சீன வானொலிச் செய்தியாளர்களின் திபெத் பயணம் தலைப்பில், பல மொழிகளிலும் பல்லூடகத்திலுமான பேரளவு அறிவிப்பு நடவடிக்கை 9ம் நாள் நிறைவடைந்தது.
இந்த நடவடிக்கை, திபெத் அமைதி விடுதலையின் 60வது ஆண்டு நிறைவு பற்றிய சீன வானொலியின் சிறப்பு அறிவிப்பு நடவடிக்கைளில் முக்கிய ஒன்றாகும். ஆகஸ்டு திங்கள் முதல் நாள் தொடக்கம், சீன வானொலியின் ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, ஹிந்தி, நேபாளம், தமிழ், வாங்களதேசம், செக் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 40க்கும் அதிகான சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இப்பணிப்பயணம் மேற்கொண்டுள்ளனர். திபெத் சமூகப் பொருளாதார வளர்ச்சி, தேசிய இனப் பண்பாடு, மதப் பாதுகாப்பு மற்றும் பரவல் ஆகிய அம்சங்கள் பற்றி, அவர்கள் பல்லூடகத்திலான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.